தலைப்பு வினோதமாக இருக்கலாம். ஆனால் உண்மை.

விம்பிள்டனில் ஆட்டங்கள் பொதுவாக 2-3 மணி நேரங்களுக்குச் செல்லும். மிஞ்சினால் 4 மணி நேரம் கூட போகும்.

ஆனால் ஏழு மணி நேரம் தாண்டியும் ஆட்டம் நடந்தால் அதை மாரத்த்தான் என்றுதானே கூற முடியும்?

பிரான்ஸில் மஹூட்டும் அமெரிக்காவின் ஐனரும் ஐந்தாவது செட்டை மட்டும் ஐந்து மணி நேரமாக ஆடிக் கொண்டிருக்கின்றனர்.  தற்போதைய ஸ்கோர் விவரப்படி ஐந்தாவது செட்டில் ஆளுக்கு 37 கேம்கள் வென்றுள்ளனர்.

ஆட்டத்தை யார் ஜெயித்தாலும் அடுத்த ரவுண்டில் தோற்பது உறுதி. இவ்வளவு நேரம் ஆடிய களைப்பிலிருந்து மீள்வதற்குள் அடுத்த விம்பிள்டன் வந்துவிடும்.

இன்றைக்குள் முடித்துவிட்டால் முடிவை தெரிவிக்கிறேன்:-)

அடுத்த ரவுண்டை அடுத்த பத்து நிமிடத்தில் ஆடச் சொல்வார்களோ? பாவம் ஐனர்:-)

அடுத்த ஆண்டு விம்பிள்டனில் இரு ஆட்டக்காரர்களையும் போட்டி தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே மோதவிட இருக்கிறார்களாம்.:-)