Match of the first round என்று சொல்லத்தகும் ஆட்டம் இன்று.

பிரேசில் அடுத்த சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. போர்ச்சுகல் போன ஆட்டத்தில் ஏழு கோல்கள் அடித்ததால் கிட்டத்தட்ட தகுதி பெற்றார் போலத்தான்.

துவக்க அணியில் பிரேசிலுக்கு ரொபினோ இல்லை. காகாவும் இன்று ஆட முடியாது. கோச் டுங்கா இரண்டாவது தர அணியைக் களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். நில்மாரும் ஃபாபியானோவும் ஸ்ட்ரைக்கர்கள். ஃபாபியானோ கையில் இன்றும் கடவுள் இறங்குவாரா?

இதுவரை ஆடாதவர்களுக்கு ஆட வாய்ப்பு என்றாலும் இரு அணிகளும் நிச்ச்சயம் ஜெயிக்கப் பார்க்கும்.

பிரேசில் முதல் ஆட்டத்தில் சுமாராக ஆடி இரண்டாவது ஆட்டத்தில் நன்றாக விளையாடியது. பழைய flair missing என்றாலும் effective-ஆக விளையாடுகிறது.

டியாகோ, டெக்கோ, ரொனால்டோ எல்லாரும் இருந்தும் போர்ச்சுகல் முதல் ஆட்டத்தில் சொதப்பியது. இரண்டாவது ஆட்டத்தில் கொரியாவை வறுத்தெடுத்து ஏழு கோல் போட்ட போதும், குரூப்பின் தலை அணி எனக் கருதும் அளவிற்கு ஆடவில்லை என்றுதான் தோன்றுகிறது.

2006-ல் நடந்த ஆட்டத்தில் பிரேசில் 6-2 என்று போர்ச்சுகலை வீழ்த்தியதை போர்ச்சுகல் மறந்திருக்காது. அதை சமன் செய்யவாவது வெறியுடன் ஆடும்.

பிரேசிலில் பிறந்த மூவர் போர்ச்சுகலுக்கு ஆடுகிறார்கள். பெப்பே, டெக்கோ இருவரும் பிரமாதமான ஆட்டக்காரர்கள். மூன்றாமவரான லிட்ஸன் விளையாடி நான் பார்த்ததில்லை. போர்ச்சுகலுக்கு அதிக அளவு பெற்றுத் தந்த கோச்சும் பிரேசில்காரர் ஸ்கொலாரிதான். 2002-ல் பிரேசிலை ஜெயிக்க வைத்த இவர் போர்ச்சுகலை 2004-ல் யூரோ கோப்பை இறுதி வரை இட்டுச் சென்றார். அதற்கு முக்கியக் காரணம், அவர் இறக்குமதி செய்த பிரேசில் ஆட்டக்காரர்களும்தான். (ஃபிகோ, கிரிஸ்டியானோ ரொனால்டோவும் அப்போது இருந்தனர்).

I’m all set for a cracker. Hope they don’t disappoint.

போர்ச்சுகல் காப்டன் ரொனால்டோவும் பிரேசில் காப்டனும் டாஸ் போட்டு முடித்தாயிற்று.  ஆட்டத்தை பிரேசில் தொடங்கும்.

முதல் முயற்சியே கார்னரில் முடிகிறது. இரண்ஆவது நிமிடத்தில் இரண்டாவது கார்னர்  பிரேசிலுக்கு.

இரண்டு கார்னரிலும் தேவையான trajectory இல்லை. சுலபமாய் தடுக்கிறது போர்ச்சுகல்.

மூன்றாவது நிமிடத்தில் கிரிஸ்டியான ரொனால்டோ முதன் முறையாய் பந்தை பிரேசில் அரைக்குள் கொண்டு செல்கிறார்.

பெப்பேயிடம் போன பாந்தை எடுக்க முயன்றி அவரைக் கீழே தள்ளுகிறார் ஃபாபியானோ. வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. எதிர்பார்த்தபடி பிரேசிலில் பிறந்த வீரருக்கும் பிரேசில் ஆட்டக்காரர்களுக்கும் இடையில் பொறி பறக்க ஆரம்பித்துவிட்டது.

முதல் எட்டு நிமிடங்களில் தடுத்தாடும் போது மட்டுமே பந்து போர்ச்சுகலிடத்தில் உள்ளது. பிரேசில் அதிரடியாய்த் தாக்குகிறது. ஃபாபியானோ, நில்மார், ஆல்வ்ஸ் அனைவரும் முனைப்புடன் தாக்குகின்றனர்.

பிரேசில் defense-ல்interception துல்லியமாய், கவுண்டர் அட்டாக் செய்ய வசதியாய் உள்ளது.

ஃபாபியானோ பெப்பே மோதல் தொடர்கிறது. ரெஃரீ ஃபாபியானோவை புக் செய்கிறார்.

18-வதி நிமிடத்தில் முதல் meaningful attack from the Portuguese. இடது விங்கில Meireles-ன் நல்ல ரன்னைத் தொடர்ந்து பந்தை டி-க்கு வெளியில் கோலுக்கு நேராக காத்திருக்கும் டியாகோவை நோக்கி கிராஸ் செய்ய, டியாகோ பந்து தரையில் படுமுன் கோலடிக்க முயல்கிறார். Shot off target.

பிரேசிலிலும் அர்ஜெண்டினாவிலும் ஃபிளேயர்கள் மரத்தில் காய்க்கிறார்கள் போலும். தலைமுறை தலைமுறையாய் அற்புத ஆட்டக்காரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.

Juan கையில் கடவுள் இறங்கியதால் மஞ்சள் அட்டை பெறுகிறார். ரொனால்டோவை குறி வைத்த நல்ல லாங் பாஸை கையால் தடுத்துள்ளார். ரெஃப்ரீக்கு நல்ல மூட். சில சமயம் இது போன்ற deliberate hand ball-க்கு ரெட் கார்டு கூட கிடைக்கும்.

நில்மார் ஸ்ட்ரைக்கர் என்றாலும் போர்ச்சுகல் வீரர்களுகு பின்னாலிருந்து வந்து பந்தைப் பிடிங்குவதில் வல்லவராயிருக்கிறார்.

முதல் அரையில் பாதி முடிந்துள்ள நிலையில் போர்ச்சுகல் ஒரு வழியாய் விழித்துக் கொண்டுள்ளது.

ஆல்வெஸ் ஒரு கார்னரைக் கூட ஒழுங்காக உதைக்கவில்லை.

30-வது நிமிடத்தில் முதல் shot on goal. ஃபாபியானோ பினல்டி பாக்ஸின் முனையில் இருந்து தனியாக விடப்பட்ட நில்மாருக்கு பாஸ் செய்ய, நில்மார் கோல் நோக்கி அடிக்கிறார். கோல்கீப்பரின் நல்ல ஸேவ் பந்தை திரிப்பினாலும், கோல்போஸ்டே பிரேசிலுக்கு கோலை மறுக்கிறது.

போர்ச்சுகலின் tackle கொஞ்சம் கரடுமுரடாய் இருக்கிறது. தொடர்ந்தால் ரெட் கார்டு நிச்சயம்.

மற்றொரு ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் 2-0 என்று முன்னணியில். இன்னும் 5-6 கோல் போட்டு போர்ச்சுகலும் தோற்றால் அவர்கள் அடுத்த சுற்றுக்குச் முன்னேறக் கூடும்.

39-வது நிமிடத்தில் இன்னொரு வாய்ப்பு.  Maicon-ன் துல்லியமான கிராஸை ஃபாபியானோவின் ஹெட்டர் தரையில் பட்டு ஃபார் போச்டுக்கு சற்றே வெளியே செல்கிறது.’

பெப்பேவுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டிய மஞ்சள் அட்டை இப்போது கிடைக்கிறது.

பிரேசில் இதுவரை பத்து shots on goal அடித்துள்ளது. போர்ச்சுகலோ 5 அடித்துள்ளது.

இஞ்சரி டைமில் இன்னொரு கார்னர் பிரேசிலுக்கு. கார்னரைத் தடுத்து போர்ச்சுகல் கவுண்டர் அட்டாக். டானியின் நல்ல ஓட்டம் பந்தை ரை விங்கில் இருக்கும் கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அளிக்கிறது. இன்னொரு லாங் ரேஞ்ச் முயற்சி வீணாகிறது.

It is half time and it is still 0-0.

பிரேஸிலுக்கு நில்மாரும், போர்ச்சுகலுக்கு கீப்பர் எடுவர்டோவும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.

இதுவரை 67% பொஸஷன் பிரேசிலிடம். போர்ச்சுகல் அடுத்த அரையிலும் இது போலவே ஆடினால் தோற்க வாய்ப்புகள் அதிகம்.

ஃபெலிபோ மெலோ பெப்பேயை பழி வாங்குகிறேன் பேர்வழி என்று மஞ்சள் அட்டை பெறுகிறார். Such tackles happen in ice hockey என்கிறார் commentator. இதனைக் கவனித்த பிரேசில் கோச் டுங்கா உடனே மெலோவை பெஞ்சுக்கு அழைக்கிறார். அவருக்கு பதிலாய் Josue.

இதுவரை ஆட்டத்தில் ஏழு மஞ்சள் அட்டைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.

ஐவரி கோஸ்ட் இன்னும் 5 கோல் போட்டு பிரேசில் 3 கோல் வித்தியாசத்தில் போர்ச்சுகலை வென்றால் போர்ச்சுகலும் போட்டியில் இருந்து வெளியேறும்.

ஹைலைட்ஸில் ஐவரி கோஸ்டில் இரண்டாவது கோலைக் காடீனார்கள். பினால்டி ஏரியாவுக்குள் வந்த பாலை டிரோபா வாங்கிய விதம் கிளாசிக். பிரமாதமான turn செய்து பந்தை அடித்தால் பந்து போஸ்டில் பட்டுத் தெரிக்கிறது. ரீபவுண்டில் வேறொருவர் கோல் அடிக்கிறார்.

இரண்டாவது பாதியில் ரொபினோ வந்தால் நன்றாக இருக்கும். ஆசை யாரை விட்டது:-)

இரண்டாவது பாதி தொடக்கத்துக்கு முன் கையை நிறைய ஆட்டி ஆட்டி ரெஃப்ரீயுடன் கதைக்கிறார் ரொனால்டோ.

Through ball வரும்போதெல்லாம் ரொனால்டோவின் சிறத்தைப் புலி விரட்டல் கண்கொள்ளாக் காட்சியாய் மலர்கிறது. 48-வது நிமிடத்தில் அப்படியொரு ஓட்டம் கோலாகாமல் பிரேசில் தற்காப்பாளர் தடுக்கிறார். பிரேசிலுக்கே கேப்டனாயிற்றே அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா என்ன?

இடைவேளை டென்ஷனைக் குறைத்திருக்க வேண்டும். இதுவரை கண்மூடித்தனமான tackle இல்லை என்று தட்டச்சும் போதே டியாகோ வீழ்த்தப்படுகிறார்.

பந்து சரியில்லை என்று பலர் முறையிடுவது சரிதான் போலும். நேற்று ஜப்பான் அடித்த கோல்களைத் தவிர, ஃப்ரீ கிக்கில் கோல் ஏதும் இதுவரை விழவில்லை. Banana kick இல்லையெனில் கால்பந்தின் சுவாரஸ்யம் கணிசமாகக் குறைகிறது.

First Portugal substituition. Duda-க்கு பதிலாக அனுபவசாலி Simao.

60-வது நிமிடத்தில்போர்ச்சுகலின்  பிரமாதமான முயற்சி . ரொனால்டு இன்னொரு முறை நாலு கால் பாய்ச்சலில் பிரேசில் வீரர்களை ஏய்த்த வண்ணம் கோல் நோக்கி வருகிறார். மீண்டு லூசியோ குறுக்கே வந்து தடுக்க பந்து கோலின் வலப்புறத்திலிருந்து இடப்புறத்துக்கு சொல்கிறது. பந்தை கோல்கீப்பருக்கு முன்னால் அடையும் Meireles  கோலுக்கு சில செண்டி மீட்டர்கள் தள்ளி அடிக்கிறார். அடித்த வேகத்தில் அவரருகில் இருக்கும் கோல்கீப்பரின் முதுகில் கால் பதிக்கிறார்.

ஜூலியோ சிஸார் வலியில் துடித்து பிரேசில் வயிற்றில் புளியைக் கரைக்கிறார். கோச் டுங்கா கவலையில். நல்ல காலம் சமாளித்துக் கொண்டிவிட்டார் கோல்கீப்பர். பெரிய அடியாய் இருந்தால் அது பிரேசிலுக்கு பெரும் நஷ்டம்.

இரண்டாம் பாதியில் போர்ச்சுகலின் கை ஓங்கியுள்ளது. முதல் பாதியில் தெரிந்த துல்லியமும் வேகமும் பிரேசிலிடம் தற்சமயம் மிஸ்ஸிங்.

ரொமாரியோ, பெபெடோ, ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ காலம் எல்லாம் மலையேறி போச்சு. பிரேசிலின் samba flair மருந்துக்கும் இல்லை. இன்னும் இரண்டு உலகக் கோப்பை கடந்தால் இவர்களும் ஜெர்மனி போல லாங் பாஸ் செய்து எதிரி அசரும் போது கோல் அடிப்பார்களாகயிருக்கும்.

டிராவானாலும் பரவாயில்லை என்ற இரு அணிகளும் ஆடுகின்றன. ஜெயித்தாக வேண்டும் என்ற வெறி இல்லை.

77-வது நிமிடத்தில் இன்னொரு half chance. ரொனால்டோவின் on-the-fly முயற்சி கோலுக்கு மேல் செல்கிறது.

டுங்கா பொறுமையிழந்தவராய் தெரிகிறார்.  Rightly so. கடுப்பு முற்றி ரொபினோவை அனுப்பினால் நன்றாக இருக்கும்:-)

பிரேசிலின் டிஃபன்ஸும் ஸ்ட்ரைகக்ர்களும் சிறப்பாக இருக்கும் அளவிற்கு மிட்ஃபீல்ட் சிறப்பாக இல்லை. ஸ்ட்ரைக்கர்களுக்கு சாதகமான களன்களை உருவாக்குவதில் தோல்வியே அடைந்திருக்கின்றனர். காகா போன்ற play maker is missed desperately.

Baptista-க்கு பதில் Remires. இவராவது மிட்ஃபீல்டை கலக்குவாரா?

கடைசி 5 நிமிடங்களுக்கு Grafite-க்கு வாய்ப்பளிக்கிறார் டுங்கா. ஃபாபியானோ பெஞ்சில்.

88-வது நிமிடத்தில் லூசியோவின் ஹெட்டர் நேராக கோல்கீப்பர் கைக்குச் செல்கிறது.

இறு அணிகளின் ஆட்டக்காரர்களும் மனதளவில் டிரா என்று முடிவு செய்துவிட்டதாய்த் தோன்றுகிறது.

ஐவரி கோஸ்ட் 3-0 என்று முன்னணியில். இஞ்சரி டைமில் ஆறு கோல் அடித்தால் அடுத்த சுற்றுக்குச் செல்லலாம்:-)

பிரேசில் இஞ்சரி டைம் ஐந்து நிமிடத்தில் ஆறு கோல் போட்டாலும் ஐவரி கோஸ்ட் அடுத்டஹ் சுற்றுக்குச் செல்லும்:-)

Remires-ன் outside the penalty box-ல் இருந்து செய்யப்பட்ட முயற்சி போர்ச்சுகல் வீரர் மேல் பட்டு கோல் நோக்கி பறக்க, கோல்கீப்பரும் பறந்து acrobatic save செய்கிறார்.

கடைசி இரண்டு நிமிடங்கள்.  பிரேசில் தற்காப்பில் பெனால்டி பாக்ஸில் தவறீழைக்க டானி கோலடிக்க விரைகிறார். கோல்கீப்பர் விழ, டானி விழ, பந்து சமர்த்தாய் வெளியே செல்கிறது.

கோலடிக்க கடைசி வாய்ப்பு. போர்ச்சுகலுக்கு கார்னர். பிரேசில் வீரர் தலையால் பந்தைபெனால்டி பாக்ஸிலிருந்து வெளியேற்றுகிறார்.

It is all over. Brazil tops the group.

இதுவரை போர்ச்சுகலுக்கு எதிராக யாரும் கோலடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

இடைவேளையின் போது, “ஆணியே புடுங்க வேண்டாம். இன்னொரு கார்டை வாங்கி அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாமல் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்று அணியின் கோச்களும் சொல்லியிருக்க வேண்டும். இரண்டாவது அரையில் ஒரு மஞ்ச்ள் அட்டை கூட இல்லை.

கடைசி குரூப்பில் கடைசி இரு ஆட்டங்கள் நள்ளிரவில். சாம்பியன் ஆகும் என்று நினைத்த ஸ்பெய்ன் வெளியிறவும் வாய்ப்புண்டு.

ஸ்விட்சர்லாந்து, சிலி, ஸ்பெய்ன் மூன்றுமே ஜெயிக்கத்தான் பார்க்கும். பிரேசில்-போர்ச்சுகல் ஆட்டத்தை விட நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். இல்லையென்றால் மட்டும் பார்க்காமலா இருக்கப் போகிறோம்.

வேலை முடிந்து வந்ததில் இருந்து கொலை பசி. முதலில் அதைப் பார்க்கிறேன்.

பதிவினைத் தொடரும் அனைவருக்கும் நன்றி. (என்னமோ ஆயிரக் கணக்குல படிக்கிறா மாதிரி இந்த டயலாக் வேற:-))