கிரிக்கெட் தவிர வேறேதும் விளையாட்டுகள் பக்கம் காரண காரியங்கள் இருந்தாலேயொழிய தலைவைத்துப் படுக்காதவன் ’கிரிக்கெட் தவிர’வில் எழுத வந்துள்ளேன்.

“பிரசவ வைராக்கியம், ஸ்மசான வைராக்கியம்” என்று ஏதேனும் கிரிக்கெட் ஊழல் நேரத்திலோ அல்லது வேறு ஆட்டம் ஏதோ ஒன்றில் எங்கேனும் யாரேனும் சாய்னா போல தப்பித் தவறி இந்தியாவில் எட்டிப் பார்க்கும் வேளையிலோ “கிரிக்கெட் என்னங்க பதினொரு முட்டாள்கள் கேம், டென்னிஸ் தெரியுமா. ஒரு தனி மனுஷன் மூணரை மணிநேரம் போராடினாத்தான் ஜெயிக்க முடியும். கால்பந்து? ஒரு இடத்துல ஒருத்தன் நிக்கற கதையில்ல, ஒண்ணரை மணி நேரமும் ஓடிகிட்டே இருக்கணும்? நம்மாளால முடியுமா? அதுதான் நம்மாளு கிரிக்கெட் பக்கம் ஒதுங்கிட்டான்” எனப் பேசிக்கொண்டே “கிரிக்கெட்டின் கடவுள் சச்சின் வாழ்க” என்று முழங்கி அவர் போஸ்டருக்கு பாலாபிஷேகம் செய்யும் கோடானுகோடியில் நானும் ஒருவன்.

எனினும் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டிகள் வரும் சமயங்களில், மொழி புரியாமலேயே ஹிந்தி படம் பார்ப்பதுபோல், டென்னிஸின் நுணுக்கங்கள் தெரியாமலேயே காலிறுதிக்குப் பின் அத்தனை ஆட்டங்களையும் பார்ப்பவன் நான். காரணம் என்னுடைய பதின்வயதின் தொடக்கத்தில் ஸ்டெப்பி, மோனிகா போன்றவர்கள் எனக்கு அழகிகளாகத் தெரிந்ததும், பதின்வயதின் உச்சத்தில் அன்னா கோர்னிகோவா போன்றவர்கள் ஆடிக் கொண்டிருந்ததும்தான்.

அப்படி ஆரம்பித்த கதை சாம்ப்ராசின் ஏஸ்’களால் ஈர்க்கப்பட்டும் அகாசியின் சர்விஸ் ரிடர்ன்களை ரசிக்கத் தொடங்கியும் செய்தபோது டென்னிஸ் ”விழியில் விழுந்து இதயம் நுழைந்து உயிரில் கலக்கத்தான்”, செய்தது. பெடரர்களும், நாடால்களும் உள்ளே புகுந்தும் கூட சாம்ப்ராஸ் சர்விஸ் எப்படி இருக்கும் தெரியுமா? ஆண்டாள் காண்டி சாம்ப்ராஸைப் பார்த்திருந்தால், “வெள்ளி மலை சாம்பிராஸுனு” தொடங்கி, “தாழாதே ராக்கெட் உதிர்த்த சர மழை போல்”-னு பாசுரம் பாடியிருப்பாங்க. அகாசியோட ஆக்ரோஷம் பாத்திருக்கியா? ”சீரிய சிங்கம் அறிவுற்று தீ விழித்து:-னு ஆண்டாள் இதைப் பற்றித்தான் பாடினாள் என்றொரு பதவுரை கூட சமீபத்தில் பதிப்பித்துள்ளனராம். என பழைய பல்லவி பேசியபடி உண்மையான டென்னிஸ் ரசிகர்களிடம் கொஞ்சம் நிறையவே குட்டுகள் வாங்கி ஆட்டத்தின் நுணுக்கங்களை சுமாரே சுமாராக அப்படியே கற்றுக் கொண்டாயிற்று.

முப்பதைக் கடந்தபின் கற்ற வித்தையை வைத்து ஆடுகளம் இறங்கி ஆடவா முடியும்? நமக்குத் தெரிந்த விஷயம் ஒன்று; அது இங்கிதமே பாராமல் அங்கிங்கெனாதபடி எங்கும் மொக்கை போடுவது. நமக்கென இப்போது கிடைத்த ஆடுகளமாம் “கிரிக்கெட் தவிர”வில் போடலாம் மொக்கை என இங்கேயும் புகுந்துள்ளோம்.

பதினான்கு நாள் திருவிழாவாக  ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் மெல்பர்னில் இதோ இன்று துவங்குகிறது. அவங்க அங்கே ஆடட்டும். நாம் இங்கே தினமும் ஆட்டங்களைக் கலந்தாய்வோம்.

பிரெஞ்சு, விம்பிள்டன் , அமெரிக்கன் ஓபன் என மூன்றையும் தொடர்ச்சியாக வென்றுவிட்டு ஆஸ்திரேலியன் ஒபனையும் வெல்ல நாடால் உள்புகுகிறார் என்பது நம்மில் பலர் அறிந்த சேதி. பைனல் ‘ல யாருங்க வேணும்? பெடரரா? 

ஆஸ்திரேலியன் ஓபெனில் முதல் முறையாக பங்கேற்கப் போகும் நம்மாளு சொம்தேவுக்கு முதல் சுற்றில் ஸ்பெயின் வீரர் ஒருவருடன் மோதல். பார்ப்போம் இந்த தபா தலை என்ன பண்ணுதுன்னு! லியாண்டர் மகேஷ் ஜோடி நீண்ட இடைவெளிக்குப் பின் ஆஸ்திரேலிய ஓபெனில் இணைகிறார்கள். எதிர்பார்ப்போம்.

ஊப்ஸ்! சானியாவை இந்த இந்தியா மறக்கலாம். நாம் மறக்கலாமா? அம்மையாரும் போராடி உள்ளே நுழைந்திருக்கிறார். அவருக்கும் “எதிர்பார்ப்போம்” என்று ஒரு கார்டு போட்டு வைப்போம். சானிய முதல் சுற்றில் சந்திக்கவிருப்பது யாருமில்லீங்க ஜஸ்ட் நம்ம முன்னாள் நம்பர் ஒன் ஜஸ்டின் ஹெனினை.

லலிதாராம், நட்பாஸ் போன்ற ஜாம்பவான் விமர்சகர்களுடன் இந்தத் தக்குனூன்டு பாண்டியம் கிரியும் இணைகிறேன். இந்த முறை ஆஸ்திரேலிய ஓபன் கவரேஜின் திருஷ்டியாக என்னை லலிதாராம் இங்கே இலவச இணைப்பாக இணைத்திருக்கிறார்.

இட்டபணியை இனிதே முடிப்பேன் என்ற வாக்குறுதியுடன்,
உங்கள் அன்பன்,
கிரி
Advertisements

அமெரிக்க ஓபன் நடந்த இரு வாரங்களிலும், பெரும்பாலான இரவுகளை ஆட்டங்களைக் கண்டே கழித்தேன்.

போரிஸ் பெக்கரின் தீவிர விசிறி நான். அவர் ஆடிய காலங்களில், அவரை ஜெயிக்கும் அகாஸியைக் கண்டால் வெறுப்பாயிருக்கும். ஆடிய ஆட்டங்களில் இரந்த முரண் போலவே, இரு ஆட்டக்காரர்களின் பெர்ஸனாலிடிகளுக்குள் இருந்த முரணும், எனக்கு அகாஸி மீதிருந்த வெறுப்பை அதிகரித்திருக்க வேண்டும்.

காலப் போக்கில், பெக்கர் ஓய்வு பெற்றுவிட, அகாஸி தொடர்ந்து ஆடிக் கொண்டிருந்தார். 1998-ல் உலக தர்வரிசையில் 50-க்குப் பின்னால் சென்றவர், மறு அவதாரமெடுத்துத் திரும்பினார். 1999-ல் ஃப்ரென்ச் ஓபனை வென்றூ, நான்கு கிராண்ட் ஸ்லாமையும் வென்ற வீரர்கள் பட்டியலுள் நுழைந்த போது என் எண்னங்கள் மாறத் துவங்கின. அவர் மீதிருந்து வெறுப்பை ஒதுக்கி அவரது ஆட்டத்தை ரசிக்க ஆரம்பித்தேன். டென்னிஸின் தள்ளாத வயதில் 2003-ல் ஆஸ்திரேலியன் ஓபனை வென்ற போது, அவருடைய விசிறியாகவே மாறி இருந்தேன். (அகாஸி தன் கடைசி கிராண்ட் ஸ்லாம் ஆட்டத்தில் B.Becker-இடம் தோற்றார். B for Boris அல்ல Benjamin:-) இது பொன்ற வெத்து டிரிவியாக்கள் ஆயிரக் கணக்கில் நினைவிருக்கின்றன. அவசியமானவைதான் மறக்கின்றன:-))

இதை ஏன் இப்போது சொல்கிறேன்? அப்படிப் பட்ட உணர்வுதான் எனக்கு நடால் மீதும் தொன்றுகிறது.

பெக்கருக்குப் பின் நான் மிகவும் சிலாகித்து பார்த்த ஆட்டக்காரர் ஃபெடரர்தான். தொடர்ந்து வெற்றிகள் பெற்று ‘sense of invincibility’-ஐ உருவாக்கி வைத்திருந்த ஃபெடரரை தரையிறக்க ஆரம்பித்தவர் நடால். இதனாலேயே எனக்கு இவர் மேல் வெறுப்பு. ஒரு விதத்தில், ஃபெடரரின் ஆட்டத்தின் கண்டிராத உயர் பரிமாணங்களை உலகுக்கு காட்டியவர் நடால்தான்.

களி மண் தரையில் நடால் கிங். புல்தரையிலோ ஃபெடரரை மிஞ்ச ஆளில்லை. ஒரு கட்டத்தில், தர்ந்து பல டோர்ணமெண்டுகளில் தொடர்ந்து நடாலுடன், களி மண் தரையிலேயே இறுதிப் போட்டியில் மொத்த் தோற்றுக் கொண்டிருந்தார் ஃபெடரர். அப்பொதெல்லாம், நடாலின் வெற்றிகளை புறங்கையால் ஒதுக்கிவிட்டு, எதிராளியை அவன் விரும்பும் களத்திலேயே மீண்டும் மீண்டும் மோதும் ஃபெடரரின் தைரியத்தை சிலாகித்ததே அதிகம்.

2007-ல் ஹாம்பர்க் ஓபனில் நடாலை களிமண் தரையில் ஃபெடரர் வீழ்த்திய பொது, என் சந்தோஷத்துக்கே அளவில்லை. எதிராளியைத் தவிடு பொடி ஆக்கிவிட வேண்டும் என்னும் ஆக்ரோஷம் நடாலிடம் கொப்பளித்துக் கொண்டே இருக்கும். சின்னச் சின்ன வெற்றிகளைக் கூட விஸ்தாரமாய் கொண்டாடும் இயல்பும் நடாலுக்கு உண்டு. கொலையே செய்தாலும் வலிக்காமல் செய்ய வேண்டும் என்னும் ஃபெடரரின் பாங்குக்கு நேர் எதிர் பாங்கு இது. இவையும் நடால் மேல் இருந்து வெறுப்பிற்கு எண்ணை ஊற்றியிருக்கலாம்.

ஃபெடரர் சாம்பிராஸின் 14 கிராண்ட் ஸ்லாமைத் தாண்டி, All time great, என்று போர்க் ஜாம்பவான்களாலேயே ஒப்புக் கொண்ட போது, என் பார்வையிலும் சில மாற்றங்கள் வர ஆரம்பித்தன.

ஃபெடரர் ரசிகன் என்பதை மீறி ஆட்டங்களை பார்க்க ஆரம்பித்தேன். 99.99% திருப்பி அனுப்ப முடியாத பந்துகளையும் நடால் தன் வேகத்தினால் அடைந்து, தொஇருப்பியனுப்பவதோடல்லாமல், எதிராளி திணரும் விதமாகவும் பந்தைச் செலுத்தும் பாங்கை எத்தனை முயன்றாலும் ரசிக்காமல் இருக்க முடியவில்லை.

பந்தை எதிர் கோர்ட்டுக்குள் அனுப்ப வெண்டும். நம் கோர்ட்டுக்குள் விழுந்ந்தால் எடுக்க வேண்டும். இவ்வளவுதான் ஆட்டம். சொல்வது சுலபம். செய்வது? நடாலுக்குச் சுலபமாய் முடிகிறது.

ஃபெடரரின் கோலோச்சுக்கு முக்கிய காரணம் அவர் உடல். இது வரை, பெரிய அளவில் எந்தக் காயமும் பட்டுக் கொள்ளாமல் உடலை வைத்திருந்த்தாலேயே இத்தனை பட்டங்களை வெல்ல முடிந்திருக்கிரது.

நடாலின் கதை வெறு. ஓட்டத்தை அதிகம் நம்பும் நடாலின் ஆட்டங்களில், உடல் தளர்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

2006-ல் அவருடைய பாதங்கள் பழுதடைந்த பொது, இனி அவரால் முன் போல ஓட முடியுமா என்ற சந்தேகம் எழுந்தது. 2009-ல் வந்த முட்டி கோளாரு, அவரை விம்பிள்டனில் ஆட விடாமல் செய்தது.

வீழ்ந்த பின் முன்னை விட வீர்யமாய் எழுவது தமிழ் சினிமாவில் சுலபம். டென்னிஸ் உலகில் துர்லபம். அதைச் செய்து காட்டிய நடாலின் மன உறுதி என்னை அவர் பக்கம் கொஞ்சம் கொஞ்சமாக இழுத்தது.

கால்களா குதிரைகளா என்று பிரித்தறிய முடியா வேகம்! மயங்காமல் என்ன செய்ய?

இந்த ஆண்டில், பிரெஞ்சு ஓபன், விம்பிள்டன், அமெரிக்க ஓபன், மூன்றையும் சுலபமாகவே வென்றுள்ளார். மூன்றும், மூன்று தளங்கள். ஒன்றில் சிறந்தவர்கள் மற்றதில் சோபிப்பது கடினம். உடல் உபாதை, எதிராளியின் சிறந்த ஃபார்ம், ஆட்டத்தில் பின் தங்கியிருத்தல் என்று பல கணங்களில் பல சோதனைகள். அத்தனையையும் மீறி 24 வயதுக்குள் 9 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றிருக்கிறார் நடால். அனைத்து கிராண்ட் ஸ்லாமுடன் சேர்த்து ஒலிம்பிக் தங்கப் பதக்கம் பெறுவதை கோல்டன் ஸ்லாம் என்று குறிப்பர். கோல்டன் ஸ்லாம் வென்ற அகாஸியுடன் இப்போது நடாலும் இணைந்துள்ளார். (ஃபெடரர் ரசிகர்கள், அவர் பெற்ற டபிள்ஸ் ஒலிம்பிக் தங்கத்தை எண்ணி சமாதானப்படுத்திக் கொள்ல வேண்டியதுதான்.)

வேறு வழியே இல்லை. நானும் ஒரு நடால் விசிறி என்று அறிவித்துவிட வேண்டியதுதான்.

Prince Nadal – Take a bow!

நடால் தவிர, இந்த ஆண்டு என்னை மிகவும் கவர்ந்த ஆட்டக்காரர் மோன்ஃபிஸ். இந்த பிரெஞ்சுக்காரர் ஆடுகையில் தெரியும் நளினம் அரியது. நடாலுக்கும், ஜோகோவிச்சுக்கும் ஈடு கொடுப்பது இவருக்குக் கஷ்டம்தான் எனினும், பார்ப்பதற்கு அற்புதமான ஆட்டம். எதிர்பாராத நெரத்தில் நெட்டுக்கு வருதல், கோர்ட்டின் முனையிலிருந்து டிராப் ஷாட் அடித்தல், எதிராளியின் தலைக்கு மேல் உயர்ந்திருக்கும் ராக்கெட்டின் முனையையை உரசியபடி லாப் ஷாட் அடித்தல் என்று பார்க்கப் பரவசமூட்டும் ஷாட்-கள் ஏராளமாய் ஆடுகிறார். இவரும், ராடிக்கை வீட்டுக்கு அனுப்பிய டிப்ஸரவிஷ்-ம் (Tipsarevic) ஆடிய ஆட்டம் பிரமாதமான கிளாசிக்.

‘Super mom’ க்ளைஜ்ஸ்டர்ஸ் போன வருட வெற்றி அதிர்ஷ்டத்தால் வந்ததல்ல என்று நிரூபித்துவிட்டார். முதல் சில ரவுண்டுகளில் கொஞ்சம் சொதப்பினாலும் எதிராளியை விட கம்மியாய் சொதப்பி வெற்றிக்குச் சேதம் வராமல் பார்த்துக் கொண்டார்.

1995-ல் ஸ்டெஃபி-செலஸ் ஃபைனலுக்குப் பின் நடந்த அனைத்து அமெரிக்க ஓபன் இறுதி ஆட்டங்களும், நெர் செட்களில் முடிந்துள்ளனவாம். இந்த வருடம் ஸ்வோனரேவா தோற்றார். பொதுவாகவே ‘Giant Killer’-களுக்கு ஒரு syndrome உண்டு. ஜெயித்தவுடன் ஆடும் அடுத்த ஆட்டத்தில் சொதப்புவார்கள். இம் முறை, நம்பர் 1 சீடிங் பெற்ற வொஸ்நியாகியை வென்ற ஸ்வோனரேவா இறுதிப் போட்டியில் க்ளைஜ்ஸ்டர்ஸுக்கு கஷ்டம் கொடுக்காமல் தோற்றுப் போனார். கடந்த சில வருடங்களில் சோடர்லிங்கும் சில போட்டிகளில் இப்படிச் செய்துள்ளார்.

This might be the most I’ve ever wanted Kim Clijsters to lose serve. She’s such a great person, but this is difficult to watch right now.”

இது one-sided ஆட்டத்தைப் பார்த்த மெக்கன்ரோவின் கமெண்ட்:-)

2005-ல் பட்டம் வென்ற Clijsters, அடுத்த மூன்றாண்டுகளில் டென்னிஸ் ஆடாமல் குடும்ப வாழ்க்கையில் கவனம் செலுத்தினார். 2009-ல் திரும்பிய இவர், விட்ட இடத்திலிருந்து தொடர்வது பெரும் ஆச்சர்யம். ஸ்வோனரேவா Clijsters-ஐ விம்பிள்டனில் வென்றவர். இம் முறை நேர் செட்டில் வென்றது fitting revenge.

This win partly repeats history and mostly creates one!

எக்கெச்சக்கமாய் காற்றடித்த இந்த அமரிக்க ஓபனில் பொதுவாக பெண்கள் பிரிவு ஆட்டங்கள் சுமாராகவே அமைந்தன. காற்றடிக்கும் போது சர்வீஸை பாக்ஸுக்குள் போடவே, பலர் திணறினர்.

ஐந்தாவது செட்டிலும் அமெரிக்க ஓபனில் டை பிரேக்கர் எதற்கு என்று விளங்கவில்லை.

இந்திய பாகிஸ்தான் ஜோடியான போபன்னா குரேஷி ஜோடி, இரட்டையர் பிரிவில் இறுதி ஆட்டம் வரை முன்னேறி பலரை ஆச்சர்யப்படுத்தியுள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் இவர்கள் ஆட்டங்களையும் பார்க்க வேண்டுக்ம் என்று நினைத்துக் கொண்டேன்.

இந்த வருடத்தில் இனி மாஸ்டர்ஸ் கப் மட்டும்தான் பாக்கி. அதையும் நடால் வெல்வாரா? ஃபெடரருக்கு இது மோசமான வருடம் என்பதோடு சரியா, அல்லது அவரது கிராண்ட் ஸ்லாம் வெற்றிகளை நாம் பார்க்கப் போவதில்லையா? போர்க் போல அதிகம் அடி படாமல் ஓய்வு பெறுவாரா? அல்லது மெக்கன்ரோ, கானர்ஸ் போல, தோற்றாலும் பரவாயில்லை என்று, பல வருடங்கள் ஆடுவாரா?

இப்படிப் பல கேள்விகள். பொறுத்திருந்த பார்ப்போம்.

அதுவரை ஃபெடரர் பெரியாளா, நடால் பெரியாளா என்று இவர் தொடங்கி வைத்திருக்கும் debate-ஐ தொடர்வோம்.