வீட்டுக்கு வருவதற்குள் 70 நிமிடங்கள் ஆட்டம் ஓவர்.

ஸ்லோவாகியா முன்னணியில். 1-0.

நான் தட்டச்சும் வேளையில் இன்னொரு கோல். It is 2-0. Clinical Close range Goal.

இத்தாலி இன்னும் 18 நிமிடங்கள்தான் உலகச் சாம்பியன்.

இத்தாலியின் சாம்பியன் வாழ்க்கையில் கடைசி 3 நிமிடங்கள்.

கோச் மார்ஸெல்லோ லிப்பியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.

ஸ்லோவாகியா ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து நேரத்தைக் கடத்தி வெறுப்பேற்றுகிறார். Itz adding insult to injury! I’m luvin it:-)

எனக்கு பிடிக்காது அணிகளுள் இத்தாலிக்கு முதல் இடம்.

தற்காப்பு மட்டுமே ஆடும் மொக்கை கேம்.

என்ன செய்தாலும் தப்பி நம்மை எரிச்சலூட்டும் கரப்பான்பூச்சி போல் எதோ செய்து முன்னேறுவதே இவ்வணியின் தனிச் சிறப்பு.

இவர்கள் வீழ்வதால் உலகக் கோப்பையில் சுவாரஸ்யம் கூடும்.

81-வது நிமிடிடத்தில் டி நாடாலே இத்தாலிக்கு கோலடிக்கிறார். நல்ல கோல்.

கோல் அடித்தது ஆனதும் பாலை எடுக்க ஸ்லோவாக்கிய கோல்கீப்பரருக்கும் கொண்டாட நினைக்கும் இத்தாலிய வீரருக்கும் போட்டி கிட்டத்டஹ்ட்ட கைகலப்பில் முடிகிறது. கோல்கீப்பர் கை மேலே பட்டதற்கே இருபுக் கட்டையால் மண்டையால் அடித்தது போல ரியாக்‌ஷன் கொடுக்கிறார் இத்தாலிய வீரர். ரெஃப்ரீ இருவரையும் புக் செய்கிறார்.

இத்தாலிக்கு கரப்பான்பூச்சி மச்சம் மீண்டும் வேலை செய்யுமா?

Goooooooooooooaaaaaaaaaaaaaal!

Well….almost.

குவாகியரெல்லா பந்தை வலையில் தள்ளி கொண்டாடப் போகும் முன், லைன்ஸ்மென் அவரை ஆஃப்சைட் என்று அறிவித்து கோலை ரத்து செய்கிறார்.

இத்தாலி வீரர்கள் பரபரப்பில் நன்றாக விளையாடுகிறார்கள். ஸ்லோவாகிய வீரர்களும் பரபரப்பாக ஆடுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு பாதகமாய் அமைகிறது.

This is a cracker of a game.

இத்தாலியர்கள் எல்லாம் கோல் அடிப்பதில் முனைப்பாக இருக்க டிஃபென்ஸில் ஆளில்லை. இத்தாலி காப்டன் காலிப் பெருங்காய டப்பா. போன உலகக் கோப்பையில் அவரைத் தாண்டி பந்து செல்லா வண்ணம் பெருஞ்சுவராய் இருந்தார். இந்த வருடம் தூணாய் மாறி வேடிக்கை பார்க்கிறார்.  டிஃபெண்டர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க, முன்னே வந்த கோல்கீப்பரின் தலைக்கும் மேல் லாவகமாய் பந்தைச் செலுத்தி 3-1 என்று ஸ்கோரை ஆக்குகிறார் கோபுனெக்.

இஞ்சரி டைமில் இத்தாலி இன்னொரு கோல் அடிக்கிறது. இன்னும் 2 நிமிடங்கள். இத்தாலி சமன் செய்யுமா?

குவாக்லியரெல்லாவின் கோல் டி-க்கு வெளியில் இருந்து கோலின் மேல் முனையில் சென்று வீழ்ந்தது.  பிர்ஷர் சிசுவேஷனில் அற்புதமான கோல்.

கடைசி நிமிடம். ஸ்லோவாகிய ஆளை மாற்றி நேரத்தை வீணாக்க முயல்கிறது.

இத்தாலிக்கு கடைஈஈஈஈஈஈஈஈசி வாய்ப்பு.

throw-in டி-வரை வருகிறது. தலையால் பந்தைத் திருப்ப, பெப்பெ துல்லியமாய் தட்டினால் 3-3 ஆகிவிடும். பெப்பேவுக்கு பெப்பே என்றுவிட்டார் ஸ்லோவாக்கிய தற்காப்பாளர்.

It is all over for Italy.

Good bye Ex-Champs!!!!!!!!!!!!

பராகுவேயும் ஸ்லோவாகியாவும் அடுத்த சுற்றுக்குள் நுழைகின்றன.

நியூசிலாந்து பாவம். ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் வெளியேறுகிறது. (ஒரு ஆட்டத்திலும் ஜெயிக்கவில்லை என்பது வேறு விஷயம்)

ஃபுட்பாலைப் பார்த்திவிட்டு சானலை மாற்றினால் நியோவில் இந்தியா ஆடுகிறது. ஒரு பந்துக்கும் இன்னொரு பந்துக்கும் இவ்வளவு நேரமா? ஏன் இந்த ஆட்டம் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது என்று தோன்றுகிறது. :-):-)

Advertisements