இன்றைய இரவு ஆனந்தின் வெற்றியால் மிளிர்ந்து கொண்டிருக்கிறது. ஆனந்தின் கடந்த இரண்டு ஆட்டங்களைப் பற்றி நாளை. இப்பொழுது சாம்பியன்ஸ் லீக் அரை இறுதியில் பார்சிலோனாவும் இன்டர் மிலானும் மோதிக் கொண்டிருக்கின்றன. முடிந்த வரை லைவ் அப்டேட் கொடுக்கிறேன்.

முதல் கட்ட ஆட்டத்தில் 3-1 ஒன்று மிலான் அணி வென்றது. இறுதி ஆட்டத்துக்கு போக வேண்டுமினில் இன்றைக்கு மெஸ்ஸியின் ஜாலம் பலிக்க வேண்டும்.

First Update: முதல் பன்னிரெண்டு நிமிடங்களில் பந்து பார்சிலோனாவிடமே இருந்து வருகிறது. இருப்பினும், மிலானின் defence வலுவாகவே உள்ளது. எத்தனை முயன்றும் பார்சிலோனாவின் striker-களால் எதிரணியின் பெனல்டி ஏரியாவுக்குள் துளைக்க முடியவில்லை.

மெஸ்ஸி ஒரு கேவலமான tackle செய்தார். Refree பார்த்திருப்பின் நிச்சயம் வெளியேற்றப்பட்டிருப்பார். அடுத்த அப்டேட் இன்னும் பதினைந்து நிமிடங்களில்.

Update 2: இரண்டு கோல்கள் முன்னிலையில் உள்ள நிலையில் இண்டர் அணி defend செய்தாலே போதும் என்று ஆடுகிறது.  பந்தே தன்னிச்சையாய் பார்ஸிலோனாவின் அரைக்குள் வந்தால்தான் உண்டு.  இண்டரின் அரையிலேயே இருபது ஆட்டக்கரர்களுக்கு மேல் தென்படுகின்றனர். 80% மேல் posession பார்ஸிலோனாவிடம் உள்ளது. இரண்டு நல்ல வாய்ப்புகள் பெட்ரோவாலும், Xavi-யாலும் நழுவ விடப்பட்டன.

27-ஆவது  நிமிடத்தில் பர்ஸிலோனா ஆட்டக்காரரின் முகத்தைக் கையால் தள்ளியதாலும், கீழே விழுந்த வீரர் அற்புதமாய் நடித்ததாலும்:-),  தியாகோ மோட்டா ஆட்டத்திலிருந்து வெளி அனுப்பப் பட்டுள்ளார். பத்து ஆட்கள் கொண்ட இண்டர் பார்ஸிலோனாவின் தாக்குதலை தாக்குப் பிடிக்க முடியுமா? பார்ஸிலோனா ஜெயிக்க இதை விட நல்ல வாய்ப்பு கிடைக்காது.

இந்த அப்டேட்டை பதிவேற்றம் செய்யும் வேளையில் மெஸ்ஸியின் அற்புதமான left footer-ஐ முழு நீள டைவ் மூலம், கோலாகாமல் தடுத்தார் இண்டரின் Goal Keeper –  Julio Cesar.

Half Time Update: இண்டரின் defense நேரம் ஆக ஆக வலுவிழப்பது போலவே தோன்றுகிறது. பார்ஸிலோனா கோல் அடிப்பதிலேயே குறியாக இருந்து கொண்டு, எதாவது ஒரு தருணத்தில் counter attack-ஐ தடுக்க முடியாமல் கோல் விடுமோ என்றும் தோன்றுகிறது. இண்டர் தொடர்ந்து முரட்டுத் தனமாய் ஆடினால்,இன்னும் சிலர் கூட ஆட்டத்தைவிட்டு நீக்கப்படக் கூடும். பார்ஸிலோனா, முதல் கோல் அடித்துவிட்டால், சர்வ நிச்சயமாய், அந்த pressure-ஐ வைத்துக் கொண்டே இன்னொரு கோலையும் அடித்துவிடும்.  இவ்வளவு மொக்கையான defensive ஆட்டம் இத்தாலிக்கே உரியது.  பார்ஸிலோனா ஜெயிக்க வேண்டும் என்பதைவிட, இண்டர் தோற்க வேண்டும் என்ற எண்ணமே மேலோங்குகிறது. பாதி ராத்திரியின் ஃபுட்பால் பார்க்கும் போது, முழுக்க முழுக்க defensive-ஆக ஆடினால் யாருக்குத்தான் பிடிக்கும். அதைப் பற்றி இண்டருக்கு என்ன கவலை, எப்படியோ இறுதி ஆட்டத்துக்குப் போனால் சரி:-)

இண்டர் முதல் பாதியை ஒரு வழியாய் கோல் விடாமல் சமாளித்துவிட்டது.  இரண்டாவது பாதியிலாவது பந்து கோலில் விழுமா என்று பார்க்கலாம்.

Update 4: Inter is showing absolutely no inclination to score. எப்படியாவது கோல் விடாமல் பார்த்துக் கொண்டால் போதும் என்பதே மொரினோவின் திட்டம்.  2-3 முறை பெனல்டி பகுதிக்குள் பார்சிலோனா நுழைய முடிந்த போதும், குழுமியிருக்கும் தற்காப்பு திரளில் கோல் அடிக்க Barca will require a Supreme effort.  Let us see if the Substitutions can work for them!

Update 5: கடைசி 15 நிமிடங்கள்தான் பாக்கி. பதட்டத்தில் பெனால்டி எதாவது கிடைத்தால்தான் கோல் விழும் போல இருக்கிறது.  பார்ப்போம் எதாவது நடக்கிறதா என்று.

Update 6:  81-வது நிமிடத்தில் மெஸ்ஸியின் Pass கோலாக்கப்ப்பட்டிருக்க வேண்டும்.  84-ஆவது நிமிடத்தில் ஒரு வழியாய் பார்ஸிலோனா கோல் அடித்தது. Xavi-யின் பாஸை வாங்கி இரு defender-களிடம் சிக்காமல், கச்சிதமாய் கோலடித்தார் Gerrard Piquet.  It may be a little too late.

மூன்று நிமிடங்கள்.

 1 கோல்.

சாம்பியன்ஸ் லீக் இறுதிப் போட்டி.

பார்ஸிலோனாவால் முடியுமா?

Final Update: 90 நிமிடங்கள் கடந்ததும் 4 நிமிடங்கள் Injury Time-ஆக சேர்க்கப்பட்டது. ஆட்டம் முடிய இரண்டு நிமிடம் இருந்த போது, Xavi கோல் அடித்தார். ஆனால், பந்து அவருக்குக் கிடப்பதற்கு முன், பார்ஸிலோனா வீரரின் கையில் பட்டிருந்தது. அதை refree பார்த்தும் இருந்ததால். கோல் ரத்து செய்யப்பட்டது.

மொரினோ மீண்டும் ஒப்பேற்றிவிட்டார். Porto, Chelsea, Inter என்று சென்றவிடமெல்லாம் சிறப்பாக இருக்கிறது மொரினோவுக்கு. 

என்னைப் பொறுத்தவரை சாம்பியன்ஸ் லீக் முடிந்துவிட்டது. பார்ஸிலோனா போன பின், ராமன் ஆண்டால் என்ன ராவணன் ஆண்டால் என்ன?

While the Wednesday ended wonderfully well…the beginning of Thursday wasn’t so good:-(

Advertisements