நிகழும் காமன்வெல்த் போட்டிகளில் ஆஸ்திரேலியா நேற்றைய போட்டிகளின் முடிவில் 143 பதக்கங்களை வென்று முதலிடத்தில் இருப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். ஆனால் அவர்களின் வெற்றி யாரால் கிடைத்தது என்பதைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது.

ஆஸ்திரேலியா சார்பில் இந்த ஆட்டங்களில் பங்கேற்கும் 369 பேரில் 55 பேர் 28 வெவ்வேறு நாடுகளிலிருந்து வந்து ஆஸ்திரேலியாவில் குடியேறியவர்கள். இவர்கள்தான் ஆஸ்திரேலியா வென்ற 143 பதக்கங்களில் 55ஐ ஜெயித்துக் கொடுத்திருக்கிறார்கள். இது இன்றுவரை. போட்டிகளின் முடிவில் எவ்வளவு இருக்கும் என்று தெரியாது.

அகதிகளாகவும் பிழைப்புக்காகவும் இவர்கள் ஆஸ்திரேலியாவில் குடியேறி இருக்கிறார்கள். கீழே காணும் உலக வரைபடத்தைப் பாருங்கள். பச்சை சாயம் பூசப்பட்ட தேசங்களைச் சேர்ந்தவர்கள்தான் வந்தேறிகள்.

நன்றி 29Travels Travel Map Generator

இனவாத தேசம் என்று ஆஸ்திரேலியாவை நமது தொலைக்காட்சியிலும் பத்திரிக்கைகளிலும் கிழிகிழியென்று கிழிக்கிறோம். ஆனால் எத்தனை படுத்தினாலும் அவர்களாவது பன்னாட்டு குடிமக்களின் அருமை பெருமை தெரிந்து அவர்களைத் தங்கள் நாட்டுக்குள் சேர்த்து, வசதி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து வாழ வழி செய்து திறமை உள்ளவர்களுக்கு ஊக்கமும் கொடுத்து அவர்களை சாதனையாளர்களாக மாற்றுகிறார்கள்.

இந்தியாவில் இது போன்ற ஒரு நிலையை நினைத்துப் பார்க்க முடியுமா? காசு கொடுத்து கூட்டி வர வேண்டாமய்யா, வேறு வழியில்லாமல் திபெத், இலங்கை, பங்களா தேஷ் போன்ற தேசங்களிலிருந்து இங்கு நிறைய பேர் வந்திருக்கிறார்களே, அவர்களையாவது கை தூக்கி விட்டால் இந்தியர்கள் ஆஸ்திரேலியாவை நிறவெறி, இனவாத அரசு என்று திட்டுவதில் அர்த்தமிருக்கும்.

செய்தி இங்கே- டைம்ஸ் ஆப் இந்தியா பக்கம் 18, சென்னைப் பதிப்பு.

நாங்க எதையுமே ஜெயிக்காட்டியும் பரவாயில்லை,  ஆஸ்திரேலியா மாதிரி போங்காட்டம் ஆட மாட்டோம்.  இந்தியென்டா!

– நாட்பாஸ்

லலிதா ராமின் பி.கு: இங்கு பச்சை, மஞ்சம், நீலம் என்று எந்தக் கலர் பெயிண்ட் அடித்தபடி பஞ்ச் டயலாக் வந்தாலும், அதை எழுதுபவர், பதிவை எழுதபவரேதான் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்;-)

Advertisements