நேற்று கால்பந்து களேபரத்தில் அதிகம் டென்னிஸ் பார்க்க முடியவில்லை (போதாக் குறௌக்கு அபீஸுக்கு வேறு போய்த் தொலைய வேண்டியிருக்கு.)

நான் பார்ப்பதற்குள் ஃபெடரர் நேர் செட்டில் ஜெயித்துப் போய்விட்டார்.

பார்க்க வேணும் என்று நினைத்திருந்த Henin-Clijsters ஆட்டமும் முடிந்துவிட்டது. 3 செட்டுகள் நடந்த ஆட்டத்தில் Clilsters  வென்று ,முன்னேறி இருக்கிறார்.

Djokovic-ம் ஹெவிட்டும் மோதிக் கொண்டிருந்தனர். இந்த விம்பில்டனில் நான் பார்க்கும் ஆட்டங்கள் பெரும்பானவற்றில் இஞ்சரி டைம் அவுட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு வலித்தாலும் ஆடியாக வேண்டும் என்ற வெறியை விம்பில்டன் போன்ற போட்டிகள்தான் கொடுக்க முடியும்.

போன ரவுண்டில் நடால் Petzscner-க்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் முனையில் இருந்தார். இருவரும் பிரமாதமாக ஆடி வந்த போதும் மூன்றாவது செட்டின் முடிவில் ஆட்டம் Petzscner பக்கம் சாய்ந்தது உறுதி. மொமெண்டம் தடை படும் என்பதற்காகவே நடால் இஞ்சரி டைம் அவுட் எடுத்துக் கொண்டதாகத் தோன்றுகிறது. நடால் அந்த பிரேக்குக்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரிதான் ஓடினார். இன்னும் சொல்லப் போனால் அந்த பிரேக்குக்குப் பின்தான் அதிகம் ஓடி முக்கியமான் பாயிண்டுகளை அள்ளினார். நிஜமாகவே நடாலுக்கு இஞ்சரியா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். பிரேக்குக்குப் பின் Petzscner கவனத்தை இழந்ததால் நடால் பிழைத்தார்.

நேற்று Djokovic இஞ்சரி டைம் அவுட் எடுத்துக் கொண்டார்.  Djokovic 2 செட் முன்னிலையில் இருந்தாலும் ஹெவிட் தளராமல் ஆடினார். மூன்றாம் செட்டை ஹெவிட் ஜெயித்ததும் ஆட்டம் சுவாரஸ்யமானது. நான்காவதில் இருவரும் இம்மி அளவு கூட விட்டுக் கொடுக்காமல் ஆட, இறுதியில் டபிள் ஃபால்ட் ஒன்றினால் பிரேக்கைக் கொடுத்து Djokovic ஜெயிக்க வழி செய்தார் ஹெவிட்.

Djovic-ன் இஞ்சரியைப் பற்றி, “He always has something or the other.”, என்றிருக்கிறார் கடுப்பான ஹெவிட். ஆட்டம் தன் வசமிருந்து செல்லும் போது இஞ்சரி டைமை உபயோகிப்பதை ஒரு யுக்தியாகவே செய்யலாம் என்று கோச்சிங் புத்தகங்களில் கூடிய விரைவில் வந்திவிடும்.

பெரும் தலைகள் எல்லாம் மசாலா பட ஹீரோகள் போல தோற்பது போலத் பாவ்லா காட்டி இறுதியில் ஜெயித்து விடுவதே இந்த விம்பிள்டனின் டிரெண்டாக உள்லது. சமீபத்தில் ஸ்டாரான ஸோடர்லிங்கும் ஐந்து செட்டில் டேவிட் ஃபெரரை ஜெயித்து இக் கூற்றை உண்மையாக்கினார். அடுத்த ரவுண்டில் நடாலுடன் மோதுகிறார். பிரெஞ்சு ஓபனில், அப்போது உலக நம்பர் 1-ஆக இருந்த ஃபெடரரை வீட்டுக்கு அனுப்பியவர் இவர். அதே போல, இப்போதைய உலக நம்பர் 1-ஆன நடாலை தோற்கடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல வருடங்கள் நடால் கோலோச்சிய பிரஞ்சி களிமண்ணில் அவரை போன ஆண்டு வீழ்த்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடால், ஃபெடரர், ஸோடர்லிங் போல போன வருடம் ஃபைனல் வரை வந்த அமெரிக்கர் ராடிக்கும் வென்று விடுவார் என்று நினைத்தது தவறானது.

அந்தக் கால மைக்கேல் சாங் போல தோற்றமளிக்கும் Yen-Hsun Lu விடம் அதிர்ச்சி தோல்வியுற்றார் ராடிக். ஐந்தாவது செட் 9-7 வரை சென்றுள்ளது. ராடிக்கின் பலம் அவரது சர்விஸ். கடந்த இரு ஆண்டுகளில் சர்வீஸ் தவிரவும் தன் ஆட்டத்தை திறம்பட மாற்றிக் கொண்டுள்ளார் ராடிக். இருப்பினும் நேற்று ராடிக்கும் சர்விஸ் ரெடர்ன் ரொம்பவே சொதப்பியதாம். (பார்க்க முடியவில்லை. முர்ரே ஆட்டத்தையும், நடால் ஆட்டத்தையுமே ஸ்டாரில் ஒளிபரப்பினர்.)

Unseeded Asian கால் இறுதி வரை தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன் யாரும் இப்படி தகுதி பெற்றதுண்டா என்று தெரியவில்லை.

இனி வரும் ஒவ்வொரு நாளிலும் நிறைய நல்ல ஆட்டங்கள் காணக் கிடைக்கும்.

கால்பந்த்தும், மற்ற வேலைகளும் என்னைப் பார்க்க அனுமதிக்குமா என்பதுதான் கேள்வி.

Advertisements