Preview:

குரூப் பி-யின் கடைசி ஆட்டங்கள் இன்று நள்ளிரவில்.

அர்ஜெண்டினா அடுத்த சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டது. Full Strength-ல் களமிறங்குமா தெரியவில்லை. மெஸ்ஸி விளையாடாவிடில் தூங்கச் சென்றுவிடுவேன். அனேகமாய் தெவேஸுக்கு ஓய்வு இருக்கும். Mascherano, Heinze இருவரும் ஏற்கெனவே மஞ்சள் அட்டை வாங்கியிருப்பதால் இந்த ஆட்டத்தில் பங்கு பெறாமல் இருப்பார்கள் என்று யூகிக்கிறேன். வெரோனுக்கு உடல்நிலை சரியாகியிருந்தால் இன்னொரு வாய்ப்பு வழங்கப்படலாம். நைஜீரியாவுடன் ஆடியது போல 4-4-2 formation-ல் இன்றும் அர்ஜெண்டினா களமிறங்கக் கூடும்.

Update: FIFA தளத்தின் படி வெரோன் ஆடுகிறார். மெஸ்ஸி காப்டன். மிலிட்டோவுக்கும் வாய்ப்பு. போன உலகக் கோப்பையில் மெக்சிகோவுக்கு எதிராக பிரமாதமான கோல் அடித்த ரோட்ரிகெஸுக்கும் வாய்ப்பு. தெவேஸுக்கு ஓய்வு. 4-3-3 Formation.

இன்னொரு ஆட்டத்தில் தென் கொரியா நைஜீரியாவுடன் மோதுகிறது. ஜெயித்தால் தென் கொரியா அடுத்த சுற்றுக்குச் செல்லலாம். கிரீஸ் அர்ஜெண்டினாவை வென்று தென் கொரியாவுக்கு பாதகம் விளைவிக்கும் என்று தோன்றவில்லை.

நைஜீரியா உணர்ச்சிவசப்படாமல் ஆடினால் கொரியாவை வீட்டுக்கு அனுப்பக் கூடும்.

அடுத்த அப்டேட் ஆட்டம் தொடங்கியதும்.

Update 2: வழக்கமான ஜெர்ஸியில் அர்ஜெண்டினா இல்லை. முழு நீல ஜெர்ஸி.

கிரீஸ் ஆட்டத்தைத் தொடங்குகிறது. மரடோனாவின் (வருங்கால) மருமகன் Aguero தொடக்க அணியில் இடம்பெற்றுள்ளார்.

2-ஆவது நிமிடத்தில் வெரோன் வீழ்த்தப்பட்டதால் அர்ஜெண்டினாவுக்கு ஃப்ரீ கிக். இந்த உலகக் கோப்பையில் இதுவரை ஒரு ஃப்ரீ கிக் கூட கோலாகவில்லை. Banana Free Kick காலம் எல்லாம் மலையேறிட்டதோ?

முதல் ஏழு நிமிடங்களில் பந்து கிறெக்கர்களிடம் இருக்க மறுக்கிறது. அர்ஜெண்டினாவுக்கு நல்ல தொடக்கம்.

10-ஆவது நிமிடத்தில் கிரேக்க டிராபிக் ஜாமை லாவகமாய் கடந்து மெஸ்ஸி மாயம் புரிகிறார்.

13-வது நிமிடத்தில் முதன் முறையாக கிரேக்கம் நல்ல மூவ் ஒன்றை ஆடுகிறது. அற்புதமான லாங் பாஸ்.  துணையில்லா ஃபார்போர்ட் வழியின்று பந்தை இழக்கிறார்.

18-வது நிமிடத்தில் முதன் முறையாய் shot on target. Aguero-வின் பிரமாதமான முயற்சி. பிட்ஸ்டாப்பை தாண்டிய ஃபார்முலா ஒன் வண்டி போல திடீரென வேகமெடுத்து கோல் நோக்கி அடிக்கிறார். கோல்கீப்பர் தடுக்கிறார். அர்ஜெண்டினாவுக்கு முதல் கார்னர். கார்னரை மெஸ்ஸி அடிக்க, வெரோன் கோல் நோக்கி பந்தை செலுத்துகிறார். மீண்டும் ஒரு முறை கோல்கீப்பர் பந்தை வெளியில் தட்டி கோலைக் காக்கிறார்.

கிரேக்கத்துக்கு தடுத்தாடவே நேரம் சரியாக இருக்கிறது. கோல் விடாமல் டஹ்டுத்து. எதிராளி எப்போதாவது அசரும் போது கோல் அடித்துக் கொள்ளலாம் என்று எண்ணம் போல. அப்படியும் நடக்கலாம்:-) யார் கண்டது. ஸ்பெய்ன் அப்படித்தானே ஸ்விசர்லாந்திடம் தோற்றது.

முதல் 25 நிமிடங்களில் 70% possession அர்ஜெண்டினாவிடம்!!!!

அத்தி பூத்தார்ப்போல் கிரேக்கத்தின் கவுண்டர் அட்டாக் 28-வது ந்மிடத்தில். பலனில்லை.

30-வது நிமிடத்தில் முதல் மஞ்சள் அட்டை. Aguero வீழ்த்தப்படுகிறார். Will we see a banana kick? Go Messsiiiiiiiiiiiii.

மெஸ்ஸி பாவ்லா காட்ட வெரோன் கிரேக்க சுவரில் அடிக்கிறார். இன்னொரு ஃபிரீ கிக் தண்டமாயிற்று.

33-வது நிமிடத்தில் இன்னொரு வாய்ப்பு. பெனிட்டோவில் கிராஸை கோல்கீப்பர் தட்டிவிட, பந்து Aguero-விடம் செல்கிறது. அற்புதமான defense கோலாகாமல் தடுக்கிறது.

உடனேயே இன்னொமொரு கவுண்டர் அட்டாக்.  இம்முறை சமராஸுக்கு நல்ல வாய்ப்பு. அர்ஜெண்டினா தற்காப்பாளர் Demechilis விழுந்து புரண்டு தடுக்கிறார்.

சமராஸ் பிரமாதமாய் ஆடுகிறார். விரைவில் ஒரு கோல் அடித்து கிரேக்கத்தை முன்னிலைப் படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

நைஜீரியா-கொரியா ஆட்டத்தில் இரு அணிகளும் தலா ஒரு கோல்.

முதல் பாதியின் கடைசி நிமிடத்தில் அர்ஜெண்டினாவிடமிருந்து மற்றொரு அட்டாக். ரொட்ரிகெஸின் full blooded drive-ஐ தடுக்கிறார் கோல்கீப்பர். பந்து மெஸ்ஸியிடம் செய்கிறது. மெஸ்ஸியின் dipping/curling shot-ஐ பிரம்ம பிரயத்னம் செய்து கோலுக்கு மேல் தட்டிவிடுகிறார் கோலி.

கிரேக்கம் நித்ய கண்டம் பூர்ண ஆயிசாக முதல் பகுதியை கடத்திவிட்டது. வேறெப்படியும் ஆட வழியிருப்பதாகத் தெரியவில்லை. அர்ஜெண்டினாவைத் தடுத்து, அசரும் போது அடிப்பதுதான் வழி. அடுத்த பாதியில் முதலில் கிரேக்கம் கோல் அடித்தால் ஆட்டம் சூடு பிடிக்கும்.  யார் யாரை மரடோனா Substitute செய்வார் என்று பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும்.

கிரேக்கத்துக்கு அடுத்த சுற்றுக்குச் செல்ல இன்னும் வாய்ப்பிருக்கிறது. ஒரு வேளை கிரேக்கம் ஜெயித்து சவுத் கொரியா நைஜீரியாவை தோற்கடிக்காமல் போனால் கிரேக்கம் இரண்டாவது சுற்றுள் நுழையும்.

First Half Stats:

Posession: Argentina 65%, Greece 35%.

Shots on Goal: Argentina 8, Greece 0

Shots on Target: Argentina 4, Greece 0

பாபடபௌலஸ், கட்ஸௌரனஸ் என்றெல்லாம் எப்படி பேர் வைக்கிறார்கள்:-)

நன்றாக ஆடிக் கொண்டிருந்த கிரேக்க காப்டனை நீக்கி (injury) இன்னொரு டிஃபெண்டரை கொண்டு வந்துள்ளார் கிரேக்க கோச்.  அடுத்த ரவுண்டுக்குப் போகாட்டியும் பரவாயில்லை. அர்ஜெண்டினா ஜெயிக்கக் கூடாது என்று நினைக்கிறார் போலும்.

மற்றுமொரு லாங் பாஸ். சமரஸுக்கு ஒன்னொரு வாய்ப்பு. மூன்று தடுப்பாளர்களும் சமராஸ் என்ன செய்யப்போகிறார் என்று பார்த்த வண்ணம் அவரை நிழலாகத் தொடர்கின்றனர். கோலுக்கு அருகில் சென்றதும் far post-ஐ நோக்கி பந்தை செலுத்த, பந்து கோலுக்கு வெளியில் செல்கிறது. நல்ல வாய்ப்பு நழுவிப் போனது. இது போன்ற இன்னொரு வாய்ப்பு கிடைப்பதரிது.

இரண்டு கிரேக்கர்கள் நடக்கவே முடியாமல் நொண்ட வழியில்லாமல் அனைத்து substitution-களையும் நிகழ்த்திவிடுகிறார் கிரேக்க கோச்.

கொரியா இன்னொரு கோல் அடுத்து முன்னணியில் உள்ளதை கிரேக்கர்களிடம் யாரேனும் கூற வேண்டும்.

63-வது நிமிடத்தில் டிமரியா எம்.ரோட்ரிகெஸுக்கு பதிலாக களத்தில் இறங்குகிறார்.

அர்ஜெண்டினாவிடம் பந்து இருந்துகொண்டே இருந்தாலும், கிரேக்கத்தின் தற்காப்பு இரண்டாம் பாதியில் ஸ்திரமாக இருக்கிறது. அர்ஜெண்டினாவை இனி வரும் ஆட்டங்களில் எதிர்கொள்ளும் அணிகளுக்கு இந்த ஆட்டம் சில பாடங்களை அளித்திருக்கும்.

69-வது நிமிடத்தில் இரண்டு அற்புதமான Saves by the Greek Goal-keeper.  முதலில் மெஸ்ஸியின் ஃப்ரீ கிக். பிறகு கார்னரில் வந்த கிராஸை பொலாட்டி பலம் கொண்ட மட்டும் அடிக்க, அதை முழுவதும் உடலில் வாங்கியும் பந்தை தவற விடாமல் காக்கிறார் கிரேக்க க்ல்கீப்பர்.

என்னைப் பொறுத்தவரை இவர்தான் மேன் ஆஃப் தி மேட்ச். இவர் கோட்டை விட்டிருந்தால் 2-3 கோல்கள் விழுந்திருக்கக் கூடும்.

75-வது நிமிடத்தில் அர்ஜெண்டினாவின் அட்டாக்கை கிளியர் செய்ய முயல்கையில் கிரேக்க கோல்கீப்பர் பந்தை அடிக்க குறுக்கே அவர் நாட்டு டிஅபெண்டர் வர, பந்து அவர் மேல் பட்டு அர்ஜெண்டினாவுக்கு இன்னொரு கார்னரைக் கொடுக்கிறது. பந்து கோலுக்குள் கூட சென்றிருக்கக் கூடும்.

77-வது நிமிடத்தில் இன்னொரு கார்னர். டிமரியா கிராஸ் அடிக்க, உயரப் பறக்கும் பந்தை Demechilis தலையால் அடிக்கிறார். பந்து deflect ஆகி கோலருகில் இருக்கும் Demechilis-இடமே திரும்பி வருகிறது. சுலபமாய் பந்தை வலைக்குள் தள்ளுகிறார். கிரேக்கம் தேவைக்கு அதிகமாய் தற்காத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொண்டுள்ளது.

It is 1-0.

மரடோனா களிப்பில் குதிக்கிறார். இன்னும் பத்து நிமிடங்களுள் 3-0 ஆனால் கூட ஆச்சரியப்படுவதற்கில்லை.

Milito பெஞ்சுக்கு அழைக்கப்படுகிறார்.

84-வது நிமிடத்தில் அற்புதமான tackle மெஸ்ஸியை கோலடிக்கவிடாமல் செய்கிறது.

86-வது நிமிடத்தில் மெஸ்ஸி பிரவாகமாய் ஓடி இடது காலால் பந்தை பலம் கொண்ட மட்டும் கோலில் அடிக்கிறார். பந்து போஸ்டில் பட்டு திரும்பி வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்கிறது.

எவ்வளவுதான் நன்றாக விளையாடினாலும் மெஸ்ஸிக்கு கோல் அடிக்கும் பிராப்தம் இன்னும் அமையவில்லை. சீக்கிரமேவ கோலுக்குள் பாலஸ்ய பிராப்திரஸ்து!

89-வது நிமிடத்தில் இன்னொரு கோல். மீண்டும் மெஸ்ஸி. மீண்டும் ஒரு left footer. மீண்டும் ஒரு அற்புதமான save. பந்து கோல்கீப்பர் கையில் பட்டு பலெர்மோவிடம் செல்கிறது. மெஸ்ஸியின் அடியிலிருந்து பந்தைத் தடுத்ததிலிருந்து மீளாத கோல்கீப்பர் வேடிக்கை பார்க்க, பலெர்மோ கோலுக்குல் பாலை அடித்து 2-0 ஆக்குகிறார்.

மூன்று ஆட்டங்களில் மூன்று வெற்றிகள்! அர்ஜெண்டினாவுக்கு அற்புதத் துவக்கம். 2006-ஐப் போலவே இவ்வாண்டும் இரண்டாவது ரவுண்டில் மெக்சிகோவுடன் மோதுகிறது.

இப்படியே ஆடினால் மரடோனா 1986-ல் பெற்ற அனுபவத்தை 2006-ல் மெஸ்ஸி பெறக் கூடும். பெக்கன்பாயர் போல மரடோனாவும் ஆட்டக்கராக மட்டுமின்றி கோச்சாகவும் உலகக் கோப்பையை அர்ஜெண்டினாவுக்குப் பெற்றுத் தரக் கூடும்.

மணி 2-ஆகப் போகிறது. இரண்டாம் பாதி ஹைலைட்ஸைப் பார்த்துவிட்டு நான் தூங்கப் போகிறேன். அனேகமாக யாரும் இந்த லைவ் கமெண்ட்ரியைப் படித்திருக்க மாட்டீர்கள். அப்படிப் படித்திருந்தால் உங்கள் வீட்டில் மட்டும் மே மாதம் முழுவதும் கரண்ட் போகாமல் இருக்க பிரார்த்திக்கிறேன்;-)

Good night!

Advertisements