Preview:
நியாயமாய் தலைப்பை பிழைக்குமா ஜெர்மனி என்றுதான் வைக்க வேண்டும். ஜெவுக்கு ஜெ மேட்ச் ஆனதால் இந்தத் தலைப்பு.
செர்பியாவிடம் ஜெர்மனி மோசமாக விளையாடியது. டிஃபென்ஸ் சரியில்லை. கிடைத்த பெனால்ட்டியில் கோலடிக்காவில்லை. க்ளொசா ரெட் கார்ட் வாங்கியிருந்தார்.
அடுத்த சுற்றுக்கு போக ஜெர்மனி ஜெயித்தே ஆக வேண்டும். கானா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடியது. செர்பியாவை வென்றதால் குரூப்பின் முதல் இடத்தில் உள்ளது.
கானா டிரா செய்தால் நிச்சயம் அடுத்த சுற்றுக்குச் சென்றுவிட முடியும். செர்பியா ஜெயித்தால் நிச்சயம் அடுத்த சுற்றுக்கு சென்றுவிட முடியும்.
ஜெர்மனிக்கு ஜெயிப்பதைத் தவிர வேறு வழியில்லை.
சென்ற உலகக் கோப்பையில் அதிகம் கோல் அடித்த கிளோஸா இன்று ஆட முடியாது. பாலாக் அணியிலேயே இல்லை.
பொடொல்ஸ்கி, ஷ்வைன்ஸ்டைகர், லாம் போன்றோர் சிறப்பாக ஆடக் கூடியவர்கள்தான். இன்று ஆடித்தான் ஆக வேண்டும்.
அணியில் பல பேர் ஏற்கெனவே மஞ்சள் அட்டை வாங்கியவர்கள். இன்று இன்னொரு அட்டை வாங்கினால், ஜெயித்தாலும் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாமல் போய்விடும்.
ஜெர்மனிக்கு 4-2-4 ஃபார்மேஷன். கக்கௌ-வும் பொடோல்ஸ்கி-யும் கவனிக்கப்பட வேண்டியவர்கள். கிளொசா-வின் இடத்தை கக்கௌ-வால் நிரப்ப முடியுமா? பொறுத்திருந்து பார்ப்போம்! கானா 4-3-3 ஃபார்மேஷனில் களமிறங்கியுள்ளது
Players in The tunnel. இரு நாடுகளின் தேசிய கீதங்களைத் தொடர்ந்து ஆட்டம் தொடங்கிவிடும்.
எடுத்த எடுப்பிலேயே கானா வேகமாக முன்னேறி ஜெர்மன் கோல் வரை முன்னேறுகிறது.
3-வது நிமிடத்தில் வல சிறகு வழியாக கக்கௌ முன்னேறி கோல்கீப்பருக்கு எச்சிரிக்கை விடுக்கும் வகையில் பந்தை அவரிடம் அடித்துவிட்டுப் போகிறார்.
6-வது நிமிடத்தில் ம்யூல்லரின் கிராஸ் கோல்கீப்பரிடம் செல்கிறது.உடனேயே கானாவின் கவுண்டர் அட்டாக்.
7-வது நிமிடத்தில் டி-க்கு வெளியில் இருந்து பொடோல்ஸ்கி கோல் அடிக்க முயற்சிக்கிறார். பந்து கானா வீரர் மேல் பட்டு ஜெர்மனிக்கு முதல் கார்னரைக் கொடுக்கிறது.
10-வது நிமிடத்தில் பொடோல்ஸ்க்கியின் கிராஸ் கோல் நோக்கி செல்கிறது. பந்தை தடுக்க நினைக்கும் கானா வீரர் காலில் பட்டு பந்து கோலுக்குள் விரைய முற்படுகிறது. கோல்கீப்பரின் அற்புதமான reflex கானாவைக் காப்பாற்றுகிறது.
கானாவுக்கு பொஸெஷன் கிடைக்கும் போதெல்லாம் மின்னல் போல ஜெர்மன் கோல் நோக்கி படையெடுக்கின்றனர்.
முதல் 12 நிமிடத்தில் ஒரு ஃபௌல் கூட இல்லை. இதுவே ஏதேனும் ரெக்கார்டாக இருக்கலாம்.
13-14 நிமிடங்களில் இரண்டு நல்ல முயற்சிகள் கானா தரப்பில். ஷ்வைன்ஸ்டைகரின் கடைசி நிமிட deflection கோலைத் தடுக்கிறது.
கானாவிடம் பந்து போகும் போதெல்லாம் அரங்கம் அலறுகிறது. ஆப்பிரிக்க நாடு முன்னேற வேண்டும் என்று லோக்கல் ரசிகர்கள்விரும்புகின்றனர்.
16-வது நிமிடத்தில் மியூல்லரின் கிராஸ். பொடோல்ஸ்கியின் இருப்புக்கு மயிரிழை தள்ளி விழுகிறது. சரியாக விழுந்திருந்தால் அற்புத கோலாகியிருக்கும்.
21-ஆவது நிமிடத்தில் ஜெர்மன் காப்டன் லாமின் பிரம்மிக்க வைக்கும் ஸோலோ ரன். கோலடிக்கப் போகிறார் என்று நினைக்கும் நேரத்தில், கண நேர தயக்கத்தில் பந்தைத் தவற விடுகிறார். கோல் தேய்ந்து கார்னராகிறது.
இரு அணிகளும் அதிரடியாய் ஆடுகின்றன. கானாவின் வாய்ப்பை நல்ல டிஃபென்ஸ் பிடுங்கியது. 25-வது நிமிடத்தில் ஸ்கோர் 0-1 அல்லது 1-0 ஆகியிருக்கக் கூடும். லாமின் அற்புதமான தடுப்பு கானா வீரரின் ஹெட்டரை தடுக்கிறது. ஜெர்மனியின் Ozil கானா வீரர் அத்தனை பேரையும் கடந்து கோல்கீப்பரை மட்டும் அக்டக்க வேண்டிய நிலையில் பந்தை கோல்கீப்பர் தடுக்கிறார்.
ஃபுட்பால் என்றால் கோல்தான் என்று பலர் எண்ணுகின்றனர். கடந்த ஐந்து நிமிடங்களில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை ஆனால் பார்ப்பதற்கு வெகு அற்புதமாக இருந்தது. டிஃபென்ஸ், அஃபென்ஸ் இரண்டுமே படு சூப்பர்.
27-வது நிமிடத்தில் முதல் ஃபௌல்.
கானாவின் ஆயூ பட்டையைக் கிளப்புகிறார்.
இந்த ஆட்டம் டிரா ஆகி செர்பியா ஜெயிக்காமல் போனால், ஜெர்மனி அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்புண்டு.
40-வது நிமிடத்தில் அயூவின் tackle அவருக்கு மஞ்சள் அட்டையைக் கொடுக்கிறது. ஜெர்மனிக்கு ஃப்ரீ கிக். ஷ்வைன்ஸ்டைகரின் ஃஷாட் அனைவரையும் ஏய்த்து ட்-க்குள் விழுந்து கோல் நோக்கி செல்கிறது. கடைசி நொடியில் கானா கோல்கீப்பர் பந்தைத் தடுக்கிறார்.
43-வது நிமிடத்தில் ம்யூல்லர் மஞ்சள் அட்டை பெறுகிறார். ஜெர்மனியின் ஆறு ஆட்டக்காரர்கள் ஜாக்கிரதையாய் ஆட வேண்டும். இன்னொரு மஞ்சள் அட்டை பெற்றால் அடுத்த ஆட்டத்தை வேடிக்கைதான் பார்க்க முடியும்.
45-வது நிமிடத்தில் கானாவின் அட்டாக். டகோவின் ஹெட்டர் கோலுக்கு மேல் செல்கிறது.
ஸ்கோர் 0-0 என்றாலும் ஆட்டம் சூப்பர்!
கானாவின் கோல்கீப்பர் சிறப்பாக ஆடுகிறார். டிஃபென்ஸும் நன்றாக உள்ளது. ஸ்டிரைக்கர்கள் இது போலவே ஆடினால் போதும். ஜெயிப்பதை விட தோற்காமல் இருப்பது கானாவுக்கு முக்கியம்.
ஜெர்மனி செர்பியாவை நம்பிக் கொண்டு இருக்க முடியாது. பொடொல்ஸ்கி பந்தைத் தொட்டே நேரமாகிவிட்டது. அவருக்கு பதில் வேறு யாரையாவது அனுப்பலாம்.
நாட்பாஸ் எங்கே போனார்?
இரண்டாவது பாதியின் தொடக்கத்தில் அணியில் எந்த மாற்றமும் இல்லை. யாரேனும் ஒரு கோல் அடித்தால் ஆட்டம் இன்னும் பரபரப்பாகும்.
பந்தின் trajectory புரியாமல் கானா வீரர் டி-க்குள் தவறிழைத்து ஜெர்மனிக்கு கார்னர் கொடுக்கிறார்.
முதல் ஐந்து நிமிடங்களில் ஜெர்மனயின் ஓங்….நான் அடிக்கித்துக் கொண்டிருக்கும் போதே கானாவுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு. ஜெர்மன் கோல்கீப்பரின் சாக்சம் கோலாகாமல் தடுக்கிறது. Asamoah, முன்பு ஜெர்மனியின் Ozil தவறவிட்டதைப் போலவே வாய்ப்பைத் தவறவிடுகிறார்.
ஜெர்மனி அதிரடியில் இறங்குகிறது. கானாவின் தற்காப்பு துல்லியமாய் இருக்கிறது. டி-க்குள் சென்று கோல் அடிப்பதை விட லாங் ரேஞ்சில் கோல் அடிப்பதற்கான வாய்ப்பே அதிகம். அதைத்தான் செய்கிறார் Ozil. Edge of the box-ல் இருந்து அவர் அடித்த left footer பந்தை கோலின் இட மேல் பகுதிக்குள் செலுத்துகிறார்.
Itz 1-0 Germany!!!!!
ஜெர்மனியின் கோலுக்குப் பின் கானா இன்னும் அதிரடியாய் ஆடத் தொடங்கியுள்ளது. கிட்டத்தட்ட கோல் அடித்தும் விடுகிறது. 67-வது நிமிடத்தில் கானாவுக்கு கோல் அளிக்காமல் காப்டன் லாம் தடுத்தாடுகிறார். அயூவின் இன்னொரு அற்புதமான முயற்சி வீணாகிறது.
செர்பியா வென்றால் கானா வெளியேறக் கூடும்.
இன்னொரு ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 1-0 என்று முன்னணியில் உள்ளது! But Ghana cannot relax.
ஜெர்மனியின் ஆட்டம் நிதானமாய் ஆனால் நிச்சயமாய் இருக்கிறது. அடுத்த சுற்றில் இங்கிலாந்தை எதிர்த்து ஆடுவது கிட்டத்தட்ட நிச்சயமாகிவிட்டது.
ஆஸ்திரேலியா இன்னொரு கோல் அடித்துவிட்டது. இன்னும் ரெண்டு கோல் போட்டு 4-0 ஆக்கினால் ஆஸ்திரேலியாவுக்குக் கூட அடுத்த சுற்றுக்குச் செல்ல வாய்ப்புண்டு.
ஜெர்மனி இப்போது ஒரு கோலை கானாவுக்குக் கொடுத்தால் இங்கிலாந்தை சந்திப்பதைத் தவிர்க்க முடியும்:-)
செர்பியா ஒரு கோல் போட்டு 2-1 ஆக்கியுள்ளது. அவர்களுக்கு டிரா பத்தாது. ஜெயித்தே ஆக வேண்டும்.
இன்னும் 90 வினாடிகள். கானா கோல் அடிக்குமா? செர்பியா இன்னும் 2 கோல் அடிக்காமல் இருந்தால் கானா அமெரிக்காவுடன் மோதும். கானாவின் தோல்வி blessing in disguise:-)
ஜெர்மனிக்கு நல்ல ரிசல்ட். செர்பியாவுடனான சறுக்கல் ஒரு exception-தான் என்று ஜெர்மனி நிரூபித்துள்ளது. இங்கிலாந்து அடுத்த கண்டத்துக்கு தயார் ஆக வேண்டியதுதான்.
செர்பியாவும் ஆஸ்திரேலியாவும் கானாவுக்கு உதவியுள்ளன.
ஆப்பிரிக்காவில் நடக்கும் ஆட்டத்தில் ஒரு ஆப்பிரிக்க அணி கூட முன்னேறாவிட்டால் எப்படி? கானாவின் முன்னேற்றம் லோக்கல்களை மகிழ்த்தியிருக்கும்.
உலகக் கோப்பை களை கட்டிவிட்டது. இனிமேல் தினமும் கொண்டாட்டம்தான்:-)
பதிவைத் தொடர்ந்த அனைவருக்கும் நன்றி. Good night!
ஜூன் 23, 2010 at 8:14 பிப
கானா இதுவரை கோல் போடாதது ஏமாற்றமாக இருக்கிறது
ஜூன் 23, 2010 at 8:19 பிப
Yes! They deserved a goal.
ஜூன் 23, 2010 at 8:20 பிப
கானாவும் அடுத்த சுற்றில்! மகிழ்ச்சி
ஜூன் 23, 2010 at 8:24 பிப
அவர்கள் கோல் போடாததுதான் நல்லதாய் போயிற்று. இல்லையேல் இங்கிலாந்துடன் மோதியிருப்பார்கள்:-)
ஜூன் 23, 2010 at 8:27 பிப
கானா இன்னும் நன்றாக விளையாடவில்லையென்றால் வரும் சுற்றுகளில் தாக்குப் பிடிக்க முடியாது. அமெரிக்க அணிக்கு வேறு எப்படியோ அதிர்ஷ்ட காற்று அடித்துக் கொண்டுள்ளது.
ஜூன் 23, 2010 at 8:31 பிப
இராதாகிருஷ்ணன்: அமெரிக்கா நல்ல அணிதான். இங்கிலாந்தின் கண்ணில் விரலை விட்டு ஆட்டினார்கள். கானா – அமெரிக்கா ஆட்டம் சம பலம் பொருந்திய இரு அணிகள் மோதும் ஆட்டமாக அமையும். பார்க்க சுவாரஸ்யமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.
ஜூன் 23, 2010 at 8:34 பிப
ஆம். பார்க்கலாம். சரி போய் தூங்குங்க. நல்லிரவு!
ஜூன் 23, 2010 at 8:41 பிப
thanks and good night to you too!
ஜூன் 24, 2010 at 1:44 முப
ஆட்டம் பார்க்க முடியாத குறையைப் போக்கி விட்டீர்கள். நான் துரதிருஷ்டவசமாகத் தூங்கிப் போய் விட்டேன் (திட்டம் போட்டுதான் தூங்கினேன்- தகுதி சுற்றிலேயே ராத்திரி இரண்டு மணிவரை தூக்கத்தை கெடுத்துக் கொண்டால் இறுதி ஆட்டம் வரை நம்மால் தாக்கு பிடிக்க முடியாது).
உங்கள் லைவ் ப்ளாகிங் கான்செப்ட் நன்றாக இருக்கிறது. தொடருங்கள்- இயன்றபோது கலந்து கொள்கிறேன்.
நன்றி.
ஜூன் 29, 2010 at 3:15 முப
[...] டிடியர் ட்ரோபா, சாமுவெல் ஈடோ போன்ற நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத ஆஃப்ரிக்க அணி என்ற போதும் செர்பியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனுமான ஆட்டங்களில் கானாவின் கை ஓங்கியிருந்தது. பல முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனியின் கண்ணில் கூட விரலை விட்டு ஆட்டியது கானா. (விவரங்களை இங்குகாணலாம்.) [...]