சிலர் தலைப்பைப் பார்த்து நகைக்கக் கூடும். நமக்குத் தெரியாமல் 4-5 நாட்கல் ஓடிவிட்டனவா என்று நாள்காட்டியைப் பார்க்கக் கூடும்.

இல்லை. இன்னும் ஞாயிற்றுக் கிழமை வரவில்லை. ஆனால் விம்பிள்டன் முடிவடைந்துவிட்டது.

புரியவில்லையா? ஃபெடரர்தானே விம்பிள்டன்? அவர் போன பிறகு எவன் ஜெயித்தால் என்ன?  தோற்றால் என்ன?

ஃபெடரருக்கும் வயது ஏறிக் கொண்டுதான் போகிறது. குடும்பம் குழந்தை என்று ஆன பின் முழு கவனமும் ஆட்டத்திலே இருப்பதும் கடினம்தான். இப்போது ஜெயிக்காமல் போனால்தான் என்ன முழுகிப் போகிறது.

பாவம் சாம்பிராஸூம்தான் ஒரு ரிக்கார்டை வைத்துக் கொண்டு போகட்டுமே.

போர்க்கைப் போல ரிடையர் ஆக மாட்டார் ஃபெடரர் என்றே நினைக்கிறேன். ஆனாலும் பரவாயில்லை.

1996-க் கிராசிஜெக்குடன் தோற்ற பின்னும் மீண்டு வந்து பட்டங்கள் வென்ற சாம்பிராஸைப் போல ஃபெடரர் elusive ஏழாவது விம்பிள்டனை வென்றாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

அடுத்த ஆண்டு பார்க்கலாம்.

Advertisements