Group H-ன் கடைசி இரு ஆட்டங்களுள் ஒன்றில் ஸ்பெயினும் சிலேவும் மோதுகின்றன.

ஸ்பெயின் வழக்கமாய் உலகக் கோப்பை என்றாலே தனது திறமையில் பாதிக்கும் குறைவாய் உபயோகித்து தோல்வியைத் தழுவும்.

2008-ல்தான் முதல் முறையாக உலக அரங்கில் ஸ்பெய்ன் வெற்றியைக் கண்டது. ஐரோப்பாவின் தற்போதைய சாம்பியன் ஸ்பெய்ன். டேவிட் வில்லா, ஃபாப்ரிகாஸ், டொரேஸ், காஸியாஸ், புயோல், Xavi, Iniesta என்று நட்சத்திர பட்டாளமே ஸ்பெயின் அணியில் உண்டு.

ஸ்விட்சர்லாந்துக்கு இரண்டு கோல் அடிக்க இன்னும் 3 நிமிடங்கள் உள்லன. ஆட்டத்தைப் பார்த்தால் ஹொண்டுராஸ் கோல் அடித்துவிடும் போலிருக்கிறது.

அர்ஜெண்டினாவுக்கு இணையான அணி என்று பலர் நினைத்திருந்த நேரத்தில், முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியுற்றது ஸ்பெய்ன். ஆட்டம் முழுவது அதிரடியாய் ஆடிய போதும் ஸ்விட்சர்லாந்தின் தற்காப்புக் கோட்டையை தகர்க்க முடியவில்லை. ஃபினிஷிங்கில் துல்லியம் இல்லாததால் தோற்றனர். அடுத்த ஆட்டத்தில் ஹொண்டுராஸை வென்றாலும் முதல் ரவுண்டிலேயே வெளியில் செல்லும் அபாயத்தில் இருக்கிறது ஸ்பெய்ன். இன்று ஜியித்தே ஆக வேண்டும். ஆட்டம் டிரா ஆகி, இன்னொரு ஆட்டத்தில் ஸ்விஸ் ஜெயித்தால், It is all over for Spain.

திறமையை முழுமையாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்குச் செல்வார்களா அல்லது Perennial Underachiever என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Qualification-ல் 10 வெற்றிகள் பெற்று, சிலே பிரேஸிலுக்கு அடுத்ததாக தென் அமெரிக்க பிரிவில் தேர்வானது. இதுவரை ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்றுள்ளது.

சிலேயின் ஆட்டத்தை opportunistic என்று சொல்லலாம்.  வாய்ப்பு கிடைக்கும் போது கோல் அடிப்பது அதே சமயத்தில் தற்காப்பை air tight-ஆக வைத்திருப்பது. இதுவே மேட்ச் ஸ்டிராடிஜி. அர்ஜெண்டினாவின் முன்னாள் கோச் மார்ஸெலோ பியஸ்லா இப்போதைய சிலே கோச்.  குரூப்பின் முதல் இடத்தில் சிலே இருந்தாலும் அடுத்த ரவுண்டுக்கு போகாமல் வெளியேறும் வாய்ப்பும் சிலேவுக்கு உண்டு.

ஸ்விட்சர்லாந்து ஹொடுராஸை ஜெயித்து, ஸ்பெயினும் சிலேவை ஜெயித்தால் மூன்று அணிகளும் தலா ஆறு புள்ளிகள் பெற்ரிருக்கும். அப்போது கோல் விகிதப்படு அடுத்த கட்ட முன்னேற்றம் நிரணயிக்கப்படும். இது வரை சிலே 2 கோல்கள்தான் அடித்துள்ளது. இன்று சிலே கோலே அடிக்காமல், ஸ்விட்சர்லாந்தோ ஹொண்டுராஸுக்கு எதிராக நிறைய கோலடித்துவிட்டால் சிலேவுக்கு சங்கடம்.  ஸ்பெய்ன் சுவிட்சர்லாந்திடம் தோற்றதற்கு ஸ்பெயினை விட சிலேவே அதிகம் வருந்தி இருக்கும்:-)

Itz anybody’s game. Let us see what happens!

ஃபாப்ரிகாஸுக்கு இன்றும் துவக்க அணியில் இடமில்லை. டொரேஸும், வில்லாவும் ஸ்டிரைக்கர்கள். Xavi-யும் அவருடம் பார்ஸிலோனாவுக்கு ஆடும் இனியெஸ்டாவும் மிட்ஃபீல்டர்கள் என்றாலும் அதிரடியாய் ஆடுபவர்.

ஸ்பெயின் இது வரை சிலேயிடம் தோற்றதே இல்லையாம். போன வாரம் வரை சுவிட்ஸர்லாந்திடம் கூடத்தான் தோற்றதில்லை. அதை வைத்து ஒன்றும் சொல்வதற்கில்லை.

கடந்த இரு ஆட்டங்களில் சிலே 5-2-3 ஃபார்மேஷனை உபயோகித்தது போலவே இன்றும் களமிறங்கியுள்ளது.

சிலேயின் playmaker Alexis Sanchez  மிட்ஃபீல்டைத் துளைத்து சிலே ஸ்டிரைக்கர்களுக்கு கோலடிக்க ஏதுவான களன் அமைத்துக் கொடுப்பதில் வல்லவர். ஸ்பெயின் இவரிடம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.

ஸ்பெயினின் தோல்விக்கு ஒரு காமடியான காரணமும் கூறப்படுகிறது. விவரம் இங்கே http://news.spreadit.org/sara-carbonero-iker-casillas-girlfriend/

ஆட்டம் தொடங்கிவிட்டது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சிலே தற்காப்பில் சொதப்பி கிட்டத்தட்ட டொரேஸ் கோல் அடித்துவிடுகிறார்.

முதல் எட்டு நிமிடங்கள் ஸ்பெயின் வசமே பந்து. இப்படித்தான் முதல் ஆட்டத்திலும் இருந்தது. பந்தை 75% நேரம் வைத்திருந்த போதும் ஸ்பெயினால் கோல் அடிக்க முடியவில்லை.

சிலேக்கு முதல் வாய்ப்பு. புயோலும் செர்ஜியோவும் சேர்ந்து சிலே வீரரைத் தள்ள பெனால்டி ஏரியவுக்கு வெளியில் ஃப்ரீ கிக்.  நேராக ஸ்பெயின் வீரல் காலில் அடிக்க வீணாகிறது.

11-வது நிமிடத்தில் சிலேவுக்கு பொன்னான வாய்ப்பு. பிரமாதமான மூவ். சிலே வீரர் Beausejour  முதலில் ஒரு டம்மி மூவ் மூலம் ஸ்பெயின் டிஃபென்சை தகர்த்து பந்தை கோலுக்கு 6 யார்ட் தூரத்தில் உள்ள Gonzalez இடம் அடிக்கிறார். அவர் சொதப்பு பந்து off target. A great chance missed.

Sanchez மாயம் புரிகிறார். பாக்ஸின் முனையிலிருந்து பந்தை சிப் செய்ய கோல்கீப்பர் விழிப்பாய் இருந்ததால் தட்டிவிடுகிறார்.

முதல் எட்டு நிமிடங்களுக்கு நேர்மாறாய் அடுத்த எட்டு நிமிடங்களை சிலே கட்டுப்படுத்தி, ஸ்பெயினை சங்கடத்துள் ஆழ்த்தியுள்ளது.

இதுவரை ஒரு மஞ்சள் அட்டை கூட வாங்காத ஒரே நாடு ஸ்பெயினாம். ”ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களோ? ”, என்று நினைக்கும் விதத்தில்தான் ஸ்பெயினின் ஆட்டம் அமைந்துள்ளது:-)

19 நிமிடங்களுக்குள் சிலேவுக்கு இரண்டு மஞ்சள் அட்டைகள். இருவருமே முன்னாலேயே மஞ்சள் அட்டை வாங்கியவர்கள் என்பதால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாது. அதிலும் Ponce செய்தது அராஜகம். டொரேஸை வேண்டுமென்றே அவரது பழுதான வலது காலில் எட்டி உதைத்தார்.

21-வது நிமிடத்தில் Estrada-வும் ரெஃப்ரீயின் புத்தகத்தில் இடம் பெறுகிறார்.

இவ்வளவு நன்றாக ஆடும் அணி ஏன் இத்தனை ஃபௌல் செய்ய வேண்டும் என்று புரியவில்லை.

What a Goooooooooooooaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaal!!!!!

சிலேயின் வீரர்கள் எல்லாம் ஸ்பெயினின் அரையில் இருக்க பந்து சிலே அரைக்குள் விரைகிறது, விரைந்து வந்த டொரேஸின் காலில் சிக்கினால் கோலுக்கும் அவருக்கும் இடையில் கோல்கீப்பர் ஒருவர்தான். அதனால், கோல்கீப்பர் பந்தை பெனல்டி ஏரியாவுக்கு வெளியில் வந்து கிளியர் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக பந்து டேவிட் வில்லாவிடம் செல்ல, 40 யார்ட் தொலைவில் இருந்து ஆளில்லா கோலை நோக்கி பந்தை துல்லியமாய் அடித்து 1-0 ஆக்குகிறார் வில்லா.

இந்த உலகக் கோப்பையில் leading goal scorer வரிசையில் சேர்ந்து கொள்கிறார் வில்லா.

34-வது நிமிடத்தில் இன்னொரு நல்ல சிலே முயற்சி. Spain defender Piquet தக்க சமயத்தில் குறுக்கே வர Beausejour கோலுக்கு சில செண்டிமீட்டர் வெளியே பந்தை அடிக்கிறார்.

It is 2-0!!!!!!!!!!!!!

Iniesta கோலின் இட முனையில் கோல்கீப்பருக்கு எட்டா வண்ணம் லாவகமாய் இரண்டாவது கோலை அடிக்கிறார்.  டேவிட் வில்லாவுக்கும் அவருக்கும் நடந்த exchange நச் சிம்ப்ல்ய் சுபெர்ப்! கோலுக்கான பில்டப்பின் போது டொரேஸ் வீழ்த்தப்படுகிறார். வீழ்த்திய Estrada ஏற்கெனவே மஞ்சள் அட்டை பெற்றவர். இன்னொரு மஞ்சள் அட்டை பெற்றதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறார். Estrada தடுக்குவிட்டது உண்மைதான் என்றாலும் டொரேஸின் reaction exaggerated என்றே தோன்றுகிறது. ரெஃப்ரீயின் இந்த முடிவு அதீதமான ஒன்று என்றே ரீப்ளேயைப் பார்க்கும் போது தோன்றுகிறது. பாவம் சிலே.

It is a 10 men chile against the rampaging Spaniards now!!!!!!

சுவிட்ஸர்லாந்து ஜெயிக்காமல் இருக்க சிலே ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கலாம்.

சிலே தளந்து காணப்படுகிறது. இடைவேளை அவர்களை நிதானப்படுத்தக் கூடும். 2-0 முன்னிலை பெற்ர போது கூட அணிகள் பலமுறை தோற்றதுண்டு. சிலே தளராமல் ஆட வேண்டும்.

மற்றொரு ஆட்டத்தில் ஸ்கோர் இன்னும் 0-0.

ஸ்கோர் விவரத்தைப் பார்த்தால் சிலே நன்றாக விளையாடவில்லை என்று தோன்றக் கூடும். ஆனால் statistics-ஐப் பார்த்தால் Shots on Goals, Shots on target, Posession ஆகியவை எல்லாம் இரு அணிகளுக்கும் சமமாகவே உள்ளன. சிலேஅதிர்ஷ்டமின்மையும், முரட்டு ஆட்டத்தால் கிடைத்த கலர் கலர் அட்டைகளுமே அவர்கள் பின்னடைவுக்குக் காரணம். முந்தைய ஆட்டங்களில் காணக் கிடைத்த ஊடுருவ முடியா தற்காப்பு இந்த ஆட்டத்தில் மிஸ்ஸிங்.

ஸ்பெயின் யூரோ சாம்பியன்கள் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடுகின்றனர். டொரேஸை வீழ்த்துவதிலேயே சிலே குறியாக இருப்பதால், மற்றவர்கள் சுலபமாக நகர்கின்றனர். ஸ்பெயின் அடித்த இரு கோல்களும் மணியானவை.

கோலைத் தவிரவும் ஃபுட்பாலை ரசிக்கவல்லவர் நீங்கள் எனில், ஆட்டத்தின் பல கணங்கள் தங்களை மகிழ்வித்திருக்கும்.

Half time-ல் இரண்டு சப்ஸ்டிடுயூஷன் சிலேக்கு. பதொனொரு பேரை பத்து பேரை வைத்தி ஈடு செய்வது பெரும் பா….oh itzzzzzzz a gooooooooooaaaaaaaaaaaaaaal for Chile. What a start for the second Half.

வந்து இரண்டு நிமிடங்களே ஆன Millar கோல் நோக்கி அடிக்க பந்து Piquet-ன் மேல் பட்டு கோல்கீப்ப்ரை ஏமாற்றுகிறது.

Just the kind of luck Chile needed.

இருக்கும் லீடை காப்பதா, இல்லை இன்னும் அதிகரிப்பதா என்று ஸ்பெயின் குழம்பும். அதை சரியாக சிலே பயன்படுத்திக் கொண்டால் இன்னொரு கோல் கூட அடிக்கலாம்.

55-வது நிமிடத்தில் டொரேஸுக்கு பதிலாக ஃபாப்ரிகாஸ் களமிறங்குகிறார்.

ஸ்விட்ஸர்லாந்து இன்னும் கோல் அடித்தபாடில்லை. மூன்று அணிகளும் எக்கச்செக்க டென்ஷனில் இருக்கும்.

இன்னும் 35 நிமிடத்தில் மூன்றில் ஒரு நாடு போட்டியை விட்டு வெளியேறும்.

இடைவேளைக்குப் பிறகு சிலே எச்சரிக்கையுடன் விளையாடுகிறது. இனியும் ஆளை வீழ்த்திக் கொண்டிருந்தால் அடுத்த ரவுண்டுக்கு போனாலும் பலர் ஆட முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஏற்கெனவே மூன்று பேர் அடுத்த ஆட்டத்தில் இடம் பெற முடியாத நிலையில் உள்ளனர்.

60-62 நிமிடங்களுக்குள் ஃபாப்ரிகாஸ் இரண்டு முறை டேவிட் வில்லாவுக்கு அற்புத பாஸை டிக்குள் அளிக்கிறார். பந்தை தன் வசப்படுத்த முடியாமல் இரு முறையும் தவறவிடுகிறார் வில்லா.

கடந்த ஐந்து நிமிடமாக பந்து சிலேவின் கோல் அருகிலேயே வலம் வருகிறது. வில்லாவின் முயற்சிகளை துல்லியமான தற்காப்பு தகர்க்கிறது. டி-க்குள் டிஃபெண்ட் செய்வதற்கு பெரும் சாமர்த்தியம் வேண்டும். கரணம் தப்பினாலும் எதிராளிக்கு பெனால்டியையோ கோலையோ கொடுத்துவிட முடியும். சிலே இதுவரை இரண்டாம் அரையில் துல்லியமாகவே தற்காக்கிறது.

65-வது நிமிடத்தில் சிலேயின் கடைசி substitution நிகழ்கிறது.  முதல் அரையில் கலக்கிய Sanchez வெளியேறுகிறார்.

இன்னொரு கோல் சிலே அடித்தால் அடுத்த ரவுண்டில் பிரேசிலுடன் மோதாமல் போர்ச்சுகலுடன் மோதலாம்.

இன்னும் 20 நிமிடங்கள் பாக்கி. ஸ்விட்ஸர்லாந்து இன்னும் கோலடிக்கவில்லை.

சிலே முழ்நேர தற்காப்பில் இறங்கிவிட்டது.

இரு அணிகளுக்கும் 2-1 என்ற முடிவு பெரும் பாதகத்தை விளைவிக்காது என்பதால், இரு அணிகளும்ற், ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்தபடி, நிதானமாய் ஆடுகின்றன.  ஸ்பெயினுக்கு கோல் அடிப்பதைவிட கோல் விடாமல் இருப்பதுதான் இந் நேரத்தில் முக்கியம்.

பத்து பேரை வைத்துக் கொண்டும் சிலே லாவகமாய் ஆடுகிறது.

சிவிஸ் இரண்டு கோல் போடுமா? ஸ்பெயின் ஒரு கோலைக் கோட்டை விடுமா? ஸ்பெயின் இன்னொரு கோல் போட்டு சிலேவை திண்டாட்டத்தில் ஆழ்த்துமா?

எதுவானாலும் செய்ய இன்னும் 8 நிமிடங்கள்தான் உள்ளன.

இரு அணிகளும் நேரத்தைக் கடத்துகின்றன. யாரேனும் ஒருவர் பெரும் தவறை இழைக்காவிட்டால் ஸ்கோர் 2-1-லிருந்து மாறப் போவதில்லை.

கடைசி 90 வினாடிகள் பாக்கியிருக்கும் போது ஸ்விஸ் வீரரின் ஹெட்டர் நேராக ஹொண்டுராஸ் கீப்பர் கையில் போய் விழுகிறது. That, probably was the last bus  missed.

It is all over.

ஸ்பெயின் தனது குரூப்பில் முதல் இடம் பெறுகிறது. சிலேயும் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகிறது.

போன உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜில் சுலபமாக வென்ற ஸ்பெயின் இரண்டாவது ரவுண்டில் அதுவரை தடுமாறிக் கொண்டிருந்த ஃபிரான்ஸிடம் தோற்றது.  இம்முறை அதற்கு ரிவர்ஸாக நடக்குமா பார்ப்போம். முதல் ஆட்ட சறுக்கலுக்குப் பின் ஸ்பயினின் ஆட்டம் சிறப்பாகவே உள்லது. போர்ச்சுகலுடனான ஆட்டத்தில் ஸ்பெயின் வெவத்ற்கான வாய்ப்பே அதிகம்.

சிலே பிரேசிலுடன் மோதுகிறது. இவர்கள் அடிக்கடி மோதியவர்கள்தான். On their day, சிலெ வெல்லக் கூடும். ஆனால் மூன்று ஆட்டக்காரர்களை அடுத்த ஆட்டத்தில் சிலே உபயோகிக்க முடியாது. சிலேவுக்கு அது பெரிய குறையாகத்தான் இருக்கும்.

Alrighty.

It was a Great game overall.

Thanks again for being here. Good night!

Advertisements