பெயர்: ராமசந்திரன் மகாதேவன்
எழுத்துக்காக: லலிதா ராம் (பொண்டாட்டி பேரு லலிதா இல்லை.)
ஊர்: மனதளவில் எப்போதும் தஞ்சை ஜில்லா. வயிற்றுப் பிழைப்புக்காக பெங்களூர். டிசம்பரில் சிங்காரச் சென்னை.
படிப்பு: மெடீரியல் சயின்ஸ்
செய்ய நினைப்பது: மெடீரியல் சயின்ஸ் தவிர
பிடித்த வேலை: அரதப் பழைய ஆட்டங்களை டிவி-யில் பார்ப்பது. அவற்றைப் பற்றி ஓயாமல் பேசி மொக்கை போடுவது.
alma mater: தினம் ஒரு கவிதை, ரா.கா.கி, மரத்தடி
ஒரே சாதனை: (நண்பர்களுடன் சேர்ந்து) varalaaru.com-ஐ தொடங்கி, இன்னமும் மூடாமல் வைத்திருப்பது.
எழுத நினைக்கும் விஷயங்கள்: மியூச்சுவல் ஃபண்ட்ஸ், டென்னிஸ், ஃபார்முலா ஒன், கடற்கரை ஓர சுற்றுலாத் தளங்கள், காற்றலை மின் உற்பத்தி, சங்க இலக்கியங்களில் இசை, “போரிஸ் பெக்கர், பிரகாஷ் படுகோனே, மரடோனா, ஷுமாக்கர் ஆகியோரின் பயோகிராஃபி”. (இவற்றைப் பற்றி என் பெயரில் ஏதேனும் கிடைப்பின் அவை என் பெயரில் யாரோ எழுதியன என்பதைத் தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்)
எழுதிக் கிழித்தவை: கொஞ்சம் வரலாறு, கொஞ்சம் இளையராஜா, கொஞ்சம் கர்நாடக இசை
அலுக்காமல் படிப்பது: தி.ஜானகிராமன், லா.ச.ரா, உ.வே.சா-வின் ‘என் சரித்திரம்’.
நடக்காது என்று தெரிந்தும் செய்ய நினைப்பது: வாரத்துக்கு குறைந்த பட்சம் மூன்று பதிவுகள்.
ஒரே பிரச்னை: சுருக்கமாய்ச் சொல்லத் தெரியாதது. (என்னைப் பற்றிச் சொல்ல அதிகம் இல்லை என்று எழுத நினைத்து இவ்வளவு நிரப்பியிருப்பதைப் பார்த்தாலே தெரியுமே!)

மே 5, 2010 at 1:24 பிப
Hello Ram,
Neenga Thanjavur ahh? i am from thirukkatupalli.
I read all ur article in idlyvadai.com.
i don’t know how to play chess…but i read it ananth vs topolvo match commentry.its good one.
Regards,
Sridevi
மே 6, 2010 at 3:05 முப
Sridevi,
I was born in Chennai. Our Native is Thiruvarur.
Thanks a lot of your encouraging words.
ஜூன் 9, 2010 at 8:36 முப
அன்பு நண்பர் ராம் அவர்களுக்கு,
தங்களது செஸ் வர்ணனை மிக அருமை. ஆனந்த் பட்டம் வெல்வதை மிக அழகிய நடையில் எழுதியிருந்தீர்கள். தங்களது கலைப்பணி தொடர வாழ்த்துக்கள்.
தங்களது EMAIL ID தரவும்.
ஜூன் 9, 2010 at 6:15 பிப
ஸ்ரீராம்: ramchi@gmail.com என்ற முகவரியில் என்னைத் தொடர்பு கொள்ளலாம்.
ஜூன் 28, 2010 at 6:53 பிப
Hi Ram,
Just visited your new blog on sports.Your writing is good. Keep it going.
Thanks!
ஜூன் 28, 2010 at 7:16 பிப
Thank you NSR.