ஆனந்த் ஒரு வழியாய் பல்கேரியா அடைந்துவிட்டார்.

நிறைய குழப்பங்களுக்குப் பின், ஆட்டம் ஒரு நாள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளதாக World Chess Federation கூறியுள்ளது.  துவக்க விழா திட்டமிட்டது போலவே இன்று நடை பெற உள்ளது.  12 ஆட்டங்கள் கொண்ட தொடரில், முதல் ஆட்டத்தில் வெள்ளைக் காய்களுடன் ஆடப் போவது யார் என்று இன்று தெரிய வரும்.

இன்று அனேகமாக சிவராத்திரிதான். சாம்பியன்ஸ் லீக் ஃபுட்பாலில், இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று நடக்கவுள்ளது.  முதல் அரையிறுதிப் போட்டியில், இண்டர் மிலான், பார்சிலோனாவை 3-1 என்ற வித்தியாசத்தில் வென்றது. வழக்கமாய் ஜாலம் புரியும் லியோனல் மெஸ்ஸி நேற்று subdued-ஆக இருந்தார். பார்ஸிலோனாவைப் பொறுத்த மட்டில் ஒரே ஆறுதல், 1 away goal பெற்றிருப்பதுதான். அடுத்து நடக்கவிருக்கும் second leg-ல் 2-0 என்ற கணக்கிலே அல்லது, 2 கோல் வித்தியாசத்திலோ வெற்றி பெற்றால் இறுதி ஆட்டத்துக்கு பார்ஸிலோனாவால் தகுதி பெற முடியும்.

சென்ற வார இறுதியில் நடந்த Chinese Grand Prix-ல் ஷுமாக்கர் மீண்டுமொரு முறை ஏமாற்றினார். போட்டியில் ஷுமாக்கரைத் தவிர எனக்கு யார் மேலும் அக்கரை இல்லாததால், யார் ஜெயித்தது என்று கூட நினைவில் இல்லை. இனி வரும் போட்டியிலாவது பழைய ஷுமாக்கரைப் பார்க்க முடியுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisements