ஜூன் 2010
மாதாந்திர தொகுப்பு
ஜூன் 30, 2010
இரண்டாம் சுற்றின் மூன்றாம் நாளில் முதல் ஆட்டத்தில் நெதரலாந்தை எதிர்த்து ஸ்லொவாகியா விளையாடியது.
நெதர்லாந்து எந்தக் காரணத்தினாலோ உலகக் கோப்பை என்றால் சொதப்பும். ரூட் குலிட், வான் பாஸ்டம் போன்ற லெஜெண்ட்கள் ஆடும் போதும் என்ன காரணத்தினாலோ சத்தமின்றி போட்டியை விட்டு வெளியேறுவர் நெதர்லாந்தினர்.
இம் முறை நெதர்லாந்து முதல் சுற்றின் மூன்று ஆட்டங்களிலும் வெற்றி பெற்றிருந்தது. எந்த ஒரு டச்சு அணியும் இது வ்ரை நான்கு ஆட்டங்களிலும் தொடர்ந்து வெற்றியைக் கண்டதில்லை என்பதால், ஸ்லோவாகியாவை எதிர்த்து வெல்லுமா என்ற சந்தேகம் எழுந்தது. நெதர்லாந்தின் சிறந்த வீரரான ரோபன் காயத்திலிருந்து மீண்டு ஆட வந்தது அணிக்கு வலு சேர்த்திருக்கும்.
ஸ்லோவாகியா அணி கோலியத்தைக் வீழ்த்திய டேவிட். கடந்த சாம்பியன் இத்தாலியை வீட்டுக்கு அனுப்பிய உற்சாகத்தில் இருக்கும் நாடு. ஸ்லோவாகியாவின் ஸ்டிரைகர் விட்டெக் மிகச் சிறப்பாக் ஆடி கோல்களை குவித்து வருகிறார். இன்னொரு கோலியத்தை வீழ்த்துவாரா டேவிட்?
The second one was too hot handle.
ஆட்டம் தொடங்கிய போது ஸ்லோவாகியா, பெரிய அணியைக் கண்டு மிரளாமல் தன்னம்பிக்கையுடன் ஆடியது. நேரம் செல்ல செல்ல வான் பெர்ஸியும், ஸ்னைடரும் ஸ்லோவாக்கிய தற்காப்புக்கு நெருக்கடியை அதிகரித்தபடி வந்தனர். 18-வது நிமிடத்தில் நெதர்லாந்து அரையில் இருந்து செலுத்தப்பட்ட லாங் பாலை பிடிக்க ஸ்லோவாகிய வீரரை outpace செய்ய சீறிய ரோபன் பந்தை முதலில் அடைந்து, வலப்பக்கத்தில் இருந்த பந்தை இடப்பக்கமாய் திசை திருப்பி, தடுக்க வந்த டிஃபெண்டர் கண்ணில் மண்ணை தூவி, near post-ல் கோலின் கீழ் பகுதியில் செல்லுமாறு பந்தை தனது இடக் காலால் செலுத்த ஸ்கோர் 1-0.
கோலை இங்கு காணலாம்: http://www.metacafe.com/watch/4823960/arjen_robben_goal_to_slovakia/
ரோபனின் மின்னல் வேக ஓட்டம் டச்சு ரசிகர்களுக்கு நிறைவாக இருந்திருக்கும். அந் நாட்டின் சிறந்த வீரர் காயத்திலிருந்து முற்றிலும் மீண்டதை எண்ணி மகிழ்ந்திருப்பர்.
முதல் பாதியிலேயே இன்னும்சில கோல்களை நெதர்லாந்து போட்டிருக்கக் கூடும். ஆர்ஸெனலுக்கு ஆடும் வான் பெர்ஸிக்குக் கிடைத்த வாய்ப்புகளை அவர் முற்றிலும் பயன்படுத்தாததால் இடைவேளையின் போதும் ஸ்கோர் 1-0 என்றே தொடர்ந்தது.
இரண்டாம் பாதியிலும் ரோபன் சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தினார். வான் பெர்ஸி டிஃபெண்டர்களை ஏய்த்து தனியாக இருந்த ரோபனிடம் அளிக்க, அவரது முயற்சி கோல்கீப்பர் Mucha-வின் (இவர் பெயரை தமிழில் எழுதினால் என்னவோ போல இருக்கிறது), விரல் நுனியில் பட்டு கோலை விட்டு விலகியது.
65 நிமிடங்களுக்கு பின், ஞானோதயம் வந்தவர்கள் போல, ஸ்லோவாகியர்கள் அதிரடியில் இறங்கினர். 67-வது நிமிடத்தில் ஒரு நல்ல ஷாட்டை கோலுக்கு வெளியில் தள்ளி காத்தார் டச்சு கோல்கீப்பர். சில நொடிகளுக்கெல்லாம் ஸ்லோவாகியாவின் chance of a lifetime வாய்த்தது. ஆளரவமில்லாத இடத்தில், பொறுமையாய் குறி பார்த்து அடிக்க போதிய அவகாசத்துடன் ஒரு பொன்னான வாய்ப்பு ஸ்லொவாகியா அணியின் சிறந்த வீரர் விட்டெக்குக்கு வாய்த்து. பந்தை நேராக கோல்கீப்பர் ஸ்டெகெலென்பர்க்கிடம் அடித்து வீணாக்கினார் விட்டெக். இந்த முயற்சி கோலாகியிருப்பின் ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.
84-வது நிமிடத்தில் Kuyt-ன் அற்புதமான கிராஸை வாங்கி கச்சிதமாய் கோலடித்தார் ஸ்னைடர். 2-0.
ஆறு நிமிடங்களில் ஸ்லோவாகியா பல முயற்சிகள் செய்த போதும் கோல் அடிக்க இஞ்சரி டைம் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.
பெனல்டி பாக்ஸினுள் விட்டக்கை நெதர்லாந்து கோல்கீப்பர் வீழ்த்தி ஃபௌலாக்கியதால் பெனால்டி கிக் கொடுக்கப்பட்டது. விட்டக் கோல் அடித்து 2-1 ஆக்குவதற்கும் இறுதி விசில் ஊதப்படுவதற்கும் சரியாக இருந்தது.
ஸ்லொவாகியாவின் ட்ரீம் ரன் அத்துடன் நிறைவு பெற்றது.
இரண்டாவது ஆட்டத்தில் இரண்டு தென் அமெரிக்க நாடுகளான பிரேசிலும் சிலீயும் மோதின.
பிரேசில் ஃபாவரிட் என்றாலும் சிலீயும் முதல் ரவுண்டில் சிறப்பாகவே ஆடியிருந்தது.
இதற்கு முந்தைய உலகக் கோப்பகளில் இரு முறை பிரேசிலிடம் தோற்றுள்ளது சிலீ. மூன்றாம் முறையாவது வெல்ல வேண்டும் என்று முனைப்பாக களமிறங்கியதாலோ என்னமோ வழக்கமாய் ஆடுவதை விட அதிகமாய் அதிரடியில் இறங்கியது.
இதனால் கோலடிக்க வாய்ப்புகள் உருவானாலும் காகா, ரொபினோ, ஃபாபியானோ போன்ற ப்ரேசில் வீரர்கள் கோல் அடிக்க ஏதுவான களன்களும் நிறையவே அமைந்தன. சிலீயின் வாய்ப்புகளை எல்லாம் சிஸாரும், லூசியோவும் மழுங்கடித்துக் கொண்டே இருந்தனர். பிரேசிலுக்கு இருந்த வாய்ப்புகளைப் பார்க்கும் போது அவர்கள் 34-வது நிமிடம் வரை கோலடிக்காதது அதிசயம்.
மைகானின் கார்னரை Juan கச்சிதமாய் தலையால் அடித்து கோலாக்கி பிரேசிலை முன்னிலைப் படுத்தினார். இதன் பிறகு சிலீயின் டிஃபென்ஸ் சுத்தமாய் தகர்ந்து போனது. அடுத்த 4-வது நிமிடத்தில், இடது முனையில் இருந்து பந்தை ரொபினோ காகாவுக்கு அளிக்க, அதை அவர் தனியாய் இருந்த ஃபாபியானோவிடம் திருப்ப, முன்னால் வந்த கோல்கீப்பரைச் சுற்றி பந்தைக் கொண்டு போய், ஆளில்லா கோலுக்குள் சுலபமாய் தள்ளி 2-0 ஆக்கினார் ஃபாபியானோ.
ஃபாபியானோவின் கோல்:
http://www.in.com/videos/watchvideo-brazil-vs-chile-fabiano-goal-highlight-8470895.html
இரண்டாம் பாதியில் ரமிரெஸ் மைதானத்தின் அரையிலிருந்து தனி ஆளாய் பந்தைக் கொண்டு வந்து இரு டிஃபெண்டர்களைத் தாண்டி ரொபினோவுக்கு அளிக்க, சிங்கிள் டச்சில் கச்சிதமாய், கோல்கீப்பரின் நீட்டிய இடக்கரத்துக்கு எட்டா வகையில் கோலாக்கினார் ரொபினோ.
எதிர்பார்த்த முடிவுதான்.
3-0 என்று பெரும் வெற்றியை அடைந்து, கால் இறுதியில் நெதர்லாந்தை மோதவிருக்கிறது பிரேசில்.
That should be another cracker of a game!
Samba flair-க்கு எதிரில் Dutch Dynamism தாக்குப்பிடிக்குமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
ஜூன் 29, 2010
நேற்று கால்பந்து களேபரத்தில் அதிகம் டென்னிஸ் பார்க்க முடியவில்லை (போதாக் குறௌக்கு அபீஸுக்கு வேறு போய்த் தொலைய வேண்டியிருக்கு.)
நான் பார்ப்பதற்குள் ஃபெடரர் நேர் செட்டில் ஜெயித்துப் போய்விட்டார்.
பார்க்க வேணும் என்று நினைத்திருந்த Henin-Clijsters ஆட்டமும் முடிந்துவிட்டது. 3 செட்டுகள் நடந்த ஆட்டத்தில் Clilsters வென்று ,முன்னேறி இருக்கிறார்.
Djokovic-ம் ஹெவிட்டும் மோதிக் கொண்டிருந்தனர். இந்த விம்பில்டனில் நான் பார்க்கும் ஆட்டங்கள் பெரும்பானவற்றில் இஞ்சரி டைம் அவுட் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். எவ்வளவு வலித்தாலும் ஆடியாக வேண்டும் என்ற வெறியை விம்பில்டன் போன்ற போட்டிகள்தான் கொடுக்க முடியும்.
போன ரவுண்டில் நடால் Petzscner-க்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியின் முனையில் இருந்தார். இருவரும் பிரமாதமாக ஆடி வந்த போதும் மூன்றாவது செட்டின் முடிவில் ஆட்டம் Petzscner பக்கம் சாய்ந்தது உறுதி. மொமெண்டம் தடை படும் என்பதற்காகவே நடால் இஞ்சரி டைம் அவுட் எடுத்துக் கொண்டதாகத் தோன்றுகிறது. நடால் அந்த பிரேக்குக்கு முன்னும் பின்னும் ஒரே மாதிரிதான் ஓடினார். இன்னும் சொல்லப் போனால் அந்த பிரேக்குக்குப் பின்தான் அதிகம் ஓடி முக்கியமான் பாயிண்டுகளை அள்ளினார். நிஜமாகவே நடாலுக்கு இஞ்சரியா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். பிரேக்குக்குப் பின் Petzscner கவனத்தை இழந்ததால் நடால் பிழைத்தார்.
நேற்று Djokovic இஞ்சரி டைம் அவுட் எடுத்துக் கொண்டார். Djokovic 2 செட் முன்னிலையில் இருந்தாலும் ஹெவிட் தளராமல் ஆடினார். மூன்றாம் செட்டை ஹெவிட் ஜெயித்ததும் ஆட்டம் சுவாரஸ்யமானது. நான்காவதில் இருவரும் இம்மி அளவு கூட விட்டுக் கொடுக்காமல் ஆட, இறுதியில் டபிள் ஃபால்ட் ஒன்றினால் பிரேக்கைக் கொடுத்து Djokovic ஜெயிக்க வழி செய்தார் ஹெவிட்.
Djovic-ன் இஞ்சரியைப் பற்றி, “He always has something or the other.”, என்றிருக்கிறார் கடுப்பான ஹெவிட். ஆட்டம் தன் வசமிருந்து செல்லும் போது இஞ்சரி டைமை உபயோகிப்பதை ஒரு யுக்தியாகவே செய்யலாம் என்று கோச்சிங் புத்தகங்களில் கூடிய விரைவில் வந்திவிடும்.
பெரும் தலைகள் எல்லாம் மசாலா பட ஹீரோகள் போல தோற்பது போலத் பாவ்லா காட்டி இறுதியில் ஜெயித்து விடுவதே இந்த விம்பிள்டனின் டிரெண்டாக உள்லது. சமீபத்தில் ஸ்டாரான ஸோடர்லிங்கும் ஐந்து செட்டில் டேவிட் ஃபெரரை ஜெயித்து இக் கூற்றை உண்மையாக்கினார். அடுத்த ரவுண்டில் நடாலுடன் மோதுகிறார். பிரெஞ்சு ஓபனில், அப்போது உலக நம்பர் 1-ஆக இருந்த ஃபெடரரை வீட்டுக்கு அனுப்பியவர் இவர். அதே போல, இப்போதைய உலக நம்பர் 1-ஆன நடாலை தோற்கடிப்பாரா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். பல வருடங்கள் நடால் கோலோச்சிய பிரஞ்சி களிமண்ணில் அவரை போன ஆண்டு வீழ்த்தியவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நடால், ஃபெடரர், ஸோடர்லிங் போல போன வருடம் ஃபைனல் வரை வந்த அமெரிக்கர் ராடிக்கும் வென்று விடுவார் என்று நினைத்தது தவறானது.
அந்தக் கால மைக்கேல் சாங் போல தோற்றமளிக்கும் Yen-Hsun Lu விடம் அதிர்ச்சி தோல்வியுற்றார் ராடிக். ஐந்தாவது செட் 9-7 வரை சென்றுள்ளது. ராடிக்கின் பலம் அவரது சர்விஸ். கடந்த இரு ஆண்டுகளில் சர்வீஸ் தவிரவும் தன் ஆட்டத்தை திறம்பட மாற்றிக் கொண்டுள்ளார் ராடிக். இருப்பினும் நேற்று ராடிக்கும் சர்விஸ் ரெடர்ன் ரொம்பவே சொதப்பியதாம். (பார்க்க முடியவில்லை. முர்ரே ஆட்டத்தையும், நடால் ஆட்டத்தையுமே ஸ்டாரில் ஒளிபரப்பினர்.)
Unseeded Asian கால் இறுதி வரை தகுதி பெற்றுள்ளார். இதற்கு முன் யாரும் இப்படி தகுதி பெற்றதுண்டா என்று தெரியவில்லை.
இனி வரும் ஒவ்வொரு நாளிலும் நிறைய நல்ல ஆட்டங்கள் காணக் கிடைக்கும்.
கால்பந்த்தும், மற்ற வேலைகளும் என்னைப் பார்க்க அனுமதிக்குமா என்பதுதான் கேள்வி.
ஜூன் 29, 2010
முதல் சுற்றைக் கடந்து நாக் அவுட் ரவுண்டுக்கு 16 அணிகள் தேர்வு பெற்றன.
அவற்றிடையே, முதல் நாளின் முதல் போட்டியாக உருகுவேயை எதிர்த்து தென் கொரியா விளையாடியது.
இரு அணிகளும் நல்ல அணிகள் என்ற போதும், முதல் சுற்றில் உருகுவேயின் ஆட்டம் அவர்களுக்கான வெற்றி வாய்ப்பே அதிகம் என்று உணர்த்தியது.
ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே இரு அணிகளும் அதிரடியில் இறங்கின. லீ சுங் யங்கின் ஃப்ரீ கிக்கின் திக்கை உணராது கோல் கீப்பர் கல்லாய் சமைந்திருக்க, பந்து போஸ்டில் பட்டு கொரிய ரசிகர்களின் இதயத்தை உடைத்தது.
அதிர்ஷ்டத்தால் கிடைத்த சந்தோஷத்தை ஒரு கோல் மூலம் இரட்டிப்பாக்கிக் கொண்டனர் உருகுவேயினர். உருகுவேயில் முக்கிய வீரர் ஃபோர்லான் இட முனையிலிருந்து பெனல்டி பிரதேசத்துக்குள் கிராஸ் செய்தார். கொரிய கோல்கீப்பர் முனைந்திருந்தால் பந்தைத் தடுத்திருக்கக் கூடும். அப்படிச் செய்யாததால், டிஃபெண்டர்களின் கட்டுக்குள் இல்லாத சௌரெஸ் (Saurez) இடம் பந்து சென்றது. ஃபார் போஸ்டில் சுலபமாக பந்தை கோலுக்குள் செலுத்தி 1-0 ஆக்கினார்.
மான்சஸ்டர் யுனைடடில் விளையாடும் பார்க் ஜி சுங் உருகுவேயின் கோட்டையைத் தகர்க்க பல நல்ல முயற்சிகளைச் செய்தார். அவை அவருக்கு நிறைய ரசிகர்களைக் கொடுத்திருக்குமெனினும் கோல் எதுவும் கொடுக்கவில்லை. இவரை மார்க் செய்த உருகுவேயின் லுகானோவின் (Lugano) ஆட்டம் வெகு சிறப்பாக அமைந்து, பல்வேறு முயற்சிகளை மழுங்கடித்தது.
இரண்டாம் பாதியில் லீடை தக்க வைத்தால் போடும் என்ற மனநிலையில் உருகுவே விளையாடத் தொடங்கியது. தென் கொரியாவும் தொடர்ந்து கோலருகில் நெருக்கடிகளை உருவாக்கிய வண்ணமிருந்தது. அதன் பலனாய் 68-வது நிம்டத்தில் ஸ்கோரை சமன் செய்தது.
அதுவரை சிறப்பாக ஆடி வந்த லுகானோ, கோல்கீப்பருக்கு உதவியாய் பந்தை கிளியர் செய்வதாக எண்ணி லீ சுங் யங்கிடம் தாரை வார்த்தார். கிடைத்த வாய்ப்பை முழுதும் பயன்படுத்தி 1-1 ஆக்கினார் சுங் யங்.
அதன் பின் அழுத்தமெல்லாம் உருகுவேக்குத்தான். பார்க் ஜீ சங்கின் துல்லியமான பாஸ் லீ சுங் யங்கின் இரண்டாவது கோலுக்கு வழி வகுக்கும் விதமாய் அமைந்தது. கோலுக்கும் அவருக்கும் இடையில் கோல்கீப்பர் மட்டுமே இருந்த நிலையில் பந்தை நேராக கீப்பர் முஸ்லேராவிடம் அடித்து பொன்னான வாய்ப்பை நழுவவிட்டார். It proved costly.
சற்றைக்கெல்லாம் சௌரெஸ் இன்னொரு கோலை அடித்து உருகுவேயின் வெற்றியை உறுதி செய்தார். ஃபோர்லானின் கார்னரை பராக்கு பார்த்தபடி கொரியா இருக்க, பெனால்டி பெட்டியின் முனையில் பந்தைப் பெற்று அதைத் தன் வலது காலுக்கு மாற்றி, edge of the box-ல் இருந்து சௌரெஸ் அடித்த பந்து காற்றிலே வளைந்த படி கோலுக்குள் நுழைந்தது. One of the best goals of the tournament.
கடைசி நிமிடங்களில் கொரியாவின் வாய்ப்பை லுகானோ மறுத்ததும் கொரியா வீட்டுக்குச் செல்வது உறுதியானது. ஆசியாவில் இருந்து முன்னேறிய இரு அணிகளுள் ஒரு அணி வெளியேற்றப்பட்டுவிட்டது.
ஆனால், ஆஃப்ரிக்காவில் இருந்து இரண்டாம் சுற்றை அடைந்த ஒரே அணி பிழைத்துக் கொண்டது.
இரண்டாவது ஆட்டத்தில் அமெரிக்காவுடன் கானா மோதியது.
டிடியர் ட்ரோபா, சாமுவெல் ஈடோ போன்ற நட்சத்திர வீரர்கள் யாரும் இல்லாத ஆஃப்ரிக்க அணி என்ற போதும் செர்பியாவுடனும் ஆஸ்திரேலியாவுடனுமான ஆட்டங்களில் கானாவின் கை ஓங்கியிருந்தது. பல முறை உலக சாம்பியன் ஆன ஜெர்மனியின் கண்ணில் கூட விரலை விட்டு ஆட்டியது கானா. (விவரங்களை இங்குகாணலாம்.)
அமெரிக்காவும் முதல் ரவுண்டில் நன்றாகவே விளையாடியது. டோனொவன் என்ற சிறந்த ஆட்டக்காரரை ஃபுட்பால் உலகுக்கு இந்த போட்டி மூலம் ஈந்திருக்கிறது அமெரிக்கா. அவர் அடித்த இஞ்சரி டைம் கோல் அமெரிக்காவை அடுத்த சுற்றுக்குள் அழைத்து வந்திருந்தது.
கானாவின் முதல் சுற்று கோல்கள் இரண்டும் பெனல்டியில் கிடைத்தவையே. ஆயூ, கியான் போன்ற கானா வீரர்கள் நன்றாக விளையாடிய போதும் ஃபினிஷிங் அவர்களின் குறையாகவே இருந்தது. இந்த ஆட்டத்தில், ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் போடெங் (Boateng) கோலடித்து கானாவின் முதல் ஃபீல்ட் கோலைப் பெற்றுத் தந்தார். அரைக்கோட்டுக்கு பக்கத்திலிருந்த அமெரிக்க வீரரிடமிருந்து பந்தைக் கவர்ந்து, மின்னல் வேகத்தில் ஒற்றை ஆளாய் கோல் நோக்கி விரைந்தார் போடெங். தற்காப்பாளரின் தடுப்புகளுக்கு அசராமல், deft left-footer மூலம் கோல் அடித்து 1-0 ஆக்கினார். இவர் ஜெர்மனியில் பிறந்து வளர்ந்தவர். சில மாதங்களுக்கு முன்தான் தனது nationality-ஐ தன் தந்தை பிறந்த நாடான கானாவுக்கு மாற்றிக் கொண்டவர். இவரது சகோதரர் ஜெர்மன் அணியில் இடம் பெற்றுள்ளார். கானாவின் முந்தைய ஆட்டத்தில் இரு சகோதரர்களும் வெவ்வேறு அணிகளுக்காய் களமிறங்கினர்.
அமெரிக்காவும் தொடர்ந்து பல தாக்குதல்களைத் தொடுத்தது. கானா கோல்கீப்பர் கிங்சனின் அபாரமான காப்புகள் ஸ்கோர் 1-0-வென்றே தொடர காரணமாய் இருந்தன. குறிக்காக Dempsey-ம், Findley-ம் இணைந்து தொடுத்த தாக்குதலை கிங்ஸன் காலால் தடுத்தது just brilliant.
இரண்டாவது பாதியில் களமிறங்கிய Benny Feilhaber உடனேயே கோல் அடிப்பதற்கு வெகு அருகில் சென்றார். கிங்ஸனின் aggressive save-தான் மீண்டும் கானாவை காப்பாற்றியது.
62-வது நிமிடத்தில், பெனால்டி பாக்ஸுக்குள் Dempsey-ன் பிரவேசம் கானாவுக்கு ஆபத்தைக் கட்டியம் கூற, தடுக்க முயன்ற கானா வீர மென்ஸா, டெம்ப்ஸெயை வீழ்த்தியதால் அமெரிக்காவுக்கு பெனால்டி. டோனொவன் தன் திறமையையும் அனுபவத்தையும் முழுமையாய் உபயோகித்து, மீண்டுமொருமுறை அமெரிக்காவுக்கு கோல் அடித்து 1-1 ஆக்கினார்.
அதன் பின், அமெரிக்காவுக்கு சில வாய்ப்புகள் கிடைத்த போதும், கானாவின் துல்லியமான டிஃபென்ஸ் ஆட்டத்தை extra time-க்குள் கொண்டு போனது.
ஆட்டத்தின் தொடக்கத்திலேயே கோல் அடித்தது போலவே எக்ஸ்டிரா டைமின் முதல் சில நிமிடங்களிலேயே கோல் அடித்து 2-1 ஆக்கியது கானா. அயூவின் லாங் பால், கானாவுக்கு நிறைய கோல்கள் அடித்துள்ள கியானை அடைய, இரு டிஃபெண்டர்களை மீறி கச்சிதமாய் கோல் கீப்பரைக் கடந்து பந்தைச் செலுத்தி 2-1 ஆக்கினார்.
மரண அடி. அமெரிக்காவால் மீள முடியவில்லை.
ஆட்டம் நடக்கும் நாடு அடுத்த சுற்றுக்கு தகுதி பெற முடியவில்லை எனினும், ஆட்டம் நடக்கும் கண்டத்திலிருந்து ஒரு நாடு கால்-இறுதிக்கு தகுதி பெற்ற போது அரங்கம் ஆர்ப்பரித்தது.
நாக் அவுட் ரவுண்டின் இரண்டாவது நாளின் முதல் போட்டியை உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது.
ஞாயிற்றுக் கிழமை அன்று சௌகரியமான வேளையில் இரு பெரும் அணிகள் மோதுவதைப் பார்ப்பது என்பது சாமானியமாய் நடப்பதா என்ன?
ஜெர்மனியும் இங்கிலாந்தும் நேற்று மோதின.
இங்கிலாந்தின் வீரர்கள் மிகப் பிரபலமானவர்கள். இந்தியாவுக்கு கிரிக்கெட்டைப் போல இங்கிலாந்துக்கு கால்பந்து. இங்கிலாந்து ஆடும் நாட்களில் நாடே ஸ்தம்பித்து விடும் அளவுக்கு கால்பந்து பிரியர்கள். ஒவ்வொரு முறையும், பிரிட்டிஷ் மீடியா இவர்களை ஏற்று விட்டு, தோற்கும் போதெல்லாம் பின்னிப் பெடலெடுக்கும்.
இம்முறை இரண்டாவது ரவுண்டுக்கே தகுதி பெறுமா பெறாதா என்று கேள்வியை எழுப்பி, ஒரு வழியாய் முதல் சுற்றைக் கடந்து இரண்டாம் சுற்றுக்குள் நுழைந்தது இங்கிலாந்து. ரூனி, லாம்பார்ட், ஜோ கோல், போன்றோர் எல்லாம் அவரவர் கிளப்புக்கு ஆடுவதில் 10-ல் ஒரு பங்கைக் கூட நாட்டுக்காக விளையாடும் போது ஆடுவதில்லை என்பது திண்ணம்.
ஜெர்மனியும் செர்பியாவுடன் தோற்று ஜெர்மன் ரசிகர்கள் வயிற்றில் புளியைக் கரைத்தாலும், கானாவுடன் சிறப்பாக விளையாடியது. Ozil, Muller, Podolski போன்ற பல இளைஞர்களைக் கொண்ட அணி ஜெர்மனி. ஃபிலிப் லாம், ஷ்வைன்ஸ்டைகர், க்ளோசா போன்ற அனுபவசாலிகளும் அணிக்கு வலு சேர்க்கின்றனர்.
ஆட்டத்தில் ஜெர்மனி ஜெயிக்க வாய்ப்பு கூட எனினும், ஆட்டம் சுவாரஸ்யமான ஒன்றாய் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஸ்லோவீனியாவுடனான ஆட்டத்தில் இங்கிலாந்தின் ஆட்டம் சிறப்பாக அமைந்ததும் எதிர்பார்ப்பைக் கூட்டியது.
ஆட்டத்தின் முதல் இருபது நிமிடங்களில் பந்து இங்கிலாந்திடமே இருந்த போதும் கோல் அடிப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை. இத்தனைக்கும் இங்கிலாந்தின் மிட் ஃபீல் முழுவதும் அதிரடியில் இறங்கியிருந்தது. தற்காக்க வேண்டிய டெர்ரி போன்றோர் கூட கோல் அடிப்பதில் முனைப்பாக இருந்தனர். 20-வது நிமிடத்தில் ஜெர்மனியின் கோல் கிக் கிட்டத்டஹ்ட்ட ஜெர்மன் ‘டி’ வரை வந்துவிட, இங்கிலாந்தின் காப்பாளர்களான டெர்ரியும், அப்ஸனும் உருவாகும் அபாயத்தை உணராமலிருந்ததைப் பயன்படுத்தி க்ளோஸா பந்தை எப்படியொ கவர்ந்து, அப்சனின் கடைசி நிமிட ஊடுருவலை சமாளித்த படியே பந்தை கோல்கீப்பர் ஜேம்ஸைத் தாண்டி அடிக்க ஸ்கோர் 1-0 ஆனது.
அதன் பின்னும், இங்கிலாந்து தற்காப்பை அலட்சியமாகவே செய்தது. விரைவிலேயே இன்னொரு முயற்சியில் தாமஸ் முல்லர் கோல் வரை வந்து, தனியாக இருந்த பொடோல்ஸ்கியிடம் பந்தைக் கொடுக்க ஸ்கோர் 2-0. இத்தனைக்கும் பொடோல்ஸ்கியின் first touch கச்சிதமாய் அமையவில்லை. அதைச் சமாளித்து கோல் அடிக்கும் வரை கூட அவரை எந்த இங்கிலாந்து வீரரும் நெருங்கவில்லை. முதல் கோலுக்கும் இரண்டாவது கோலுக்கும் இடையே இன்னொரு வாய்ப்பு கிளோசாவுக்கு வாய்த்தது. நல்ல காலம் ஜேம்ஸிடம் பந்து நேராக சென்றதால் ஸ்கோர் 3-0 ஆகாமல் தப்பித்தது.
இங்கிலாந்தைப் பார்த்து ஆட்டத்தை ஜெர்மனி மாற்றிக் கொண்டதோ என்று எண்ணும் வகையில் இங்கிலாந்தின் முதல் கோல் அமைந்தது. லாம்பார்டின் ஷார்ட் கார்னர், ஜுராட்டுக்கு வர, அவர் அதை கிராஸ் செய்ய, ஜெர்மன் வீரர்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கையில் அப்டன் தலையால் கோலாக்கி ஸ்கோரை 2-1 ஆக்கினார்.
இங்கிலாந்துக்கும் ஜெர்மனிக்கும் இடையில் நடக்கும் ஆட்டங்கள் எல்லாம் எதேனும் சர்ச்சையைக் கிளப்பும். இந்த ஆட்டத்தின் சர்ச்சை முதல் கோல் அடித்த 60 வினாடிகளுக்குள் எழுந்தது.
லாம்பார்டின் ஃப்ரீ கிக், ஜெர்மன் சுவற்றைக் கடந்து, கோல்கீப்பரையும் கடந்து, கோலுக்குள் செல்வதற்கு பதிலாய், போஸ்டில் பட்டு கீழ் நோக்கி விழுந்தது. விழுந்த பந்து கோல் கோட்டுக்குள் விழுந்த போதும் கோல் மறுக்கப்பட்டது. இந்த உலகக் கோப்பையில் பல சொதப்பல்களை ரெஃப்ரீகளும் லைன்ஸ்மென்களும் செய்துள்ளனர். ஒவ்வொரு ஆட்டம் முடிந்த பின்னும், ஏதெனும்ம் காரணத்துக்காக தொழில்நுட்பத்தை ஆட்டத்தில் புகுத்தி தவறுகளைக் குறைக்க வெண்டும் என்று வல்லுனர்கள் கருத்து தெரிவித்துக் கொண்டே இருக்கின்றனர். இங்கிலாந்து 2-2 என்று ஸ்கோரை ஆக்கியிருந்தால் ஆட்டமே மாறியிருக்கக் கூடும்.
முதல் பாதியின் முடிவில் ஸ்கோர் 2-1 என்று இருந்தது. இங்கிலாந்து சொதப்பினாலும், அரையின் முடிவில் முன்னேற்றத்துக்கான் அறிகுறிகள் தெரிகின்றன என்று ரசிகர்கள் நினைத்திருக்கக் கூடும். இரண்டாம் பாதியின் இன்னும் சிறப்பாக ஆடுவார்கள் என்ற நினைப்பு வீணாய் போனது.
தொடக்கத்தில் ஜெராட்டும் லாம்பார்டும் நன்றாக விளையாடினாலும் கொல் அடிக்க முடியவில்லை.
கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாய், இருந்த சொற்ப டிஃபென்ஸும் இல்லாமல் போனது.
கோல் அடிக்கிறேன் பெர்வழி என்று தங்கள் அரையில் ஒருவருமே இல்லாமல் எக்ஸ்போஸ் செய்தரனர் இங்கிலிஷ் வீரர்கள். இதனைப் பயன்படுத்தி இரு counter attack (இதை அப்படியே முதலில் டைப் அடித்தேன். ஜாதி கலவரம் வந்துவிடுமோ என்று பயந்து ஆங்கிலத்துக்கு மாற்றினேன்) மூலம் ஸ்கோரை 4-1 ஆக்கியது ஜெர்மனி. இரு கோகளையும் தாமஸ் முல்லர் துல்லியமாய் அடித்தார்.
ஜெர்மனியின் நான்காவது கோலின் போது பந்தைக் கவர்ந்து ஓடிய Ozil-ஐ சிறிது துரத்துவது போலத் துரத்திவிட்டு நின்று விட்ட டிஃபெண்டர்களைப் பார்க்க அதிர்ச்சியாய் இருந்தது.
அதன் பின் ஆட்டம் சடங்குக்குத்தான் நடை பெற்றது. இங்கிலாந்து தோல்விக்கு காரணம் கூற ரெஃப்ரீயின் பிழை கிடைத்துவிட்டது. நேற்றிரவே naukri.com-ல் இங்கிலாந்து கோச் கபெல்லோவின் ரெஸ்யுமே காணக் கிடைத்தாக நம்பத் தகுந்த வட்டாரங்களில் வந்து செய்திகள் தெரிவிக்கின்றன.
நான்காவது ஆட்டத்தில் tournament favorite அர்ஜெண்டினாவை மெக்ஸிகோ எதிர்கொண்டது.
எதிர்பார்த்தது போலவே அர்ஜெண்டினாவுக்கு சுலபமான வெற்றி.
மெஸ்ஸி இந்த ஆட்டத்திலும் மிகச் சிறப்பாக விளையாடியும் கோல் அடிக்கவில்லை. இவரையே எதிரணிகள் சூழ்ந்து கொள்வதால் Tevez, Higuen போன்றோர் சுலபமாக விளையாட முடிகிறது. யாரடித்தாலும் கோல்தானே? அதனால் அர்ஜெண்டினாவும் சுலபமாக வென்று வருகிறது.
இந்த ஆட்டத்தின் முதல் கோலை டெவேஸ் அடித்தார். சர்வ நிச்சயமாய் off-side position-ல் இருந்து கோலை அடித்தார் என்ற போதும் லைன்ஸ்மென் அதைக் கண்டு கொள்ளாததால் 1-0 ஆனது.
மெக்சிகோ டிஃபெண்டர் என்ன நினைத்தார் என்று தெரியவில்லை. கோலருகில் இருந்து கொண்டு பந்தை அர்ஜெண்டினா striker Higuen இடம் அளித்து அனுப்பி வைத்தார். ஏற்கெனவே 3 கோல் அடித்து கோல்டன் பூட்டுக்கு போட்டியிடும் ஹிகிவேனா விடுவார் வாய்ப்பை? ஸ்கோர் 2-0.
ஹிகுவேனின் ஹெட்டர் நிதானமாக ஆடப்பட்டிருப்பின் முதல் அரையிலேயே ஸ்கோர் 3-0 ஆகியிக்கும்.
இரண்டாவது பாதியின் ஆறாவது நிமிடத்தில் வெற்றியை நிச்சயமாக்கினார் டெவேஸ். கோலின் top right corner டெவேஸ் அடித்த கோல் will definitely be one of the goals of the tournament.
அர்ஜெண்டினா சுலபமாக வென்றாலும் அவர்களுடைய தற்காப்பும் கொஞ்சம் shaky-ஆகவே தென் படுகிறது. Favorite tag வேறு அவர்களுக்கு நெருக்கடியை உண்டாக்கக் கூடும். ஜெர்மனிக்கு எதிரான காலிறுதிப் போட்டியில் டிஃபென்ஸ் இன்னும் இறுக்கமாக இருக்க வேண்டும். அசிரத்தை ஆபத்தாய் முடியும் என்பதற்கு உதாரணமாய் மெக்சிகோவின் consolation goal அமைந்தது. சில வாய்ப்புகளை தவற விட்ட ஹெர்னாண்டெஸ் கச்சிதமாய் கோலடித்து 3-1 ஆக்கினார்.
இப்படியாக வார இறுதியின் இரு நாட்களும் இனிதே டிவியின் முன் கழிந்தன.
ஜூன் 27, 2010
சயாகா சாடோவுக்கு எதிரான இறுதிப் போட்டி சில வினாடிகள் முன் முடிவடைந்தது.

சாய்னா நெஹ்வால் இரண்டாவது முறையாக இந்தோனேஷிய ஓபன் போட்டியை வென்றுள்ளார். மூன்று வாரங்களில் மூன்றாவது பட்டம் வெல்லும் சாய்னா உலக த்ர வரிசையில் மூன்றாம் இடத்தில் உள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
நியோ ஸ்போர்ட்ஸ் தயவில் முழு ஆட்டத்தைப் பார்க்க முடிந்தது. சாடோ தர வரிசையில் 26-வது இடத்தில் இருப்பினும் மிகப் பிரமாதமாக ஆடினார்.
கோர்டின் ஒரு பக்கத்தில் காற்று சற்றே சாதகமாக இருந்தது. சாய்னா முதலில் அதைப் பயன்படுத்து 11-5 என்று முன்னணியில் இருந்தார். 11 புள்ளிகள் எடுத்ததும் கோர்ட்டின் எதிர்பக்கத்துக்கு மாற்ற சாடோ ஸ்கோரை சமன் செய்தார். 11-11-க்கு பிறகு இருவரும் மாறி மாறி புள்ளிகள் வென்றனர். ஒரு கட்டத்தில் முதன் முறையாக சாடோ 18-17 என்று லீடைப் பெற்றார். அதன் பின் சாய்னா துல்லியமாக ஆடி 21-19 என்று முதல் கேமை வென்றார்.
சாடோவை பவர் கேம் கொண்டு ஜெயிக்க நினைத்த முயற்சிகள் எல்லாம் வீணாகவே போயின. அடிக்கு அடி கொடுப்பதில் சாடோ வல்லவராகத் தெரிகிறார். அதிகம் வலக்கை ஆட்டக்காரர்களை எதிர் கொள்வதால், இடக்கை ஆட்டக்காரரை எதிர்கொள்ளத் தேவையான மாற்றங்களை உடனுக்குடன் செய்து கொள்வதில் சாய்னாவுக்கு கொஞ்சம் சங்கடம் இருப்பதாகத் தெரிந்தது.
இரண்டாவது கேமில் சாடோவின் டிராப் ஷாட்களும் கடினமான angle-களும் ஆட்டத்தை அவருக்கு சாதகமாக்கின. 6 புள்ளிகள் பின்ண்டைவு அடைந்ததும் சாய்னா கொஞ்சம் எரிச்சலுற்றவராய் தெரிந்தார். அவப்போது நல்ல புள்ளிகளை சாய்னா வென்றாலும் சாடோ சுலபமாக வென்றார்.
கேம் விவரம் 1-1 என்றா போடு மொமெண்டம் சாடோவின் பக்கம்.
மூன்றாவது கேமில் சாய்னா பவர் ஆட்டத்தை அறவே தவிர்த்து பொறுமையாய் எதிராளி தவறு செய்யும் வரை காத்திருக்கும் ஆட்டத்துக்குத் தாவினார். சாடோவும் பிர்ஷரைத் சரியாக எதிர் கொள்ளத் தெரியாதவராய் நிறைய தவறிழைத்தார். காற்று தன் பக்கம் இருக்கும் போதும் அதனை உபயோகிக்காமல் over push செய்தது சொந்த செல்வில் சூனியம்.
மூன்றாம் கேமை வென்று பட்டம் பெற்ற சாய்னாவுக்கு வயது இருபதே.
அதிகம் படாடோபம் இன்று, மீடியா வலைக்குள் விழாமல், ஆட்டத்தை மட்டும் கவனம் செலுத்தி இமாலய முன்னேற்றம் அடைந்துள்ளார் சாய்னா.
விரைவில் நம்பர் 1 இடத்தைப் பிடிக்க வாழ்த்துகள்.
ஜூன் 26, 2010
மூன்றாம் சுற்றில் பெரும் தலைகளுக்கு எல்லாம் சுலபமாக வெற்றி.
ஃபெடரர், கடந்த ஆண்டுகள் போல சுலபமாய் நேர் செட்களில் கிளிமெண்டை வென்றார்.
டென்னிஸில் மிகச் கடினமான ஷாட்களுள் backhand down the line-ஐ சொல்லலாம். அதைக் கட்டுபடுத்தி சரியான இடத்தில் பந்தைச் செலுத்துவது சுலபமல்ல. ஃபெடரர் திருமத் திரும்ப அந்த ஷாட்டை அலட்சியமாகவும் துல்லியமாகவும் விளையாடியது, அவருடைய எதிராளிகளுக்கு ஓர் எச்சரிக்கை.

எட்டு கேம்கள் மட்டுமே இழந்து சுலபமாய் அடுத்த சுற்றுக்குள் நுழைகிறார் ஃபெடரர்.
விம்பிள்டனில் ஃபெடரரி விட John Isner-க்கே நேற்று ரசிகர்கள் அதிகம் தென்பட்டனராம். 11 மணி நேர போராட்டத்துக்குப் பின் Mahut-ஐ வென்று சாதனை படைத்த Isner-ஐ உடனே அடுத்த ரவுண்டில் ஆடச் சொன்னால் எப்படி முடியும்? Sore feet, Stiff neck, Tired shoulders….ஹ்ம்ம்ம் பாவம் 75 நிமிடங்களில் பொட்டலம் கட்டப்பட்டுவிட்டார். எதிர்பார்த்ததுதான்.
போன ரவுண்டில் Isner-ன் சர்வீஸை பிரேக் செய்ய Mahut பாடாய்ப் பட்டார். இந்த ரவுண்டிலோ முதல் கேமிலேயே பிரேக் செய்துவிட்டார் De Bakker.
அடுத்த Isner ஆண்டு Mahut உடன் மோத வேண்டும் என்றால் ஒரு வாரம் முனனாடியே ஆடிவிடுவது நலம்.
Djokovic, Hewitt ஆகியோருக்கும் சுலபமான வெற்றிகள். ஹெவிட் – மொன்ஃபிஸ் ஆட்டத்தில் ஒரு பாயிண்டை Play of the day-ல் காட்டினார்கள். எட்டவே முடியாத பேக்ஹேண்டை மொன்ஃபிஸ் திருப்பி அனுப்ப, புல் தலையில் சறுக்கிய படி full stretch-ல் பந்தை மீட்டு பாயிண்டை வென்ற ஹெவிட்டின் ஷாட் சூப்பர். விம்பிள்டனுக்கு முன்னால் நடந்த புல்தரை போட்டியில் ஃபெடரரை ஹெவிட் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. 2002-ல் விம்பிள்டன் சாம்பியனான இவர், அடுத்தடுத்த வருடங்களில் பெரும்பாலும் ஃபெடரரால் தோற்கடிக்கப்பட்டவர். இந்த ஆண்டும் அதே நிலை தொடருமா?
சென்ற வருட ரன்னர்-அப் ஆண்டி ராடிக் 4 செட்களில் தன் மூன்றாவது சுற்றை வென்றார். ராடிக்கின் பலம் அவர் சர்வீஸ். சென்ற ஆண்டு போலவே இந்த ஆண்டும் அவரது முதல் சர்வ் சதவிகிதம் கணிசமாக இருந்து அவர் வெற்றிகளைச் சுலபமாக்குகின்றது. தொடர்ந்து சர்வீஸ் சமர்த்துப் பிள்ளையாய் இவர் சொன்ன படிக் கேட்டால் இந்த வருடமும் இவர் இறுதிச் சுற்று வரை முன்னேற முடியும்.
இன்று நடால், முர்ரே முதலானோரும் மூன்றாம் சுற்று ஆட்டம் நடக்கும்.

பெண்கள் பிரிவில் Comeback Belgians, Henin-ம் Clijsters-ம் நான்காம் சுற்றில் மோதுகின்றனர். இருவருமே முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனைகள். இருவருமே ரிடையர் ஆகி, பிறகு ரிடையர்மெண்டுக்கு ரிடைரர்மெண்ட் கொடுத்திருப்பவர்கள். பழைய மாதிரி என்றால் இந்த இரு தலைகளும் அரை இறுதிப் போட்டிக்கு முன் மோதியிருக்காது. வெகு நாள் கழித்து ஆடுவதால், அவர்களுடைய ராங்கிங்/சீடிங்குக்கு ஏற்ப போடப்பட்ட டிராவின் படி நான்காம் சுற்றிலேயே மோதுகின்றனர். குழந்தை பெற்ற பின் ஆடிய முதல் கிராண்ட் ஸ்லாமான 2009 அமெரிக்க ஓபனை Clijsters வென்று சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நேற்று ஃபெடரர் ஆட்டத்தின் போது மட்டும் ஸ்டார் கிரிக்கெட்டில் விம்பிள்டன் ஒளிபரப்பினார்கள். தொடர்ந்து செய்தால் புண்ணியமாய் போகும்.
ஜூன் 26, 2010
Group H-ன் கடைசி இரு ஆட்டங்களுள் ஒன்றில் ஸ்பெயினும் சிலேவும் மோதுகின்றன.
ஸ்பெயின் வழக்கமாய் உலகக் கோப்பை என்றாலே தனது திறமையில் பாதிக்கும் குறைவாய் உபயோகித்து தோல்வியைத் தழுவும்.
2008-ல்தான் முதல் முறையாக உலக அரங்கில் ஸ்பெய்ன் வெற்றியைக் கண்டது. ஐரோப்பாவின் தற்போதைய சாம்பியன் ஸ்பெய்ன். டேவிட் வில்லா, ஃபாப்ரிகாஸ், டொரேஸ், காஸியாஸ், புயோல், Xavi, Iniesta என்று நட்சத்திர பட்டாளமே ஸ்பெயின் அணியில் உண்டு.
ஸ்விட்சர்லாந்துக்கு இரண்டு கோல் அடிக்க இன்னும் 3 நிமிடங்கள் உள்லன. ஆட்டத்தைப் பார்த்தால் ஹொண்டுராஸ் கோல் அடித்துவிடும் போலிருக்கிறது.
அர்ஜெண்டினாவுக்கு இணையான அணி என்று பலர் நினைத்திருந்த நேரத்தில், முதல் ஆட்டத்தில் ஸ்விட்சர்லாந்திடம் அதிர்ச்சி தோல்வியுற்றது ஸ்பெய்ன். ஆட்டம் முழுவது அதிரடியாய் ஆடிய போதும் ஸ்விட்சர்லாந்தின் தற்காப்புக் கோட்டையை தகர்க்க முடியவில்லை. ஃபினிஷிங்கில் துல்லியம் இல்லாததால் தோற்றனர். அடுத்த ஆட்டத்தில் ஹொண்டுராஸை வென்றாலும் முதல் ரவுண்டிலேயே வெளியில் செல்லும் அபாயத்தில் இருக்கிறது ஸ்பெய்ன். இன்று ஜியித்தே ஆக வேண்டும். ஆட்டம் டிரா ஆகி, இன்னொரு ஆட்டத்தில் ஸ்விஸ் ஜெயித்தால், It is all over for Spain.
திறமையை முழுமையாக பயன்படுத்தி அடுத்த சுற்றுக்குச் செல்வார்களா அல்லது Perennial Underachiever என்ற பெயரைத் தக்க வைத்துக் கொள்வார்களா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
Qualification-ல் 10 வெற்றிகள் பெற்று, சிலே பிரேஸிலுக்கு அடுத்ததாக தென் அமெரிக்க பிரிவில் தேர்வானது. இதுவரை ஆடிய இரண்டு ஆட்டங்களிலும் வெற்றியைப் பெற்றுள்ளது.
சிலேயின் ஆட்டத்தை opportunistic என்று சொல்லலாம். வாய்ப்பு கிடைக்கும் போது கோல் அடிப்பது அதே சமயத்தில் தற்காப்பை air tight-ஆக வைத்திருப்பது. இதுவே மேட்ச் ஸ்டிராடிஜி. அர்ஜெண்டினாவின் முன்னாள் கோச் மார்ஸெலோ பியஸ்லா இப்போதைய சிலே கோச். குரூப்பின் முதல் இடத்தில் சிலே இருந்தாலும் அடுத்த ரவுண்டுக்கு போகாமல் வெளியேறும் வாய்ப்பும் சிலேவுக்கு உண்டு.
ஸ்விட்சர்லாந்து ஹொடுராஸை ஜெயித்து, ஸ்பெயினும் சிலேவை ஜெயித்தால் மூன்று அணிகளும் தலா ஆறு புள்ளிகள் பெற்ரிருக்கும். அப்போது கோல் விகிதப்படு அடுத்த கட்ட முன்னேற்றம் நிரணயிக்கப்படும். இது வரை சிலே 2 கோல்கள்தான் அடித்துள்ளது. இன்று சிலே கோலே அடிக்காமல், ஸ்விட்சர்லாந்தோ ஹொண்டுராஸுக்கு எதிராக நிறைய கோலடித்துவிட்டால் சிலேவுக்கு சங்கடம். ஸ்பெய்ன் சுவிட்சர்லாந்திடம் தோற்றதற்கு ஸ்பெயினை விட சிலேவே அதிகம் வருந்தி இருக்கும்:-)
Itz anybody’s game. Let us see what happens!
ஃபாப்ரிகாஸுக்கு இன்றும் துவக்க அணியில் இடமில்லை. டொரேஸும், வில்லாவும் ஸ்டிரைக்கர்கள். Xavi-யும் அவருடம் பார்ஸிலோனாவுக்கு ஆடும் இனியெஸ்டாவும் மிட்ஃபீல்டர்கள் என்றாலும் அதிரடியாய் ஆடுபவர்.
ஸ்பெயின் இது வரை சிலேயிடம் தோற்றதே இல்லையாம். போன வாரம் வரை சுவிட்ஸர்லாந்திடம் கூடத்தான் தோற்றதில்லை. அதை வைத்து ஒன்றும் சொல்வதற்கில்லை.
கடந்த இரு ஆட்டங்களில் சிலே 5-2-3 ஃபார்மேஷனை உபயோகித்தது போலவே இன்றும் களமிறங்கியுள்ளது.
சிலேயின் playmaker Alexis Sanchez மிட்ஃபீல்டைத் துளைத்து சிலே ஸ்டிரைக்கர்களுக்கு கோலடிக்க ஏதுவான களன் அமைத்துக் கொடுப்பதில் வல்லவர். ஸ்பெயின் இவரிடம் ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
ஸ்பெயினின் தோல்விக்கு ஒரு காமடியான காரணமும் கூறப்படுகிறது. விவரம் இங்கே http://news.spreadit.org/sara-carbonero-iker-casillas-girlfriend/
ஆட்டம் தொடங்கிவிட்டது. யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல சிலே தற்காப்பில் சொதப்பி கிட்டத்தட்ட டொரேஸ் கோல் அடித்துவிடுகிறார்.
முதல் எட்டு நிமிடங்கள் ஸ்பெயின் வசமே பந்து. இப்படித்தான் முதல் ஆட்டத்திலும் இருந்தது. பந்தை 75% நேரம் வைத்திருந்த போதும் ஸ்பெயினால் கோல் அடிக்க முடியவில்லை.
சிலேக்கு முதல் வாய்ப்பு. புயோலும் செர்ஜியோவும் சேர்ந்து சிலே வீரரைத் தள்ள பெனால்டி ஏரியவுக்கு வெளியில் ஃப்ரீ கிக். நேராக ஸ்பெயின் வீரல் காலில் அடிக்க வீணாகிறது.
11-வது நிமிடத்தில் சிலேவுக்கு பொன்னான வாய்ப்பு. பிரமாதமான மூவ். சிலே வீரர் Beausejour முதலில் ஒரு டம்மி மூவ் மூலம் ஸ்பெயின் டிஃபென்சை தகர்த்து பந்தை கோலுக்கு 6 யார்ட் தூரத்தில் உள்ள Gonzalez இடம் அடிக்கிறார். அவர் சொதப்பு பந்து off target. A great chance missed.
Sanchez மாயம் புரிகிறார். பாக்ஸின் முனையிலிருந்து பந்தை சிப் செய்ய கோல்கீப்பர் விழிப்பாய் இருந்ததால் தட்டிவிடுகிறார்.
முதல் எட்டு நிமிடங்களுக்கு நேர்மாறாய் அடுத்த எட்டு நிமிடங்களை சிலே கட்டுப்படுத்தி, ஸ்பெயினை சங்கடத்துள் ஆழ்த்தியுள்ளது.
இதுவரை ஒரு மஞ்சள் அட்டை கூட வாங்காத ஒரே நாடு ஸ்பெயினாம். ”ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்களோ? ”, என்று நினைக்கும் விதத்தில்தான் ஸ்பெயினின் ஆட்டம் அமைந்துள்ளது:-)
19 நிமிடங்களுக்குள் சிலேவுக்கு இரண்டு மஞ்சள் அட்டைகள். இருவருமே முன்னாலேயே மஞ்சள் அட்டை வாங்கியவர்கள் என்பதால் அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாது. அதிலும் Ponce செய்தது அராஜகம். டொரேஸை வேண்டுமென்றே அவரது பழுதான வலது காலில் எட்டி உதைத்தார்.
21-வது நிமிடத்தில் Estrada-வும் ரெஃப்ரீயின் புத்தகத்தில் இடம் பெறுகிறார்.
இவ்வளவு நன்றாக ஆடும் அணி ஏன் இத்தனை ஃபௌல் செய்ய வேண்டும் என்று புரியவில்லை.
What a Goooooooooooooaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaaal!!!!!
சிலேயின் வீரர்கள் எல்லாம் ஸ்பெயினின் அரையில் இருக்க பந்து சிலே அரைக்குள் விரைகிறது, விரைந்து வந்த டொரேஸின் காலில் சிக்கினால் கோலுக்கும் அவருக்கும் இடையில் கோல்கீப்பர் ஒருவர்தான். அதனால், கோல்கீப்பர் பந்தை பெனல்டி ஏரியாவுக்கு வெளியில் வந்து கிளியர் செய்கிறார். துரதிர்ஷ்டவசமாக பந்து டேவிட் வில்லாவிடம் செல்ல, 40 யார்ட் தொலைவில் இருந்து ஆளில்லா கோலை நோக்கி பந்தை துல்லியமாய் அடித்து 1-0 ஆக்குகிறார் வில்லா.
இந்த உலகக் கோப்பையில் leading goal scorer வரிசையில் சேர்ந்து கொள்கிறார் வில்லா.
34-வது நிமிடத்தில் இன்னொரு நல்ல சிலே முயற்சி. Spain defender Piquet தக்க சமயத்தில் குறுக்கே வர Beausejour கோலுக்கு சில செண்டிமீட்டர் வெளியே பந்தை அடிக்கிறார்.
It is 2-0!!!!!!!!!!!!!
Iniesta கோலின் இட முனையில் கோல்கீப்பருக்கு எட்டா வண்ணம் லாவகமாய் இரண்டாவது கோலை அடிக்கிறார். டேவிட் வில்லாவுக்கும் அவருக்கும் நடந்த exchange நச் சிம்ப்ல்ய் சுபெர்ப்! கோலுக்கான பில்டப்பின் போது டொரேஸ் வீழ்த்தப்படுகிறார். வீழ்த்திய Estrada ஏற்கெனவே மஞ்சள் அட்டை பெற்றவர். இன்னொரு மஞ்சள் அட்டை பெற்றதால் ஆட்டத்தில் இருந்து நீக்கப்படுகிறார். Estrada தடுக்குவிட்டது உண்மைதான் என்றாலும் டொரேஸின் reaction exaggerated என்றே தோன்றுகிறது. ரெஃப்ரீயின் இந்த முடிவு அதீதமான ஒன்று என்றே ரீப்ளேயைப் பார்க்கும் போது தோன்றுகிறது. பாவம் சிலே.
It is a 10 men chile against the rampaging Spaniards now!!!!!!
சுவிட்ஸர்லாந்து ஜெயிக்காமல் இருக்க சிலே ரசிகர்கள் பிரார்த்தனை செய்ய ஆரம்பிக்கலாம்.
சிலே தளந்து காணப்படுகிறது. இடைவேளை அவர்களை நிதானப்படுத்தக் கூடும். 2-0 முன்னிலை பெற்ர போது கூட அணிகள் பலமுறை தோற்றதுண்டு. சிலே தளராமல் ஆட வேண்டும்.
மற்றொரு ஆட்டத்தில் ஸ்கோர் இன்னும் 0-0.
ஸ்கோர் விவரத்தைப் பார்த்தால் சிலே நன்றாக விளையாடவில்லை என்று தோன்றக் கூடும். ஆனால் statistics-ஐப் பார்த்தால் Shots on Goals, Shots on target, Posession ஆகியவை எல்லாம் இரு அணிகளுக்கும் சமமாகவே உள்ளன. சிலேஅதிர்ஷ்டமின்மையும், முரட்டு ஆட்டத்தால் கிடைத்த கலர் கலர் அட்டைகளுமே அவர்கள் பின்னடைவுக்குக் காரணம். முந்தைய ஆட்டங்களில் காணக் கிடைத்த ஊடுருவ முடியா தற்காப்பு இந்த ஆட்டத்தில் மிஸ்ஸிங்.
ஸ்பெயின் யூரோ சாம்பியன்கள் எப்படி ஆட வேண்டுமோ அப்படி ஆடுகின்றனர். டொரேஸை வீழ்த்துவதிலேயே சிலே குறியாக இருப்பதால், மற்றவர்கள் சுலபமாக நகர்கின்றனர். ஸ்பெயின் அடித்த இரு கோல்களும் மணியானவை.
கோலைத் தவிரவும் ஃபுட்பாலை ரசிக்கவல்லவர் நீங்கள் எனில், ஆட்டத்தின் பல கணங்கள் தங்களை மகிழ்வித்திருக்கும்.
Half time-ல் இரண்டு சப்ஸ்டிடுயூஷன் சிலேக்கு. பதொனொரு பேரை பத்து பேரை வைத்தி ஈடு செய்வது பெரும் பா….oh itzzzzzzz a gooooooooooaaaaaaaaaaaaaaal for Chile. What a start for the second Half.
வந்து இரண்டு நிமிடங்களே ஆன Millar கோல் நோக்கி அடிக்க பந்து Piquet-ன் மேல் பட்டு கோல்கீப்ப்ரை ஏமாற்றுகிறது.
Just the kind of luck Chile needed.
இருக்கும் லீடை காப்பதா, இல்லை இன்னும் அதிகரிப்பதா என்று ஸ்பெயின் குழம்பும். அதை சரியாக சிலே பயன்படுத்திக் கொண்டால் இன்னொரு கோல் கூட அடிக்கலாம்.
55-வது நிமிடத்தில் டொரேஸுக்கு பதிலாக ஃபாப்ரிகாஸ் களமிறங்குகிறார்.
ஸ்விட்ஸர்லாந்து இன்னும் கோல் அடித்தபாடில்லை. மூன்று அணிகளும் எக்கச்செக்க டென்ஷனில் இருக்கும்.
இன்னும் 35 நிமிடத்தில் மூன்றில் ஒரு நாடு போட்டியை விட்டு வெளியேறும்.
இடைவேளைக்குப் பிறகு சிலே எச்சரிக்கையுடன் விளையாடுகிறது. இனியும் ஆளை வீழ்த்திக் கொண்டிருந்தால் அடுத்த ரவுண்டுக்கு போனாலும் பலர் ஆட முடியாத நிலை ஏற்பட்டு விடும். ஏற்கெனவே மூன்று பேர் அடுத்த ஆட்டத்தில் இடம் பெற முடியாத நிலையில் உள்ளனர்.
60-62 நிமிடங்களுக்குள் ஃபாப்ரிகாஸ் இரண்டு முறை டேவிட் வில்லாவுக்கு அற்புத பாஸை டிக்குள் அளிக்கிறார். பந்தை தன் வசப்படுத்த முடியாமல் இரு முறையும் தவறவிடுகிறார் வில்லா.
கடந்த ஐந்து நிமிடமாக பந்து சிலேவின் கோல் அருகிலேயே வலம் வருகிறது. வில்லாவின் முயற்சிகளை துல்லியமான தற்காப்பு தகர்க்கிறது. டி-க்குள் டிஃபெண்ட் செய்வதற்கு பெரும் சாமர்த்தியம் வேண்டும். கரணம் தப்பினாலும் எதிராளிக்கு பெனால்டியையோ கோலையோ கொடுத்துவிட முடியும். சிலே இதுவரை இரண்டாம் அரையில் துல்லியமாகவே தற்காக்கிறது.
65-வது நிமிடத்தில் சிலேயின் கடைசி substitution நிகழ்கிறது. முதல் அரையில் கலக்கிய Sanchez வெளியேறுகிறார்.
இன்னொரு கோல் சிலே அடித்தால் அடுத்த ரவுண்டில் பிரேசிலுடன் மோதாமல் போர்ச்சுகலுடன் மோதலாம்.
இன்னும் 20 நிமிடங்கள் பாக்கி. ஸ்விட்ஸர்லாந்து இன்னும் கோலடிக்கவில்லை.
சிலே முழ்நேர தற்காப்பில் இறங்கிவிட்டது.
இரு அணிகளுக்கும் 2-1 என்ற முடிவு பெரும் பாதகத்தை விளைவிக்காது என்பதால், இரு அணிகளும்ற், ஒருவரை ஒருவர் ஆழம் பார்த்தபடி, நிதானமாய் ஆடுகின்றன. ஸ்பெயினுக்கு கோல் அடிப்பதைவிட கோல் விடாமல் இருப்பதுதான் இந் நேரத்தில் முக்கியம்.
பத்து பேரை வைத்துக் கொண்டும் சிலே லாவகமாய் ஆடுகிறது.
சிவிஸ் இரண்டு கோல் போடுமா? ஸ்பெயின் ஒரு கோலைக் கோட்டை விடுமா? ஸ்பெயின் இன்னொரு கோல் போட்டு சிலேவை திண்டாட்டத்தில் ஆழ்த்துமா?
எதுவானாலும் செய்ய இன்னும் 8 நிமிடங்கள்தான் உள்ளன.
இரு அணிகளும் நேரத்தைக் கடத்துகின்றன. யாரேனும் ஒருவர் பெரும் தவறை இழைக்காவிட்டால் ஸ்கோர் 2-1-லிருந்து மாறப் போவதில்லை.
கடைசி 90 வினாடிகள் பாக்கியிருக்கும் போது ஸ்விஸ் வீரரின் ஹெட்டர் நேராக ஹொண்டுராஸ் கீப்பர் கையில் போய் விழுகிறது. That, probably was the last bus missed.
It is all over.
ஸ்பெயின் தனது குரூப்பில் முதல் இடம் பெறுகிறது. சிலேயும் அடுத்த ரவுண்டுக்கு தேர்வாகிறது.
போன உலகக் கோப்பையில் குரூப் ஸ்டேஜில் சுலபமாக வென்ற ஸ்பெயின் இரண்டாவது ரவுண்டில் அதுவரை தடுமாறிக் கொண்டிருந்த ஃபிரான்ஸிடம் தோற்றது. இம்முறை அதற்கு ரிவர்ஸாக நடக்குமா பார்ப்போம். முதல் ஆட்ட சறுக்கலுக்குப் பின் ஸ்பயினின் ஆட்டம் சிறப்பாகவே உள்லது. போர்ச்சுகலுடனான ஆட்டத்தில் ஸ்பெயின் வெவத்ற்கான வாய்ப்பே அதிகம்.
சிலே பிரேசிலுடன் மோதுகிறது. இவர்கள் அடிக்கடி மோதியவர்கள்தான். On their day, சிலெ வெல்லக் கூடும். ஆனால் மூன்று ஆட்டக்காரர்களை அடுத்த ஆட்டத்தில் சிலே உபயோகிக்க முடியாது. சிலேவுக்கு அது பெரிய குறையாகத்தான் இருக்கும்.
Alrighty.
It was a Great game overall.
Thanks again for being here. Good night!
ஜூன் 26, 2010
Match of the first round என்று சொல்லத்தகும் ஆட்டம் இன்று.
பிரேசில் அடுத்த சுற்றுக்கு ஏற்கெனவே தகுதி பெற்றுவிட்டது. போர்ச்சுகல் போன ஆட்டத்தில் ஏழு கோல்கள் அடித்ததால் கிட்டத்தட்ட தகுதி பெற்றார் போலத்தான்.
துவக்க அணியில் பிரேசிலுக்கு ரொபினோ இல்லை. காகாவும் இன்று ஆட முடியாது. கோச் டுங்கா இரண்டாவது தர அணியைக் களமிறக்குவார் என்று எதிர்பார்க்கப்பட்டதுதான். நில்மாரும் ஃபாபியானோவும் ஸ்ட்ரைக்கர்கள். ஃபாபியானோ கையில் இன்றும் கடவுள் இறங்குவாரா?
இதுவரை ஆடாதவர்களுக்கு ஆட வாய்ப்பு என்றாலும் இரு அணிகளும் நிச்ச்சயம் ஜெயிக்கப் பார்க்கும்.
பிரேசில் முதல் ஆட்டத்தில் சுமாராக ஆடி இரண்டாவது ஆட்டத்தில் நன்றாக விளையாடியது. பழைய flair missing என்றாலும் effective-ஆக விளையாடுகிறது.
டியாகோ, டெக்கோ, ரொனால்டோ எல்லாரும் இருந்தும் போர்ச்சுகல் முதல் ஆட்டத்தில் சொதப்பியது. இரண்டாவது ஆட்டத்தில் கொரியாவை வறுத்தெடுத்து ஏழு கோல் போட்ட போதும், குரூப்பின் தலை அணி எனக் கருதும் அளவிற்கு ஆடவில்லை என்றுதான் தோன்றுகிறது.
2006-ல் நடந்த ஆட்டத்தில் பிரேசில் 6-2 என்று போர்ச்சுகலை வீழ்த்தியதை போர்ச்சுகல் மறந்திருக்காது. அதை சமன் செய்யவாவது வெறியுடன் ஆடும்.
பிரேசிலில் பிறந்த மூவர் போர்ச்சுகலுக்கு ஆடுகிறார்கள். பெப்பே, டெக்கோ இருவரும் பிரமாதமான ஆட்டக்காரர்கள். மூன்றாமவரான லிட்ஸன் விளையாடி நான் பார்த்ததில்லை. போர்ச்சுகலுக்கு அதிக அளவு பெற்றுத் தந்த கோச்சும் பிரேசில்காரர் ஸ்கொலாரிதான். 2002-ல் பிரேசிலை ஜெயிக்க வைத்த இவர் போர்ச்சுகலை 2004-ல் யூரோ கோப்பை இறுதி வரை இட்டுச் சென்றார். அதற்கு முக்கியக் காரணம், அவர் இறக்குமதி செய்த பிரேசில் ஆட்டக்காரர்களும்தான். (ஃபிகோ, கிரிஸ்டியானோ ரொனால்டோவும் அப்போது இருந்தனர்).
I’m all set for a cracker. Hope they don’t disappoint.
போர்ச்சுகல் காப்டன் ரொனால்டோவும் பிரேசில் காப்டனும் டாஸ் போட்டு முடித்தாயிற்று. ஆட்டத்தை பிரேசில் தொடங்கும்.
முதல் முயற்சியே கார்னரில் முடிகிறது. இரண்ஆவது நிமிடத்தில் இரண்டாவது கார்னர் பிரேசிலுக்கு.
இரண்டு கார்னரிலும் தேவையான trajectory இல்லை. சுலபமாய் தடுக்கிறது போர்ச்சுகல்.
மூன்றாவது நிமிடத்தில் கிரிஸ்டியான ரொனால்டோ முதன் முறையாய் பந்தை பிரேசில் அரைக்குள் கொண்டு செல்கிறார்.
பெப்பேயிடம் போன பாந்தை எடுக்க முயன்றி அவரைக் கீழே தள்ளுகிறார் ஃபாபியானோ. வார்த்தைகள் பரிமாறப்படுகின்றன. எதிர்பார்த்தபடி பிரேசிலில் பிறந்த வீரருக்கும் பிரேசில் ஆட்டக்காரர்களுக்கும் இடையில் பொறி பறக்க ஆரம்பித்துவிட்டது.
முதல் எட்டு நிமிடங்களில் தடுத்தாடும் போது மட்டுமே பந்து போர்ச்சுகலிடத்தில் உள்ளது. பிரேசில் அதிரடியாய்த் தாக்குகிறது. ஃபாபியானோ, நில்மார், ஆல்வ்ஸ் அனைவரும் முனைப்புடன் தாக்குகின்றனர்.
பிரேசில் defense-ல்interception துல்லியமாய், கவுண்டர் அட்டாக் செய்ய வசதியாய் உள்ளது.
ஃபாபியானோ பெப்பே மோதல் தொடர்கிறது. ரெஃரீ ஃபாபியானோவை புக் செய்கிறார்.
18-வதி நிமிடத்தில் முதல் meaningful attack from the Portuguese. இடது விங்கில Meireles-ன் நல்ல ரன்னைத் தொடர்ந்து பந்தை டி-க்கு வெளியில் கோலுக்கு நேராக காத்திருக்கும் டியாகோவை நோக்கி கிராஸ் செய்ய, டியாகோ பந்து தரையில் படுமுன் கோலடிக்க முயல்கிறார். Shot off target.
பிரேசிலிலும் அர்ஜெண்டினாவிலும் ஃபிளேயர்கள் மரத்தில் காய்க்கிறார்கள் போலும். தலைமுறை தலைமுறையாய் அற்புத ஆட்டக்காரர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர்.
Juan கையில் கடவுள் இறங்கியதால் மஞ்சள் அட்டை பெறுகிறார். ரொனால்டோவை குறி வைத்த நல்ல லாங் பாஸை கையால் தடுத்துள்ளார். ரெஃப்ரீக்கு நல்ல மூட். சில சமயம் இது போன்ற deliberate hand ball-க்கு ரெட் கார்டு கூட கிடைக்கும்.
நில்மார் ஸ்ட்ரைக்கர் என்றாலும் போர்ச்சுகல் வீரர்களுகு பின்னாலிருந்து வந்து பந்தைப் பிடிங்குவதில் வல்லவராயிருக்கிறார்.
முதல் அரையில் பாதி முடிந்துள்ள நிலையில் போர்ச்சுகல் ஒரு வழியாய் விழித்துக் கொண்டுள்ளது.
ஆல்வெஸ் ஒரு கார்னரைக் கூட ஒழுங்காக உதைக்கவில்லை.
30-வது நிமிடத்தில் முதல் shot on goal. ஃபாபியானோ பினல்டி பாக்ஸின் முனையில் இருந்து தனியாக விடப்பட்ட நில்மாருக்கு பாஸ் செய்ய, நில்மார் கோல் நோக்கி அடிக்கிறார். கோல்கீப்பரின் நல்ல ஸேவ் பந்தை திரிப்பினாலும், கோல்போஸ்டே பிரேசிலுக்கு கோலை மறுக்கிறது.
போர்ச்சுகலின் tackle கொஞ்சம் கரடுமுரடாய் இருக்கிறது. தொடர்ந்தால் ரெட் கார்டு நிச்சயம்.
மற்றொரு ஆட்டத்தில் ஐவரி கோஸ்ட் 2-0 என்று முன்னணியில். இன்னும் 5-6 கோல் போட்டு போர்ச்சுகலும் தோற்றால் அவர்கள் அடுத்த சுற்றுக்குச் முன்னேறக் கூடும்.
39-வது நிமிடத்தில் இன்னொரு வாய்ப்பு. Maicon-ன் துல்லியமான கிராஸை ஃபாபியானோவின் ஹெட்டர் தரையில் பட்டு ஃபார் போச்டுக்கு சற்றே வெளியே செல்கிறது.’
பெப்பேவுக்கு முன்பே கிடைத்திருக்க வேண்டிய மஞ்சள் அட்டை இப்போது கிடைக்கிறது.
பிரேசில் இதுவரை பத்து shots on goal அடித்துள்ளது. போர்ச்சுகலோ 5 அடித்துள்ளது.
இஞ்சரி டைமில் இன்னொரு கார்னர் பிரேசிலுக்கு. கார்னரைத் தடுத்து போர்ச்சுகல் கவுண்டர் அட்டாக். டானியின் நல்ல ஓட்டம் பந்தை ரை விங்கில் இருக்கும் கிரிஸ்டியானோ ரொனால்டோவுக்கு அளிக்கிறது. இன்னொரு லாங் ரேஞ்ச் முயற்சி வீணாகிறது.
It is half time and it is still 0-0.
பிரேஸிலுக்கு நில்மாரும், போர்ச்சுகலுக்கு கீப்பர் எடுவர்டோவும் சிறப்பாக விளையாடியுள்ளனர்.
இதுவரை 67% பொஸஷன் பிரேசிலிடம். போர்ச்சுகல் அடுத்த அரையிலும் இது போலவே ஆடினால் தோற்க வாய்ப்புகள் அதிகம்.
ஃபெலிபோ மெலோ பெப்பேயை பழி வாங்குகிறேன் பேர்வழி என்று மஞ்சள் அட்டை பெறுகிறார். Such tackles happen in ice hockey என்கிறார் commentator. இதனைக் கவனித்த பிரேசில் கோச் டுங்கா உடனே மெலோவை பெஞ்சுக்கு அழைக்கிறார். அவருக்கு பதிலாய் Josue.
இதுவரை ஆட்டத்தில் ஏழு மஞ்சள் அட்டைகள் அளிக்கப்பட்டிருக்கின்றன.
ஐவரி கோஸ்ட் இன்னும் 5 கோல் போட்டு பிரேசில் 3 கோல் வித்தியாசத்தில் போர்ச்சுகலை வென்றால் போர்ச்சுகலும் போட்டியில் இருந்து வெளியேறும்.
ஹைலைட்ஸில் ஐவரி கோஸ்டில் இரண்டாவது கோலைக் காடீனார்கள். பினால்டி ஏரியாவுக்குள் வந்த பாலை டிரோபா வாங்கிய விதம் கிளாசிக். பிரமாதமான turn செய்து பந்தை அடித்தால் பந்து போஸ்டில் பட்டுத் தெரிக்கிறது. ரீபவுண்டில் வேறொருவர் கோல் அடிக்கிறார்.
இரண்டாவது பாதியில் ரொபினோ வந்தால் நன்றாக இருக்கும். ஆசை யாரை விட்டது:-)
இரண்டாவது பாதி தொடக்கத்துக்கு முன் கையை நிறைய ஆட்டி ஆட்டி ரெஃப்ரீயுடன் கதைக்கிறார் ரொனால்டோ.
Through ball வரும்போதெல்லாம் ரொனால்டோவின் சிறத்தைப் புலி விரட்டல் கண்கொள்ளாக் காட்சியாய் மலர்கிறது. 48-வது நிமிடத்தில் அப்படியொரு ஓட்டம் கோலாகாமல் பிரேசில் தற்காப்பாளர் தடுக்கிறார். பிரேசிலுக்கே கேப்டனாயிற்றே அவ்வளவு லேசில் விட்டுவிடுவாரா என்ன?
இடைவேளை டென்ஷனைக் குறைத்திருக்க வேண்டும். இதுவரை கண்மூடித்தனமான tackle இல்லை என்று தட்டச்சும் போதே டியாகோ வீழ்த்தப்படுகிறார்.
பந்து சரியில்லை என்று பலர் முறையிடுவது சரிதான் போலும். நேற்று ஜப்பான் அடித்த கோல்களைத் தவிர, ஃப்ரீ கிக்கில் கோல் ஏதும் இதுவரை விழவில்லை. Banana kick இல்லையெனில் கால்பந்தின் சுவாரஸ்யம் கணிசமாகக் குறைகிறது.
First Portugal substituition. Duda-க்கு பதிலாக அனுபவசாலி Simao.
60-வது நிமிடத்தில்போர்ச்சுகலின் பிரமாதமான முயற்சி . ரொனால்டு இன்னொரு முறை நாலு கால் பாய்ச்சலில் பிரேசில் வீரர்களை ஏய்த்த வண்ணம் கோல் நோக்கி வருகிறார். மீண்டு லூசியோ குறுக்கே வந்து தடுக்க பந்து கோலின் வலப்புறத்திலிருந்து இடப்புறத்துக்கு சொல்கிறது. பந்தை கோல்கீப்பருக்கு முன்னால் அடையும் Meireles கோலுக்கு சில செண்டி மீட்டர்கள் தள்ளி அடிக்கிறார். அடித்த வேகத்தில் அவரருகில் இருக்கும் கோல்கீப்பரின் முதுகில் கால் பதிக்கிறார்.
ஜூலியோ சிஸார் வலியில் துடித்து பிரேசில் வயிற்றில் புளியைக் கரைக்கிறார். கோச் டுங்கா கவலையில். நல்ல காலம் சமாளித்துக் கொண்டிவிட்டார் கோல்கீப்பர். பெரிய அடியாய் இருந்தால் அது பிரேசிலுக்கு பெரும் நஷ்டம்.
இரண்டாம் பாதியில் போர்ச்சுகலின் கை ஓங்கியுள்ளது. முதல் பாதியில் தெரிந்த துல்லியமும் வேகமும் பிரேசிலிடம் தற்சமயம் மிஸ்ஸிங்.
ரொமாரியோ, பெபெடோ, ரொனால்டோ, ரொனால்டினோ, ரிவால்டோ காலம் எல்லாம் மலையேறி போச்சு. பிரேசிலின் samba flair மருந்துக்கும் இல்லை. இன்னும் இரண்டு உலகக் கோப்பை கடந்தால் இவர்களும் ஜெர்மனி போல லாங் பாஸ் செய்து எதிரி அசரும் போது கோல் அடிப்பார்களாகயிருக்கும்.
டிராவானாலும் பரவாயில்லை என்ற இரு அணிகளும் ஆடுகின்றன. ஜெயித்தாக வேண்டும் என்ற வெறி இல்லை.
77-வது நிமிடத்தில் இன்னொரு half chance. ரொனால்டோவின் on-the-fly முயற்சி கோலுக்கு மேல் செல்கிறது.
டுங்கா பொறுமையிழந்தவராய் தெரிகிறார். Rightly so. கடுப்பு முற்றி ரொபினோவை அனுப்பினால் நன்றாக இருக்கும்:-)
பிரேசிலின் டிஃபன்ஸும் ஸ்ட்ரைகக்ர்களும் சிறப்பாக இருக்கும் அளவிற்கு மிட்ஃபீல்ட் சிறப்பாக இல்லை. ஸ்ட்ரைக்கர்களுக்கு சாதகமான களன்களை உருவாக்குவதில் தோல்வியே அடைந்திருக்கின்றனர். காகா போன்ற play maker is missed desperately.
Baptista-க்கு பதில் Remires. இவராவது மிட்ஃபீல்டை கலக்குவாரா?
கடைசி 5 நிமிடங்களுக்கு Grafite-க்கு வாய்ப்பளிக்கிறார் டுங்கா. ஃபாபியானோ பெஞ்சில்.
88-வது நிமிடத்தில் லூசியோவின் ஹெட்டர் நேராக கோல்கீப்பர் கைக்குச் செல்கிறது.
இறு அணிகளின் ஆட்டக்காரர்களும் மனதளவில் டிரா என்று முடிவு செய்துவிட்டதாய்த் தோன்றுகிறது.
ஐவரி கோஸ்ட் 3-0 என்று முன்னணியில். இஞ்சரி டைமில் ஆறு கோல் அடித்தால் அடுத்த சுற்றுக்குச் செல்லலாம்:-)
பிரேசில் இஞ்சரி டைம் ஐந்து நிமிடத்தில் ஆறு கோல் போட்டாலும் ஐவரி கோஸ்ட் அடுத்டஹ் சுற்றுக்குச் செல்லும்:-)
Remires-ன் outside the penalty box-ல் இருந்து செய்யப்பட்ட முயற்சி போர்ச்சுகல் வீரர் மேல் பட்டு கோல் நோக்கி பறக்க, கோல்கீப்பரும் பறந்து acrobatic save செய்கிறார்.
கடைசி இரண்டு நிமிடங்கள். பிரேசில் தற்காப்பில் பெனால்டி பாக்ஸில் தவறீழைக்க டானி கோலடிக்க விரைகிறார். கோல்கீப்பர் விழ, டானி விழ, பந்து சமர்த்தாய் வெளியே செல்கிறது.
கோலடிக்க கடைசி வாய்ப்பு. போர்ச்சுகலுக்கு கார்னர். பிரேசில் வீரர் தலையால் பந்தைபெனால்டி பாக்ஸிலிருந்து வெளியேற்றுகிறார்.
It is all over. Brazil tops the group.
இதுவரை போர்ச்சுகலுக்கு எதிராக யாரும் கோலடிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.
இடைவேளையின் போது, “ஆணியே புடுங்க வேண்டாம். இன்னொரு கார்டை வாங்கி அடுத்த ஆட்டத்தில் ஆட முடியாமல் ஆகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்”, என்று அணியின் கோச்களும் சொல்லியிருக்க வேண்டும். இரண்டாவது அரையில் ஒரு மஞ்ச்ள் அட்டை கூட இல்லை.
கடைசி குரூப்பில் கடைசி இரு ஆட்டங்கள் நள்ளிரவில். சாம்பியன் ஆகும் என்று நினைத்த ஸ்பெய்ன் வெளியிறவும் வாய்ப்புண்டு.
ஸ்விட்சர்லாந்து, சிலி, ஸ்பெய்ன் மூன்றுமே ஜெயிக்கத்தான் பார்க்கும். பிரேசில்-போர்ச்சுகல் ஆட்டத்தை விட நிச்சயம் சுவாரஸ்யமாக இருக்கும். இல்லையென்றால் மட்டும் பார்க்காமலா இருக்கப் போகிறோம்.
வேலை முடிந்து வந்ததில் இருந்து கொலை பசி. முதலில் அதைப் பார்க்கிறேன்.
பதிவினைத் தொடரும் அனைவருக்கும் நன்றி. (என்னமோ ஆயிரக் கணக்குல படிக்கிறா மாதிரி இந்த டயலாக் வேற:-))
ஜூன் 24, 2010
Posted by Lalitharam under
டென்னிஸ்,
விம்பிள்டன் 1 Comment
இன்றும் ஒரு மணி நேரம்தான் விம்பிள்டன்.

espn360-ல் live streaming உண்டாம். முயன்று பார்க்க வேண்டும்.
நடால் 2008-ல் பட்டம் வென்றார். ஃபெடரரை வெல்ல அவர் ஆடிய ஆட்டம்தான் best ever wimbledon final என்று பலர் கருதுகின்றனர்.
போன வருடம் பாவம் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அவரது கால் இஞ்சரி பழி வாங்கியது.
இம்முறை முதல் ரவுண்டில் சுலபமாக ஜெயித்தாலும் இரண்டாவது ரவுண்டில் 1-2 என்று trailing. நாலாவது செட்டில் நன்றாக ஆடி 4-0 என்று முன்னிலையில் உள்ளார்.
நடால் நன்றாக விளையாடினாலும் பழைய zip missing. நிறைய தவறு செய்கிறார். தொடர்ந்து இப்படியே விளையாடினால் பட்டம் வெல்வது கடினம்.
கடைசி செட்டில் யார் நிதானத்தோடு ஆடுகிறார்களோ அவருக்கே வெற்றி கிடைக்கும்.
நடால் நிறைய பார்த்தவர். அதனால் ஜெயித்துவிடுவார் என்றே நினைக்கிறேன்.
Update: எதிர்பார்த்தபடியே நடால் ஐந்தாவது செட்டை 6-3 என்று வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மாயாண்டியின் (அதுதானே அந்தம்மா பேரு;-)) பேத்தலைக் காட்டுவதற்கு பதிலாக நடால் வெற்றியை ஸ்டார் ஸ்போர்ட்ஸில் காட்டியிருக்கலாம்.
ஜூன் 24, 2010
வீட்டுக்கு வருவதற்குள் 70 நிமிடங்கள் ஆட்டம் ஓவர்.
ஸ்லோவாகியா முன்னணியில். 1-0.
நான் தட்டச்சும் வேளையில் இன்னொரு கோல். It is 2-0. Clinical Close range Goal.
இத்தாலி இன்னும் 18 நிமிடங்கள்தான் உலகச் சாம்பியன்.
இத்தாலியின் சாம்பியன் வாழ்க்கையில் கடைசி 3 நிமிடங்கள்.
கோச் மார்ஸெல்லோ லிப்பியின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கிறது.
ஸ்லோவாகியா ஆட்டத்தின் வேகத்தைக் குறைத்து நேரத்தைக் கடத்தி வெறுப்பேற்றுகிறார். Itz adding insult to injury! I’m luvin it:-)
எனக்கு பிடிக்காது அணிகளுள் இத்தாலிக்கு முதல் இடம்.
தற்காப்பு மட்டுமே ஆடும் மொக்கை கேம்.
என்ன செய்தாலும் தப்பி நம்மை எரிச்சலூட்டும் கரப்பான்பூச்சி போல் எதோ செய்து முன்னேறுவதே இவ்வணியின் தனிச் சிறப்பு.
இவர்கள் வீழ்வதால் உலகக் கோப்பையில் சுவாரஸ்யம் கூடும்.
81-வது நிமிடிடத்தில் டி நாடாலே இத்தாலிக்கு கோலடிக்கிறார். நல்ல கோல்.
கோல் அடித்தது ஆனதும் பாலை எடுக்க ஸ்லோவாக்கிய கோல்கீப்பரருக்கும் கொண்டாட நினைக்கும் இத்தாலிய வீரருக்கும் போட்டி கிட்டத்டஹ்ட்ட கைகலப்பில் முடிகிறது. கோல்கீப்பர் கை மேலே பட்டதற்கே இருபுக் கட்டையால் மண்டையால் அடித்தது போல ரியாக்ஷன் கொடுக்கிறார் இத்தாலிய வீரர். ரெஃப்ரீ இருவரையும் புக் செய்கிறார்.
இத்தாலிக்கு கரப்பான்பூச்சி மச்சம் மீண்டும் வேலை செய்யுமா?
Goooooooooooooaaaaaaaaaaaaaal!
Well….almost.
குவாகியரெல்லா பந்தை வலையில் தள்ளி கொண்டாடப் போகும் முன், லைன்ஸ்மென் அவரை ஆஃப்சைட் என்று அறிவித்து கோலை ரத்து செய்கிறார்.
இத்தாலி வீரர்கள் பரபரப்பில் நன்றாக விளையாடுகிறார்கள். ஸ்லோவாகிய வீரர்களும் பரபரப்பாக ஆடுகிறார்கள். ஆனால் அதுவே அவர்களுக்கு பாதகமாய் அமைகிறது.
This is a cracker of a game.
இத்தாலியர்கள் எல்லாம் கோல் அடிப்பதில் முனைப்பாக இருக்க டிஃபென்ஸில் ஆளில்லை. இத்தாலி காப்டன் காலிப் பெருங்காய டப்பா. போன உலகக் கோப்பையில் அவரைத் தாண்டி பந்து செல்லா வண்ணம் பெருஞ்சுவராய் இருந்தார். இந்த வருடம் தூணாய் மாறி வேடிக்கை பார்க்கிறார். டிஃபெண்டர்கள் அமைதியாக வேடிக்கை பார்க்க, முன்னே வந்த கோல்கீப்பரின் தலைக்கும் மேல் லாவகமாய் பந்தைச் செலுத்தி 3-1 என்று ஸ்கோரை ஆக்குகிறார் கோபுனெக்.
இஞ்சரி டைமில் இத்தாலி இன்னொரு கோல் அடிக்கிறது. இன்னும் 2 நிமிடங்கள். இத்தாலி சமன் செய்யுமா?
குவாக்லியரெல்லாவின் கோல் டி-க்கு வெளியில் இருந்து கோலின் மேல் முனையில் சென்று வீழ்ந்தது. பிர்ஷர் சிசுவேஷனில் அற்புதமான கோல்.
கடைசி நிமிடம். ஸ்லோவாகிய ஆளை மாற்றி நேரத்தை வீணாக்க முயல்கிறது.
இத்தாலிக்கு கடைஈஈஈஈஈஈஈஈசி வாய்ப்பு.
throw-in டி-வரை வருகிறது. தலையால் பந்தைத் திருப்ப, பெப்பெ துல்லியமாய் தட்டினால் 3-3 ஆகிவிடும். பெப்பேவுக்கு பெப்பே என்றுவிட்டார் ஸ்லோவாக்கிய தற்காப்பாளர்.
It is all over for Italy.
Good bye Ex-Champs!!!!!!!!!!!!
பராகுவேயும் ஸ்லோவாகியாவும் அடுத்த சுற்றுக்குள் நுழைகின்றன.
நியூசிலாந்து பாவம். ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல் வெளியேறுகிறது. (ஒரு ஆட்டத்திலும் ஜெயிக்கவில்லை என்பது வேறு விஷயம்)
ஃபுட்பாலைப் பார்த்திவிட்டு சானலை மாற்றினால் நியோவில் இந்தியா ஆடுகிறது. ஒரு பந்துக்கும் இன்னொரு பந்துக்கும் இவ்வளவு நேரமா? ஏன் இந்த ஆட்டம் இவ்வளவு மெதுவாகச் செல்கிறது என்று தோன்றுகிறது.
:-)
ஜூன் 24, 2010
ஸ்டார் ஸ்போர்ட்ஸ், ஈ.எஸ்.பி.என் இரண்டிலும் கால்பந்து ஒளிபரப்பு என்பதால் இரண்டு ஆட்டங்களுக்கு இடைப்பட்ட நேரத்தில் விம்பிள்டன் காட்டினார்கள். அவர்கள் காட்டிய நேரத்தில் ஃபெடரர் ஆடியது, அவர் ரசிகர்களின் அதிர்ஷ்டம்.
இரண்டாவது சுற்றில் முதல் செட்டை ஃபெடரர் வென்றிருந்தார். இரண்டாவதில் சமநிலை.
Bozoljac (இதைத் தமிழில் எழுத நான் தயாராக இல்லை) நல்ல உயரம். சர்வீஸில் நல்ல வேகம். சரிமரியாய் ஏஸ் தொடுத்த வண்ணம் இருந்தார். ஃபெடரரும் தன் பங்குக்கு அற்புதமான சர்வ் செய்து வந்தார். ஒவ்வொரு கேமும் 3 நிமிடங்களுக்குள் முடிந்தது.
ஒரு கட்டத்தில் கோரான் இவானிசிவிச்சும் பீட் சாம்பிராஸும் ஆடிய ஆட்டங்களை நினைவு படுத்திய வகையில் இருவரும் ஆடினர். இரண்டாவது செட் டை ப்ரேக்கில் ஃபெடரரின் சிறு தவறு செட்டை எதிராளிக்குக் கொடுத்தது.
ஃபெடரருக்குதான் ஜெயிப்பதைப் பற்றிய கவலை. எதிராளிக்கோ முடியைக் கட்டி மலையை இழுப்பது போலத்தான். போனால் ம….ப் போச்சு என்று இருந்துவிடலாம்.
அடுத்த செட்டில் ஃபெடரருக்கு அதிர்ஷ்டம். பிரேக் பாயிண்டில் டபிள் ஃபால்ட் போட்டு செட்டை தாரை வார்த்தார் Bozoljac. ஆட்டம் முடிவதற்குள் கால்பந்துக்கு தாவிவிட்டனர் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மஹானுபாவர்கள். அடுத்த செட்டும் சமநிலை தொடர்ந்து டை பிரேக்கில் Bozoljac-ன் சிறு பிழையால் ஃபெடரர் வென்றதை இணைய வழி அறிந்து கொண்டேன்.
Bozoljac போன்ற Serve and Volley Player-ஐப் பார்த்து ரொம்ப நாள் ஆகிவிட்டது. பெக்கர், எட்பர்க், சாம்பிராஸ் என்று நெட் கேமில் கலக்கிய சாம்பியன்கள் எல்லாம் இனிமேல் வர வாய்ப்பில்லை என்றுதான் நினைக்கிறேன். பந்துகளின் வேகமும், தரையில் வேகமும் கணிசமாக குறைக்கப்பட்டு பேஸ்லைன் ஆட்டக்காரர்களுக்கு சாதகமாகவே டென்னிஸ் மாறிவிட்டது. 20-20-யின் வருகைக்குப் பின் இன்னொரு லட்சுமண் போன்ற வீரர் இந்தியாவில் உருவாக முடியுமா என்பது பெரிய கேள்விக் குறி என்பது போலத்தான் இதுவும். (கிரிக்கெட் தவிர என்று பேர் வைத்தாலும், சமயத்தில் சில விஷயங்களை விளக்க கிரிக்கட்டை விலக்க முடியாமல் போய்விடுகிறது:-))
முதல் ரவுண்டில் ஃபெடரரின் பேக்ஹாண்டும், டிராப் ஷாட்டும் காணக் கிடைத்தன என்றால் இரண்டாவது ரவுண்டில் அவரது துல்லியமான சர்வீஸ் காணக்கிடைத்தது.
பொதுவாக ஃபெடரரின் ஆட்டம் சிறந்த நிலையில் உள்ளது. நடால், முர்ரே, ராடிக் ஆகியோரும் சிறப்பாகவே ஆடுகின்றனர். இன்னொரு நல்ல விம்பிள்டன் இந்த வருடமும் காத்திருக்கிறது. (Mahut-Isner ஆட்டம் முடியும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். அது முடியாவிடில் இந்த வருட சாம்பியன்ஷிப்பே அம்பேல் ஆகிவிடும்:-))
கால்பந்து ஆட்டத்தின் போதும் ஃபெடரர் ஆட்டங்களை தடையில்லாமல் காண வழி உண்டா?
அடுத்த
அடுத்த பக்கம் »